Blog Archive

Saturday, May 15, 2021

ஸ்விஸ் ஆல்ப்ஸ் பற்றிய காணொளி....

2002 என்று நினைக்கிறேன்.
விடாமல் 15 நாட்கள் ஸ்விட்சர்லாந்தை
சுற்றி வந்தோம்.
ஒரு நாள் மகன் வீட்டில் இருப்போம் ,அடுத்த நாள் காலையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு எட்டுமணிக்கு
வண்டியேறினால் இரவு பத்துமணிக்கு
வந்துவிடுவோம்.
ஒவ்வொரு நிமிடமும் வீணாகாமல் ,ரயில் ஏறி இறங்குவ்தும், அடுத்த ரயிலைப்
பிடிப்பதுமாகக் கழிந்த நாட்கள்.

ஸ்விஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் 
ஒரு நல்ல காப்பி. 
அத்தனை களைப்பும் பறந்துவிடும்.
விமான நிலையத்திற்குக் கீழேயே ,ரயில் நிலையம். 
அங்கே ஒரு மாதத்துக்கான ரயில் பாஸ் எடுத்துக் கொண்டோம்.

இன்னும் நினைவு இருக்கிறத். 143 ஃப்ராங்க்ஸ்.
இருவருக்கும்  சேர்த்து!!!
இப்பொழுது அதிகரித்திருக்கலாம்.
ஒரு நாள் வெளியே சுற்றுவோம், ஒரு நாள் ஓய்வும்
உள்ளூருக்குள் நடையும்.
அந்த செப்டம்பர் மாதம் அதிகக் குளிரும் இல்லாமல்,
இதமான வெய்யிலுடன்
களைப்பே தெரியாமல் ஊர் சுற்றினோம்.
70 கிலோ எடை 62 கிலோவாகக் குறைந்தது.!!!!!!!!!

அன்பு மகனுக்குத் தான் அத்தனை நன்றியும்.
அப்போது ஒரு மாத விசா தான் கிடைத்தது.
இப்போது 90 நாட்கள் அங்கே இருக்கலாம்.
வயதானதற்குக் கிடைக்கும் மரியாதை.
அங்கே வேலை தேடிக் கொண்டு அங்கேயே தங்கி
விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு 
இப்போது இல்லை:)
இந்த மகிழ்ச்சியும் நிறைவும் 
அந்த ஊர் மக்களுக்கு என்றும் கிடைக்க வேண்டும்.





18 comments:

கோமதி அரசு said...


உங்கள் மலரும் நினைவுகள் அருமை.

சிவந்த மண் படத்தில் ஸ்விஸ் காட்டுவார்கள். ஆல்பஸ் மலை சிகரத்தில் பாட்டில் அந்த ஊரை சுற்றி காட்டுவார்கள்.
காணொளி பார்த்தேன் அருமையான இடம்.ஊசியிலை மரங்களும், ரோப் காரும் பனி படர்ந்த மலைகளும், பச்சைபசேல் புல்வெளிகளும் அழகு.

தெருவில் பாடும் பாடல் அருமை.

கோமதி அரசு said...

ரயில் அழகு.
நம்மூரில் திருவிழாக்களில் வாசிக்கும் வாங்கா வாத்தியம் போல் இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்விட்சர்லாந்து அழகாக இருக்கிறது. உங்கள் நினைவுகளும் அருமை வல்லிம்மா. நினைவுகள்தான் நம்மை ஒரு உந்து சக்தியுடன் வாழ வைக்கும்..

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வீடியோ செமையா இருக்கு. ரோப் கார்ம் பனி மலை அருவி நதி எல்லாம் என்ன அழகு!!!! அங்கு ரயிலிலேயே சுற்றிவிடலாம் என்று கேட்டதுண்டு. அருமையான இடம்.

சுற்றிப் பார்க்க ஆசைதான். வாய்ப்பு கிடைத்தால் நல்லது.

அவர்கள் பாடுவதும் சூப்பர்! எல்லா ஊர்களிலும் தெருவில் பாடுவது உண்டு போலும்! என்ன மகிழ்ச்சியாகப் பாடுகிறார்கள்!

மிகவும் ரசித்தேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் நினைவு இருக்கிறத். 143 ஃப்ராங்க்ஸ்.
இருவருக்கும் சேர்த்து!!!//

பரவாயில்லையே! இப்போது கூடியிருந்தாலும்....கூட!

உங்கள் நினைவுகள் அருமை அம்மா. பசுமையான நினைவுகள். நீங்கள் சுற்றிப் பார்த்த போது எடுத்த அந்த ஃபோட்டோக்கள் இல்லையோ?

கீதா

வெங்கட் நாகராஜ் said...

