Follow by Email

Wednesday, June 23, 2021

அன்னப் பறவைகளும் குஞ்சுகளும்


Geese Parade.

18 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான காணொளிகள்.  முதல் காணொளியில் அந்த பயந்த பிள்ளை அவர்களுடன் சேரும் வரை டென்ஷனாக இருந்தது!!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
எத்தனை அழகு இல்லை இந்த அன்னங்களும் வாத்துகளும்!!
அம்மா அப்பா அன்னங்களுக்கு எவ்வளவு பொறுமை.
வான்னு அழைக்காத குறைதான்.
இனிமை. நன்றி மா.

KILLERGEE Devakottai said...

ரசனையான காட்சிகள் அம்மா.

KILLERGEE Devakottai said...

ரசனையான காட்சிகள் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

சில காணொளிகளை பார்த்ததில்லை... அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா மூன்றாவது காணொளி தவிர மத்ததெல்லாம் பாத்திருக்கிறேன்.

செம ரொம்ப ரசித்தேன் இப்பவும். முதல் காணொளி அந்த ஒரு குஞ்சு கொஞ்சம் பயந்து எங்கே குதிப்பதுன்னு பார்த்து அப்புறம் அழகா ஒரு தரைத்தளம் வரும் இடத்தில் இறங்கி குதிக்காமல் தண்ணீரில் அப்படியே போவது வரை முதல் முறை பார்த்தப்போ கொஞ்சம் டென்ஷன். குழந்தை அம்மாவோடு குடும்பத்தோடு சேர வேண்டுமேன்னு.

கோயில் திருவிழாவில் குழந்தை பிரிந்து போகாம இருக்கணும் என்பது போல!!!

என்ன ஒரு மார்ச் ஃபாஸ்ட் அந்த நடை அழகு!!! அன்னம் போல நடை நடந்து!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கடைசி காணொளியில் நான் ரொம்ப ரசிப்பேன் ஏகாந்தமா அன்னம் தண்ணீரில் நடக்க அந்தத் தண்ணீர் சலசலப்பில் தெரியும் வான் மேகம் கலைந்து கலைந்து என்ன அழகு!!! சினிமாவில் வரும் தேவலோகக் காட்சி போல!!!

கீதா

Geetha Sambasivam said...

கோமதி அரசுவும் இதே மாதிரிப் படங்களைப் பகிர்ந்திருக்காங்க. 2,3 பதிவுகளாக நீங்கள் இருவரும் ஒரே போல் பதிவுகள் பகிர்ந்து வருகிறீர்கள்.

கோமதி அரசு said...

நீங்கள் முதல் காணொளி முன்பே போட்டு இருக்கிறீர்கள். கடைசி குஞ்சு தண்ணீரில் இறங்கியதா என்று பார்க்கும் ஆவலை தூண்டிய காணொளி.

மற்ற காணொளிகளும் அருமை.
வாத்துக்கள் வரிசையாக இசை பின்னனியில் நடந்து போவது அழகோ அழகு.

கடைசி அன்னப்பறவை அழகு.

கோமதி அரசு said...

மரத்தின் நிழல், வெண்மேகம் நீரில் தெரிவது அழகு. நீரிலிருந்து வெளியே வந்து உடலை சுத்தம் செய்வதும் பறவைகளின் ஒலியும் அருமை. கடைசியில் எத்தனை அன்னப்பறவைகள்! அழகு.

மாதேவி said...

பார்த்து மகிழ்ந்தேன்.ரசனை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
மிக நன்றி மா. இயற்கை தான் எத்தனை
அழகு இல்லையாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் ,
வந்து கண்டு ,கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
நினைத்தேன், அனேகமாக எல்லோரும்
கண்டிருக்கும் யூடியூப் காட்சிகள் தான்.
இருந்தும் வந்து ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி மா.
எனக்கும் இந்த ,அன்னம் குஞ்சுகள், வாத்து பரேட்
எல்லாம் இங்கேயும் பார்க்கும் போது மனம் எல்லாம்
உற்சாகமாக இருக்கும்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அந்தத் தனி அன்னக் காட்சிகளை எப்படிப் படம் எடுத்தார்களோ. நீங்கள் ரசித்திருக்கும் அழகே அலாதி. எனக்கும் ஒரு வீக்னஸ் இந்த அன்னங்கள்.
நன்றி ராஜா சின்ன கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. இப்போதெல்லாம்
நாலைந்து நாட்களுக்கு
ஷெட்யூல் செய்து வைத்துவிடுகிறேன்.
அது நம் கோமதியின் பதிவோடு இணைந்து விட்டது.
சரியாகச் சொன்னீர்கள். நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. தாங்கள் பகிர்ந்த அன்னப்பறவைகளின் காணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளன. முதல் வீடியோவில் தன் குஞ்சுகளை அந்த தாயும்,தந்தையுமான அன்னப்பறவைகள் எத்தனை கவனமாக கூடவே இருந்து தண்ணீரில் இறக்கிப் பழக்குகின்றன. பொறுப்புணர்ச்சியை இவைதான் முதலில் கற்றுக் கொண்டோதோ என வியக்க வைக்கிறது.

இரண்டாவது வீடியோவில் அன்னப்பறவைகள் பாடிக் கொண்டே செல்பவரின் பின் வரிசையாக கம்பீரமாக நடந்து செல்வது நன்றாக உள்ளது.கடைசி வீடியோவும் இயற்கைகளுடன் இணைந்து கண்ணுக்கு குளிர்வாக உள்ளது. அனைத்தையும் பார்த்து ரசித்தேன். அனைத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம்.
இந்தப் பொறுப்புணர்ச்சியும் பொறுமையும்
என்னையும் அசர வைத்தன.
நாமாயிருந்தால் கூட ஒரு அதட்டல் செய்வோம்.
கவலையினால் அது வரும்.
உலகத் தாய் தந்தையரிலேயே இந்தப் பறவைகளுக்குத் தான் முதல் இடம்
கொடுக்க வேண்டும் போல இருக்கிறது.

எத்தனை கரிசனம். பொறுமையாக வழி நடத்தும் பெரியவர்கள். தாங்களும் ரசித்துச் சொன்னதற்கு மிக நன்றி மா.

The Secret Language of Trees