Blog Archive

Friday, June 25, 2021

ஏ எம் ராஜா , சுசீலா அம்மா பாடல்கள்.




ஏ.எம் . ராஜா பாடல்களில் டைரக்டர் ஸ்ரீதர் 
படங்கள்  மெருகேற்றிய  வண்ணங்களில் 
 மின்னின.

ராஜாவும் ஜிக்கியும்  சேர்ந்த பாடல்கள்
மிகப் பிரபலம் அடைந்தன.
மல்லிகா,அவன், ஆசை  என்று வரிசையாகப்
படங்கள்.

எல்லாமே ஜெமினிகணேசன் பத்மினி 
சேர்ந்து நடித்த  திரைப்படங்கள்.இந்தித் திரைப்பட நாயகன் திரு ராஜ்கபூர் அவர்களால் அழைக்கப்
பட்டு, அவருடைய இந்தப் பாடல்களைத் தமிழ் தெலுங்கில் பாடியதாக
நினைவு.

அவருடைய சம்சாரம்  படப்பாடல்,மீண்ட சொர்கம்படத்தின்
துயிலாத பெண்
ஒன்று கண்டேன். இவற்றுடன் 'செந்தாமரையே செந்தேன் மலரே'

இவை எல்லாம் மிகச் சிறந்த பாடல்.

'

பிறகு ''எதிர்பாராதது'' வந்தது.
ராஜாவின் இசையில் இந்திப்பட  டியூன் இருக்கும்.
கல்யாண பரிசு  ஒரிஜினல் இசை.
கல்யாணப் பரிசு என்று எழுதக் கூடாது.
ஏழு எழுத்துகள் தான் ஒரு படத்தின் பெயருக்கு
இருக்க வேண்டும். இதெல்லாம் அந்தக்கால 'பேசும் படம் 'பத்திரிக்கையில்
வந்த விஷயங்கள்.
பிறகு இந்த ஃபார்முலா மாறியதோ தெரியவில்லை. தேன் நிலவு,

விடிவெள்ளி, மீண்ட சொர்கம் என்று எத்தனையோ 
பிரபலமான பாடல்கள்.முக்கியமாகத் "துயிலாத பெண் ஒன்று கண்டேன்."


எத்தனையோ வேண்டாத செய்திகள் வந்தாலும் அவர் குரலைக் கேட்கும்போது அதெல்லாம் மறந்து விடும்.
எல்லா நடிகர்களுக்கும் அவர் பின்னணி பாடி இருக்கிறார்.
ராஜாவுக்கு என்றும் தனி இடம் தான்.




10 comments:

ஸ்ரீராம். said...

ஒரு எதிர்பாராத ஒற்றுமையாக நேற்று மதியம்தான் எம் ராஜாவின் சில பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன்.  செந்தாமரையே, முத்தாரமே, சின்னக்கண்ணனே, சின்னச்சின்னக் கண்ணிலே பாடல்கள்.  கொஞ்சம் பொய்க்குரல் போல தெரிந்தாலும் மிகவும் ரசிக்க வைக்கும் பாடல்கள்.  அவரின் இசை மேதைமையும் படித்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஆமாம், ஜெமினி கணேசனுக்கு மிகவும் பொருந்தும் குரல். தேன் நிலவு படப்பாடல்களை மறக்க முடியுமா? ஆனால் அவர் யாருடனும் ஒத்துப் போனதில்லை என்பார்கள். என்னவோ தெரியலை. கடைசியில் அவர் இறந்த விதம் தான் பல நாட்களுக்கு மனதை வருத்திக் கொண்டிருந்தது. :(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். அட நிஜமாவா..ஆமாம் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார்.எம் ஜி ஆருக்குக் கூடப் பாடி இருக்கிறாராம். சில paadalkal neengal சொன்ன மாதிரி இருக்கும். ரொம்ப ஃபிராங்க் ஆகப் பேசுவார் என்று சொல்வார்கள். நல்ல மேதைதான்.நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு Geethama.நல்ல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். மேதைகளுக்கு உண்டான சில எக்சென்றிக் நடத்தை இருந்தது போல இருக்கிறது. வெகு நாட்களுக்கு அவர் இறைவனை அடைந்த விதம் வருத்திக் கொண்டிருந்தது மா.பாவம். அவர் மனைவி ஜிக்கியும் நல்ல பொறுமையாக பாடுவார்.நாம் நல்லதையே நினைக்க வேண்டியதுதான்.

