ஏ.எம் ராஜா ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்
என்பதே எனக்கு வியப்பாக இருந்தது.
அவர் மனைவி ஜிக்கியின் குரலில் தமிழ் நல்
உச்சரிப்புடன் வெளிவந்தது.
பல மொழிகளிலும் பாடி இருக்கிறார்கள்.
விக்கி பீடியாவில் நிறைய செய்திகள் இன்று
படித்தேன். அவர் ஒரு பட்டதாரி என்பதெல்லாம்
தெரியாது.
ராஜாவின் இசை அமைப்பில் ஜிக்கியும் அவரும் சேர்ந்து பாடிய
பாடல்கள் எப்பொழுதும் இனிமை.
ஜிக்கி அவர்கள் தனியாகப்
பாடிப் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கின்றன.
8 comments:
இனிமை... இனிமை...
அருமையான பாடல்களை தேர்ந்தெடுள்ளீர்கள்! 'ஊரெங்கும் தேடினேன்' பாடல் மிகவும் இனிமையாக இருக்கும்.
ஜெமினிக்காக ஏ.எம்.ராஜா பாடிய ' தனிமையிலே இனிமை காண முடியுமா\ பாடலும் சிவாஜிக்காக ஏ.எம்.ராஜா படிய 'சிற்பி செதுக்காத பொற்சிலையே' பாடலும் எம்.ஜி.ஆருக்காக ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய ' மயக்கும் மாலை பொழுதே' பாடலும் தான் என் all time favourites!!!
அதுவும் இந்த மயக்கும் மாலை' பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் ஒருவரையொருவர் நேசித்து மணந்த அன்று முழுவதும் சிலோன் ரேடியோவில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பினார்களாம்! என் அக்கா சொல்லியிருக்கிறார்.
நன்றி நன்றி. அன்பு தனபாலன்.
அன்பின் மனோ,
எதை எடுப்பது எதை விடுப்பது என்று
தெரியவில்லை:)
ஜிக்கியின் 'கண்ணில்வந்து மின்னல் போல் காணுதே'
பாடலும் மிக இனிமை.
ராஜாவின் 'காதலிலே தோல்வியுற்றான்'
கேட்டு கண்ணீர் விடாதவர்கள் அப்போது
கிடையாது.
'யார் பையன் படத்தின் வாசமிகு மலர்ச்சோலையிலே'
இன்னோரு பாடல்.
லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
என்னைப்போல் இங்கு அனேகம் ரசிகர்கள்.
அறிய மகிழ்ச்சி மா.
வணக்கம் சகோதரி
இன்றும் அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.கடைசி பாடல் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. இன்று கேட்டு மகிழ்ந்தேன்.நீங்கள் சொல்வது போல் ஏ.எம் ராஜா, ஜிக்கியின் இனிமையான பாடல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையுமே இனிமைதான். இத்தகைய இனிமையான பாடல்களை பாடிய பாடகர்களை நமக்கு தந்த இறைவனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகா திறமைசாலி என்று நானும் அவர் பற்றிய விவங்களைப் பார்த்தபோது தெரிந்துகொண்டேன். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். உடை அப்ற்றி ஸ்ரீதர் யாரையோ அடித்த கமெண்ட் இவரை பாதித்துவிட இருவரும் பிரிந்ததாகப் படித்த ஞாபகம். வெள்ளி விடியோவில் பகிர்ந்திருந்தேன்!
மகா திறமைசாலி என்று நானும் அவர் பற்றிய விவங்களைப் பார்த்தபோது தெரிந்துகொண்டேன். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். உடை அப்ற்றி ஸ்ரீதர் யாரையோ அடித்த கமெண்ட் இவரை பாதித்துவிட இருவரும் பிரிந்ததாகப் படித்த ஞாபகம். வெள்ளி விடியோவில் பகிர்ந்திருந்தேன்!
ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் அருமையான ஜோடிகள். எனக்கு ரொம்பப் பிடித்த குரல்வளம் கொண்ட திறமைசாலிகள். ஆனால் சோபிக்கவே இல்லை. எதைக் காரணம் சொல்ல முடியும்! கடைசி வீடியோ மட்டும் எனக்கு வரவே இல்லை. :( பின்னர் வந்து பார்க்கணும்.
Post a Comment