Blog Archive

Friday, May 14, 2021

சாதனை சிங்கம்



கோவையில் இருக்கும் போது பல விஷயங்களில் முன்னணியில் இருந்தது
சிங்கம் வேலை பார்த்த கம்பெனி.

சேலத்திலிருந்து இங்கே மாறி வரும்போது யூனியன்
வழியே பல தொந்தரவுகள். 
எத்தனையோ இரவுகள் தாமதமாக வருவார்.
தொழிலாளர் ஒத்துழைப்பு அவ்வளவு இல்லை.:(

அப்போது வந்தது தான் இந்த சிறப்பு வேலை. 
அப்பொழுது  திரு ஜி.டி, நாயுடு
இருந்தார்.
அவரது வாகனக் கலெக்ஷன் மிகவும் பேசப்படும்.


அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் வண்டிக்குப்
புதிதாக வண்ணம் அடிக்க வேண்டி இருந்தது.
சிங்கம் தானே போய் அவரைப் பார்த்து
அந்த வேலையைத் தான் செய்து தருவதாகச் சொல்லி

திரு நாயுடு அவர்களின் மகனிடமும் சம்மதம் வாங்கிக் கொண்டார்.
அதற்கான பச்சை வண்ணம் நம் ஊரில் கிடையாது.
எல்லாமே இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ்
கம்பெனிக்கு எழுதி வரவழைத்து
மேலே இருக்கும் வீடியோ போல செய்து கொடுத்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கான வேலை.

இங்கே வந்த டாக்குமெண்டரி பார்க்கும் போது 
வந்த நினைவுகள் இவை. 
அந்தக் கரங்களை நினைத்துகொள்கிறேன்.
N





24 comments:

கோமதி அரசு said...

சாரின் திறமைகளை சொல்லும் பதிவு அருமை.
காணொளி பார்த்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ஸ்ரீராம். said...

கார்ப் பிரியர்களுக்கான காணொளி.  ஜி டி நாயுடுவைச் சந்தித்திருக்கிறாரா சிங்கம்?  அட...

Yaathoramani.blogspot.com said...

சுருங்கவே சொல்லி இருந்தாலும் சிங்கத்தின் ஆளுமையை முழுமையாய்ப் புரிந்து கொள்ளமுடிந்தது.வாழ்த்துகள்..

Thulasidharan V Thillaiakathu said...

கோயம்புத்தூரில் இருந்தும் கார் ம்யூசியம் பார்த்ததில்லை அம்மா.

அட! அப்பாவே பெயின்ட் செய்து கொடுத்தாரா!! அப்பாவிற்குப் பல திறமைகள்! சின்சியரிட்டி! பொன்னான காலமில்லையா அவை எல்லாம்.!!

நாயுடு சந்தோஷப்பட்டிருப்பாரே?!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கார் காட்சியகம் மிக் நன்றாக இருக்கிறது. சாரின் திறமை வியக்க வைக்கிறது. நல்ல நினைவுகள் இல்லையா?

துளசிதரன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா... ஜிடி நாயுடு அவர்களின் சாதனைகள் எத்தனை எத்தனை.

குஜராத்தில் இப்படி ஒரு வாகன கலெக்‌ஷன் பார்த்து வந்தேன்.

சாதனை சிங்கம் - நல்ல டைட்டில்! ரசித்தேன் மா.

Geetha Sambasivam said...

உங்கள் சிங்கம் போலவே எங்கள் மாமாவும். இப்போது வயதாகிவிட்டதால் பிள்ளையுடன் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரும் இந்தக் கார்களின் மேல் அதிக மோகம் கொண்டவர். அம்பத்தூர் எஸ்டேட்டில் வொர்க்‌ஷாப் வைத்துப் பின் சரியாகப் பராமரிக்க முடியலைனு வித்துட்டார். மதுரை டிவிஎஸ்ஸுக்குப் பின்னர் இங்கே சென்னை வந்து லூகாஸ், சுந்தரம் கிளேட்டன் ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனியிலேயே பல வருடங்கள் இருந்தார். பின்னர் முகப்பேர் சொந்த வீடு/சிங்கப்பூர் வாசம்னு ஆகிவிட்டது. :))))

Geetha Sambasivam said...

பழைய நினைவுகள் எல்லாம் பொக்கிஷம். உங்கள் நினைவாற்றலுக்குத் தலை வணங்குகிறேன். அருமையாகச் சொல்லி இருக்கீங்க!

நெல்லைத் தமிழன் said...

அருமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கீங்க.

ஜிடி நாயுடுவைச் சந்தித்திருக்கிறாரா?

எல்லாவற்றிலும் ஆர்வமும் முயற்சியும் உடையவர் என்று புரிகிறது.

மனோ சாமிநாதன் said...

