2015 என்று நினைக்கிறேன். சூரிக் விமான நிலையத்தில்
எஸ்கலேட்டரில் விழுந்து தலை அடிபட்டதில்
இருந்து
மீண்டும் அதில் ஏறி மேல் தளத்துக்கு செல்வதில்
அபரிமிதமான பயம் இருந்தது.
அங்கே என் வார்த்தையை மகன் மட்டும் நம்பினான்.
உடனே இரண்டு வலி மருந்துகள் கொடுத்து
சிகாகோ வந்து சேர்ந்தோம்..
இங்கே ஸ்கான் செய்து, பெரிய பாதிப்பு இல்லை என்றாலும்
மூன்று மாதங்கள் திரும்பக் கூட முடியாமல்
இடுப்புப்
பகுதி வலித்தது இன்னும் நினைவில்.
இப்போதுதான் பயணங்களே இல்லையே.
கடைக்கும் போவதில்லை.
பார்க்கலாம் எத்தனை நாட்கள்
இப்படிச் செல்கிறது என்று.:_))))))))
26 comments:
எஸ்கலேட்டர் மீது எனக்கு மனதுக்குள் லேசான பயம் உண்டு! கடைசி வினாடியில் காலிஸ் சரியாக வைக்காமல் போய்விடுவோமோ என்கிற மிரளல் உண்டு. என் எஸ்கலேட்டர் அனுபவம் பற்றி ஒரு பதிவு கூட முன்னர் எழுதி இருந்தேன்!
வீட்டுக்குள்ளயே இருக்கும் இந்த நாட்களிலிருந்து சீக்கிரமே விடுபடுவோம். நல்ல நாள் சீக்கிரமே வரும் என்று நம்புவோம்.
நானும் லண்டன் ஹோட்டலில் குறுகலான எஸ்கலேட்டரில் விழுந்திருக்கிறேன். கூட வந்தவன் பிடித்துக்கொண்டாலும் அதன் பிறகு எஸ்கலேட்டரில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பேன். லக்கேஜுகளுடன் செல்லும்போதுதான் அதனைப் பிடித்துக்கொள்ளும்கோது நிலை தடுமாறிவிடும்.
தலை போகும் அவசரம் என்றாலும் எஸ்கலேட்டரில் மட்டும் நாங்கள் ஏறவே மாட்டோம். ஆனால் தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டரை விட்டால் படிகள் தான்! அவற்றில் ஏறுவது இன்னமும் மோசமான அனுபவம். அதே வடக்கே, அவ்வளவு ஏன்? திருப்பதி, ரேணிகுண்டா போன்ற ரயில் நிலையங்களில் கூட லிஃப்டும் உண்டு. எஸ்கலேட்டரும் உண்டு. லிஃப்டில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளைத் தவிர்த்து மற்றவர்களைக் கண்டிப்பாய் அனுமதிப்பதில்லை. ரயில்வே ஊழியர் ஒருத்தர் அங்கேயே இருப்பார். உங்கள் பயம் நியாயமானதே!
அன்பின் ஶ்ரீராம்
ஆமாம் மா.ஏறும் போதும் இறங்கும் போதும் தடுமாற்றம் தான்.
மகன் பின்னால். வந்து பார்த்துக் கொள்வான்.
உண்மை நல்ல நாட்களை எதிர் பார்ப்போம். பயணங்கள் நடக்கும்.
எஸ்கலேட்டரில் செல்வதற்கு சற்று அனுபவம் வேண்டும்.
தீநுண்மி ஒழிந்து விரைவில் உலக மக்கள் வீட்டுச் சிறையிலிருந்து விடுபடுவோம் அம்மா.
காணொளிகள் கண்டேன் இதில் குழந்தைகளை ஒரு கையை பிடித்து தூக்குபவர்களை கண்டால் ஓங்கி அறைய வேண்டும் போல் தோன்றும்.
வெளிநாட்டில் பிள்ளைகளை விட்டுவிட்டு, எஸ்கலேட்டரில் ஏறமுடியவில்லை என்றால் எப்படி!
மீண்டும் இயல்பு நிலை விரைவில் வரட்டும்...