கோமதி அரசு said...

ஏ.எம் . ராஜா பாடல்கள் அனைத்தும் அருமையான தேர்வு.

//அவருடைய சம்சாரம் படப்பாடல்,மீண்ட சொர்கம்படத்தின்
துயிலாத பெண்
ஒன்று கண்டேன். இவற்றுடன் 'செந்தாமரையே செந்தேன் மலரே'

இவை எல்லாம் மிகச் சிறந்த பாடல்.//

ஆமாம்., எல்லாம் சிறந்த பாடல். துயிலாத பெண் ஒன்று கண்டேன் பிடித்த பாடல்.

'

திண்டுக்கல் தனபாலன் said...

கேட்டுக் கொண்டே இருக்கலாம்... அத்தனையும் இனிமையான பாடல்கள்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. பாடல்கள் தேன். ஏ.எம் ராஜா அவர்களின் குரலினிமை மயக்க வைப்பது. நடிகர் ஜெமினிக்கு அவரும், பி.பி ஸ்ரீநினிவாஸ் அவர்களும் பாடிய பழைய பாடல்கள் என்றுமே நம் மனதில் நிற்பவை. இன்றைய பகிர்வில் பி.சுசீலா அவர்களுடன் ஏ.எம்.ராஜா சேர்ந்து பாடிய பாடல்கள் அருமையாக உள்ளது. அவர் மனைவி ஜிக்கியுடன் சேர்ந்து பாடிய பாடல்களும் அருமையாகத்தான் இருக்கும். நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசித்தேன். பழைய பாடல்கள் என்றாலே,எந்த விரசமும் இல்லாத வரிகள்/காட்சிகள் என மனதை மயக்கும் அருமையான இசையுடன்/குரல்களுடன் கூடிய பாடல்கள் நம்மை போன்ற அனைவருக்குமே மிகவும் பிடித்தமானது. நல்ல நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

திருச்சி லோகனாதனுக்கு ஒரு குரல், டி எம் சௌந்தரராஜனுக்கு ஒரு குரல்,
பி பி ஸ்ரீனிவாஸ் பிரபலம் ஆகும் முன்,
ராஜாவின் ராஜ்யம் தான் காதல் பாடல்களுக்கு.

தனித்துவமான குரல். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
இனிய காலை வணக்கம் மா. ஆமாம் அன்றைய பாடல்கள்
அத்தனையும் இனிமை.
வந்து கேட்டதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம்.
ஜிக்கி அவர்களின் பாடலையும் பதியப்
போகிறேன். மயக்கும் மாலைப் பொழுதில்'
கேட்க வேண்டிய, துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள்
அவரது பாடல்கள்.
அந்தப் பெயருக்கே ஒரு தனி காந்தம்.

திண்டுக்கல்லில் எங்கள் வீட்டிலிருந்து நாலு இடம் தாண்டி
ஒரு இசைத்தட்டு விற்கும் கடை இருந்தது.
அதன் வாயிலில் ,அப்போதைய திரைப் பாடகர்கள் படங்கள்
மாட்டி இருக்கும்.
சுசீலாம்மா, டிஎம் எஸ், ஜானகிம்மா, ஜிக்கி
இவர்களது ஃபோட்டோக்களைப்பார்த்துக்
கொண்டே இருப்பேன்.
அவ்வளவு மோகம் பாடல்கள் மேல்.
நம் எல்லோருக்கும் இந்தப் பாடல்கள்
பிடிப்பதே நம் மன ஒற்றுமையைத் தான் காட்டுகிறது.
மிக மிக நன்றி மா.