மிக அருமையான காணொளி வழங்கியதற்கு அன்பு நன்றிம்மா! நிச்சயம் கோவை செல்லும்போது இந்த மியூசியம் செல்வேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். கோவையில் எடுத்த படங்கள்
சென்னையில் இருக்கின்றன.
எவ்வளவு தான் கொண்டு வரமுடியும்.
உன்னை அவ்வளவு சுலபத்தில் மறக்க விடுவேனா
என்கிறது இந்த ரோல்ஸ் ராய்ஸ்!!!

இந்த உத்வேகம் தான் அவரை வழி நடத்தியது.
வாழ்க்கைத் துணை நலம் என்று இதைத்தான் சொகிறார்களோ.

உங்களுக்குத் தெரிந்த செய்தி தானேமா.
உங்கள் சாரும் இப்படித்தான்.
எங்கேயோ நலமாக இருக்கட்டும் அவர்கள்.
நினைவுகள் நம்முடன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

அப்போதெல்லாம் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த வண்டியைப் பார்க்க அழைத்துச் சென்றார். மகத்தான உழைப்பு.

அந்தக் குடும்பத்தினர் அந்த ஆப்பிள் க்ரீன்
வண்ணத்தின் வண்டியைப் படம் எடுத்து இவரிடம் கொடுத்தார்கள்.
அதுதான் இவர் தனக்கான டெஸ்கில் வைத்திருந்தார்.

பெருமை அடித்துக் கொள்ளு வழக்கம் அவருக்கு இருந்ததில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ரமணி சார்,
எழுத வரும்போதே எண்ணங்கள்
குவிகின்றன. வருத்தமும் வருகிறது. சரியாகச் சொல்லாமல்
விட்டு விடுகிறேன் மா.
பல பல திறமைகள் கொண்டவர்.
மிக மிக அடக்கமும் கூட.
பெருமை சொல்லிக் கொள்ள மாட்டார்.
புரிதலுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சின்ன கீதாமா,
ஆமாம் அப்பாவுக்கு வொர்க்ஷாப் விஷயங்கள் அத்தனையும் தெரியும்.
மிகத் திறம்பட நிர்வாகம் செய்வார்.
பலகலை வித்தகர். நிறைய புத்தகங்கள் படிப்பார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா. அந்த வண்டி அவருடைய திறமைக்காகப் பரிசாகக்
கொடுக்கப்பட்டதாம்.
முழுவதும் செப்பனிட்டு ,வர்ணம் சேர்த்து
கொடுத்தார் அப்பா.
அப்பாவும் லண்டனில் ரோல்ஸ் ராய்சில்
பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். Thank you ma Thulasitharan.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
ஆமாம் மா. ஜி டி நாயுடு அவர்கள் மாதிரி
பெரிய மனிதர்கள் இருந்த காலத்தில்
நாமும் இருந்திருக்கிறோம்.
அவருக்கு இந்த ரோல்ஸ் ராய்ஸ் பரிசளிக்கப்பட்டதாம்.
எந்த மாடல் என்று தேடினேன். 1950ஸ் மாடல்
என்று தெரிய வந்தது.
அதை நிறைய புத்தகங்கள் வழி ஆராய்ச்சி
செய்து,( அப்போது இணையம் கிடையாதே.......)

அந்த வண்ணத்தை வரவழைத்தார்.
நல்ல பெயர் கிடைத்தது.சாதனை சிங்கம் என்று சட்டென்று தோன்றியது தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உங்க மாமாவைப் பற்றி இப்பதான் நீங்க சொல்கிறீர்கள்.
அவருக்கும் இவர் வயதா?
மதுரையில்
பார்த்திருப்பார்களோ? இவர் 57இல் இருந்து
60 வரை அங்கே டிவிஎஸ் இல் இருந்தார்.

இன்னும் வேறு யாரோ இவரைத் தெரியும் என்று சொன்னார்கள்.
உங்கள் மாமாவை நான் விசாரித்ததாகச் சொல்லவும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அவர் தொடாதது சமையல் மட்டும் தான்.
வரைவது, மஷின் ட்ராயிங்க், மரவேலை, தோட்ட வேலை
எல்லாமே தெரியும்.
அவர் உழைப்பதற்கே பிறந்தவர்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
பல பல விஷயங்களை மறந்து விடுகிறேன்.
அவரோடு இருந்த காலம் எப்பொழுதும் சிறிதும்

அசந்தோம் என்பதே கிடையாது.
சிலசமயம் கோபம் கூட வரும். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.
இருக்கும் நினைவுகளை எழுதி வைக்கிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
கட்டாயம் சென்று பாருங்கள். மிக மிக வியக்கத் தக்க மனிதர் திரு.நாயுடு,
அதில் இந்தப் பச்சை வர்ண ரோல்ஸ் ராய்ஸ் பார்த்தால்
என் வணக்கத்தைச் சொல்லுங்கள்.
நன்றி மா.