ஸ்விஸ் குறித்த சில காணொளிகள் பார்த்திருக்கிறேன். இந்தக் காணொளியும் பார்க்க வேண்டும்.

இனிமையான நினைவுகள். இந்த மாதிரி இடங்களுக்குப் பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பயணிக்க வாய்ப்பு கிடைக்காமல் இப்போது இருக்க வேண்டியதாகி விட்டதே.

Geetha Sambasivam said...

அழகான ஊர். ஆல்ப்ஸ் மலைகளின் அழகை கோமதி சொல்கிறாப்போல் சிவந்த மண் திரைப்படம் மூலமே பார்த்திருக்கேன். நீங்கள் இருவரும் சென்ற நினைவுகள் மங்காது உங்கள் மனதில் பிரகாசமாய் என்றென்றும் இருக்கட்டும். இது போன்ற நினைவுகள் பொக்கிஷங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
வாழ்க வளமுடன் அம்மா.

நல்ல வேளையாக உடம்பு நம் வசத்தில் இருந்த போதே சென்றோம்.

ஒரு ராஜா ராணியிடம் பாடலில்
வந்த காட்சிகளை வைத்து
அடையாளம் தெரிந்ததா என்று சின்னத்தம்பி கேட்டான்:)
அவர்கள் ஆல்ப்ஸ் மலையில் ஒரு கால்,
பாரீஸ், ரோம் என்று அலைந்து ஒரு பாடலை எடுத்திருக்கிறார்கள் டா,
நாங்கள் ஒரு பக்கம் மட்டும் பார்த்து வந்தேன்
என்றோம். அமைதி கிடைக்கும்.
டூரிஸ்டுகளின் வருகை சிலசமயம் அந்த ஊரும்
அசுத்தப் படுகிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதிமா,
வீதிக்கு வீதி நல்ல பாடகர்களையும்,
வாத்தியங்கள் வாசிப்பவர்களையும் காணலாம்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் நகரங்கள்
8 மணிக்கு அடங்கி விடும். Alpine Horn. thaanநம் ஊர் கோவில் வாங்கா வாத்தியம்.;0)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமாப்பா..
ஸ்விஸ் நல்ல சந்தோஷமான இடம்.
வசதிகளும், போக்குவரத்தும் அருமை.
நல்ல நினைவுகளைத் தேக்கி
அனுபவைப்பதும் ஆரோக்கியமே. மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
நிறைய படங்கள் எடுத்தேன்மா.
பழைய டெஸ்க் டாப்பில் சேர்த்து வைத்திருந்தேன்.
ஊரை விட்டு வரும்போது,
பிகாஸொவில் இருந்தது. பிறகு லாப்டாப் புக்கு மாறும் போது
பலவற்றை இழந்திருக்கிறேன்.
தேடிப் பார்க்கிறேன்.

143 ஃப்ராங்க்ஸ் 15 நாட்கள் போக வர:)
இப்போழுது மகன் வீட்டிலிருந்து நகரத்துக்குப்
போய் வருவதற்கே நிறைய ஆகிறது,.மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
அங்கே பிறந்தவர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது.
படிப்பு மட்டுமே முக்கியம் என்றில்லை.
சிறு வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
நன்றாக அனுபவிக்கிறார்கள்.
பாட்டும் நடனமும் கூடவே வருகிறது.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் அம்மா.

ஒவ்வொருவர் வாழ் நாட்களிலும் சில காலம் பயணங்களுக்காகக்
கிடைக்கும்.

என் பெற்றோருக்கு அவர்கள் ஓய்வு பெறும்
நாட்களில் கிடைத்தது. தில்லி,கல்கத்தா,ஒரிஸ்ஸா,
பத்ரி நாத் என்று சென்று வந்தார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி
திருவல்லிக் கேணியில் இருந்து கிளம்பும்
ஆலய தரிசன பஸ்களில் மாதம் இருமுறையாவது சென்று வருவார்.

உங்களுக்கும் மீண்டும் பயணங்கள் வாய்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக அமைதியான அழகான சட்டங்களை மதிக்கும் ஊர்.
வீட்டிலிடுந்தே மலை உகடுகளைக் காணலாம்.
பழமை விரும்பிகள் அங்கே அதிகம்.
அவர்களையும்மீறி சில வெளி நாட்டவர்கள்
அசுத்தப் படுத்துகிறார்கள். அது வருந்தத் தக்க வேண்டிய சூழ்னிலை.

போக்கு வரத்து மிகக் கட்டுப்பாட்டோடு இயங்குவதால்
பயணத்தின் சிரமமே தெரியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

காணொளி அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

பயணித்த உணர்வு

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
தாங்களும் கண்டு மகிழ்ந்தது அருமை.