பலருக்கும் எஸ்கலேட்டர் என்றால் ஒரு வித பயம் தான். லிஃப்ட்-ல் பயணிக்க பயப்படுபவர்கள் கூட உண்டு. ஒரு முறை பயம் அகன்று பயணித்து விட்டால் பழகி விடும்.
எங்கே போச்சு எஸ்கலேட்டர் பற்றிய என்னோட கருத்து? எனக்கும் எஸ்கலேட்டர் என்றாலே அலர்ஜி.
வணக்கம் சகோதரி
காணொளிகள் கண்டேன். திகிலாக உள்ளது. இதில் பயணிக்க எனக்கும் சற்று பயந்தான். இதை விட படியேறி சென்று விடலாம் எனத் தோன்றும்.அதுவே டென்ஷன் இல்லாமல் இருக்கும். பழைய நாட்கள் இனி வருமா என்பதே கனவாகத்தான் உள்ளது. எனினும் முன்பு போல் விரைவில் சனி, ஞாயிறுகளிலாவது காலாற வெளியே செல்வோம் என்ற நம்பிக்கையுடன் வாழுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை, அன்பு முரளிமா,
எஸ்கலேட்டரில் விழுவது கலங்க வைக்கும் அனுபவம்.
நம்மால் பிறருக்கும் அவதி.
சுமைகளோடு
படி ஏறுவது சரியில்லைதான். ஏர்போர்ட்டில்
வேறென்ன செய்வது?
6 வருடங்களாக சக்கர நாற்காலியில்
செல்வதே வழக்கமாகி விட்டது.
அதனால் பயணம் சௌகரியம்.
இரண்டு வருடங்களாக அதுவும் இல்லை.
ஒரு மாதிரி சம நிலைக்கு வந்துவிட்டோம்.
அன்பின் கீதாமா,
நல்ல பாலன்ஸ் இல்லை என்றால்
எந்த இடமும் நமக்கு இடைஞ்சல் தான்.
விழுவது என்பது பயங்கர மன உளைச்சலைத் தருகிறது.
அதன் பிறகு ஸ்விஸ் மற்ற இடங்களில்
எஸ்கலேட்டர் ஏறி இறங்கியாச்சு.
படிகளில் கண்களை வைக்க மாட்டேன். நகரும் படிகள்.
காணவே கஷ்டமாக இருக்கும்:)
முடிந்த வரை லிஃப்ட் தான்.
தமிழ் நாட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் இன்னும் மாறவில்லை.
சின்ன வயதில் பரவாயில்லை.
வயதான பிறகு புடவை தடுக்க நடக்கவே
சிரமம். இதை எல்லாம் பார்க்க விமானப்
பயணம் எவ்வளவோ தேவலை.சொல்லவே
கஷ்டமாக இருக்கிறது.
அன்பின் தேவகோட்டைஜி,
லக்கேஜ் தூக்குவது போலக் குழந்தைகளைத் தூக்குவார்கள்.:(
அது என்ன அவசரமோ.
நாகரீகம் , ஒழுங்கு இல்லாத மனித ஜென்மங்கள்.
அவசியமான முன் ஜாக்கிரதையுடன் இருந்து விட்டால்
எல்லாப் பயணமும் நன்மைதான்.
நன்றி மா.
அன்பின் ஏகாந்தன் ஜி,
நானும் 1994 லிருந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.:))
இந்த ரத்தக் கொதிப்பும் ,தலை சுற்றலும்
தடுமாறச் செய்துவிட்டன,
மற்றபடி எஸ்கலேட்டரிடம் எனக்கொரு
பகைமையும் இல்லை ஹாஹ்ஹா.
நல்ல மரியாதைதான்.!!!!!
இப்பொழுது எஸ்கலேட்டர் ஓக்கே.
இன்னும் வயதாக என்ன ஆகுமோ தெரியவில்லை.
எஸ்கலேட்டரில் செல்ல பயமா? முதலில் பயமில்லை, த்ரில்லாக இருக்கும்,ஒரு முறை பம்பாய் விமான நிலையத்தில் ஒரு பெண்மணி எஸ்கலேட்டரில் விழுவதை பார்த்ததும் பயம் வந்தது.
காணொலிகள் நன்றாக இருக்கின்றன.
