Blog Archive

Thursday, June 24, 2021

சிங்கம் பாடல்கள் சில....


வாழ்வின் சில நிகழ்ச்சிகள் அவரைப் பாதிக்கும் போது ஜிம் ரீவ்ஸ்
கேட்பார்.
பிறகு சந்தோஷம் தான். 

அவர் கேட்கும் பாடல்களிலிருந்து 
அது என்ன என்று தெரியும். 
அதுவும் இல்லை என்றால் 
என்னைப் பாடச் சொல்லி உறங்குவார்.

நல்ல மனிதருக்கு நன்றி.

10 comments:

ஸ்ரீராம். said...

//அதுவும் இல்லை என்றால் என்னைப் பாடச் சொல்லி உறங்குவார்.//

அடடே...   என்னென்ன பாடல்கள் பாடுவீர்கள்?  ஆங்கிலப் பாடல்களுமா? 

கோமதி அரசு said...

சாருக்கு பிடித்த பாடல்கள் நன்றாக இருக்கிறது.

இசை பிரியர்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் இசைதான்.
உங்களைப் பாடச் சொல்லி கேட்டு உறங்குவது அருமை.

அக்கா உங்கள் குரல் இனிமை உறக்கம் கொடுக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Geetha Sambasivam said...

உங்கள் குரலை எ/பியில் தான் முதல் முதலாக நான் கேட்டேன். நான் 2 முறை பாடச் சொன்னப்போ மாட்டேன்னு மறுத்துட்டீங்க! :( நேரில் கேட்டதே இல்லை. மென்மையும் இனிமையும் கலந்த குரல்.

Thulasidharan V Thillaiakathu said...

முன்னரே சொல்லிருப்பதுபடி ஆங்கிலப்பாடல்கள் உங்கள் மூலம் தான் கேட்கிறேன் அம்மா .

நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் எங்கள் பள்ளி கல்லூரி நினைவு வந்துவிடும். அங்கு இப்படியான பாடல்கள் தான் ஏதேனும் நிகழ்வு என்றால் போடுவார்கள்.

ஆனால் எதுவுமே நினைவில் இருந்ததில்லை. பழக்கம் இல்லாததால். ட்யூன் மட்டும் நினைவு இருக்கும்!

பிச் மாறும் இடம் எனக்கு எப்பவுமே ரொம்பப் பிடிக்கும். ஏ ஆர் ரஹ்மான் சில பாடல்களில் அப்படிப் போட்டிருப்பார்.

அப்பா உங்களைப் பாடச் சொல்லிக் கேட்பது ஆஹா!! அன்பான மகிழ்வான நினைவுகள்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

நான் கூட ஏன்பா, சோகப்பாட்டு கேட்கிறீர்கள் என்று
அலுத்துக் கொள்வேன்.
சிரித்து விடுவார்.

எங்களுக்குப் பிடித்த பல இந்திப் பாடல்கள், தமிழ்
நானே வருவேன், ஒரு நாள் யாரோ. உன்னை ஒன்று கேட்பேன்...
ஆங்கிலத்திலும் தான் கே சரா சரா.
நெவர் ஆன் அ சண்டே என்ற பாட்டு.

Where do I begin , love story song.
ஆஜா ஆயி பஹார் தில் சே.... இப்படி நீளும் பட்டியல்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். குரல்வளம் அப்போது இருந்தது.
பாடாமல் விட்டதால் இப்போது
நலம் குறைந்து விட்டது.
அக்காவின் குரல் மேல் உங்களுக்குத் தான் எத்தனை
நம்பிக்கை. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பின் ஜெயக்குமார்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
குரல் இப்போ சரியாக இல்லையே அம்மா!!
நேர்காணலில் என் குரல் பிசிறடித்து ஒலித்ததே மா.
நீங்கள் கேட்டு நான் பாடவில்லையா?
இது எப்போ. ஒன்றுமே நினைவில் இல்லைப்பா.
ஸாரி.
எப்பவாவது நேரில் பார்ப்போம். நல்ல வென்னீர் குடித்து விட்டுப்
பாடுகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

இசை எந்த மொழியில் இருந்தாலும் நம் மனதைத் தொட்டால் பிடித்துவிடும்
இல்லையாமா.

இசையே மருந்து என்றுதானே நாம்
அறிகிறோம்.
வித்தியாசமான இசை,பிட்ச் மாறி, ராகம் மாறி
கேட்கும்போது தனி உற்சாகம்
கிடைக்கும் தான். உங்கள் குரல் இனிமையை
நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

ஆமாம், அப்பாவுக்கு ரொம்பக் களைப்பாக இருந்தால்
என்னைப் பாடச் சொல்லிக் குழந்தைகளோடு கேட்டூ
மகிழ்வார்.
ரசித்ததற்கு மிக நன்றிமா.