வேறு வழி இல்லாமல் எஸ்கலேட்டர் பயன்படுத்த்வேன். நிறைய படியில் ஏறி செல்ல முடியாதே !
என் அத்தை என் கையை பிடித்து கொண்டு எஸ்கலேட்டரில் ஏறியவர்கள் கையை விட்டு விட்டார்கள் அப்புறம் இரண்டு படி தடுமாறி விழுந்து விட்டார்கள் நான் பயந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது இன்னொரு உதவும் மனம் உள்ளவர் ஓடி வந்து அத்தையை பிடித்து கொண்டார். இன்னும் நினைவை விட்டு மறக்காத நினைவு.
முதன் முதலில் கல்கத்தாவில் 1978 ல் எஸ்கலேட்டரில் பயணம் செய்தேன். இப்போது அமெரிக்காவில் நிறைய இடங்கள் அதை தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
காணொளிகள் பார்த்தேன்.
அன்பின் மாதேவி,,,
உண்மைதான் மா.
உடல் நிலையைச் சரியாக வைத்துக் கொண்டால் எந்த வயதிலும்
எஸ்கலேட்டர் பயமில்லை மா.
நன்றாகப் பயணிக்க வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட், நம் சென்னை ஏர்போர்ட்டில்,
என் நாத்தனார்
தடுமாறி விழுந்தார். பாவம் அதற்குப் பிறகு
சிங்கப்பூர் செல்வதையே தவிர்த்துவிட்டார்.
அடிக்கடி பயணம் செய்யும் போது பயந்தால் நடக்குமா.
நன்றி மா.
அன்பின் கீதாமா.,
வந்திருக்கே அம்மா. பின்னூட்டம் வர வர ,செக்
செய்துவிடுகிறேன் மா.
நான் எஸ்கலேட்டர் உபயோகிப்பதில்லை.
அன்பின் தனபாலன்,
எல்லா நன்மைகளும் மீண்டு வர வேண்டும். நன்றி மா.
அன்பின் கமலாமா,
எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளிலும்,
இளவயதில் இருக்கும் துணிவு
பின்பு கொஞ்சம் தேய்ந்துவிடுகிறது.
எஸ்கலேட்டரில் ஓடி விளையாடும் குழந்தைகளைப்
பார்த்திருக்கிறேன்.
ஏறத் தயங்கும் பெரியவர்களையும்
பார்த்திருக்கிறேன்.
இப்பொழுது வெளியில் செல்லவே இல்லை.
சர்க்கரை அதிகமானால் உடல் நலம் சிறிது கெடுகிறது.
உங்களுக்கும் எல்லோருக்கும் வெளியில் ,
செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நன்றி மா.
அன்பின் பானுமா,
எஸ்கலேட்டருக்குப் பயந்தால் எங்கேயும் போக முடியுமா.
இப்பத்தான் இரண்டு வருடங்களாக
போக முடியவில்லை.
ஒரு தடவை விழுந்தததால் வரும் நர்வஸ் ரியாக்ஷன்.
இனி அதுவும் இல்லை. நீங்களும் பம்பாயில்
பார்த்தீர்களா!!!
சரியாகிவிடும். நன்றி மா.
அன்பின் கோமதிமா,
அத்தை விழுந்தார்களா. அது இன்னும் படபடப்பைக் கொடுத்திருக்குமே.!!!!
நல்ல வேளை,ஆபத்து வேளையில் யாரோ
உதவிக்கு வந்தார்களே.
கடவுள் காப்பாற்றினார்.
என்னையும் பின்னால் இருந்தவர்கள்
கடைசிப்படியில் இருந்தவர்கள்
பிடித்துக் கொண்டார்கள். தலை முதுகு என்று நல்ல அடி.
எஸ்கலேட்டரில் 78 லியே பயணித்திருக்கிறீர்களே.
நம் ஊர் ஸ்பென்சர் வந்தபிறகு எல்லா இடங்களிலும்
இந்த நகரும் படிகள்
கொஞ்சம் கண்ணைப் பறிக்கத்தான் செய்தன.
பயமில்லாமல் பயணிக்க வேண்டியதுதான்.
வாழ்க வளமுடன் அம்மா. நன்றி.
Post a Comment