Blog Archive

Friday, April 16, 2021

அன்பின் அரவணைப்பு,......


இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள்
நம் எல்லோருக்கும் .

பிலவ ஆண்டு ஆரோக்கியம், அமைதி கொண்டு 
வரட்டும்.






அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளைப் 
பார்த்திருக்கிறீர்களா.?
ஒரு அம்மா,அப்பா எல்லோரும் இருந்தும் 
அந்தக் குழந்தையின் கண்களில் ஒரு
துடிப்பு இருக்காது. துணைக்கு ஒரு தலையணையோ,
ஒரு கரடி பொம்மையோ   இருக்கும்.

இந்த ஏக்கம் எப்பொழிது ஆரம்பிக்கிறது?
அந்தக் குழந்தையின் பெற்றோர்
அரவணைத்து வளர்க்கப் பட்டார்களா  என்ற 
கேள்வியில் இருந்தே ஆரம்பம்.

60 வருடங்களுக்கு இருந்த பெற்றோர்களின் அன்பு,,,,
 முகத்தில்
தெரியும். அத்துடன் குழந்தைகளைத் தொட்டுப்
பேசுவது, அருகில் அழைத்து அணைப்பது எல்லாம் 
அந்தக் குழந்தையின் நாலு அல்லது ஐந்து 
பிராயத்தில் முடிந்துவிடும்.
முதல் குழந்தைக்குப் பின் மற்ற குழந்தைகள் 
வந்து விடுவார்கள். 
தாயின் கவனம், குட்டிக் குழந்தையை சமாளிப்பதிலும் 
சமைப்பதிலும்
கணவனுக்கு ஈடு கொடுப்பதிலும் செலவழிக்கப் படும்.

அதனால் மற்ற குழந்தைகள் நிராகரிக்கப்
பட்டார்கள் என்று சொல்ல வரவில்லை.
அம்மாவின் தொடுதல் அணைப்பு குறைந்தால் என்ன?

அந்த இடத்தைப் பாட்டிகள் எடுத்துக் கொள்வார்கள்.

கூடவே , சித்தப்பாக்கள், மாமாக்கள்,அத்தைகள் 
எல்லோரும் தான்.
இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் 
ஆகும்போது,
தங்கள் மணவாழ்க்கையில் நுழையும் நேரம்,
அவர்கள் எதிர்கொள்வது அன்பையும் அரவணைப்பையும்
நோக்கியே இருக்கும்.

அதே சமயம் உடல் வழி அணைப்பையோ,வேறெதையும் எதிர்
கொள்ளத்தயங்குவார்கள்.
உள்ளத்தால் மிக நெருங்கிவிட்ட தம்பதிகளின்
உணர்வு பூர்ணமாகத் தொடுதல் 
இவை வருவதற்கு நாட்கள் பிடிக்கிறது.

இங்கே உட்கார்ந்திருக்கும் குடும்பம் உங்களுக்குப் 
பழகிய குடும்பம் தான்.
குழந்தைகள் நெருக்கி அடித்துக் கொண்டு 
உட்கார்ந்திருக்க
அம்மா தனி ஸ்டூலில்:)
1973இல்
படம்  எடுக்கச் சென்ற திருச்சி ஸ்டூடியோவில் 
இத்தனை ஏற்பாடு தான் இருந்தது.
இருந்தாலும்  ,
மகளையாவது தன் மடியில் வைத்துக் 
கொள்ள என்ன  தடை அந்த அம்மாவிற்கு?
மன முதிர்ச்சி போதவில்லை.
அந்த  ஸ்டூல்  மூன்று காலில்
நின்று கொண்டிருந்ததும் ஒரு காரணம்:)

எனக்கு அந்த அம்மாவிடம் பிடிக்காத குணங்களில் 
இதுவும் ஒன்று.
எத்தனை உன்னதமான நேரத்தில்
கட்டுப்பாடுகளை மட்டுமே கருத்தில் வைத்துக் 
கொண்டு,
சுருங்குவது சரியா என்று கேட்க ஆவலாக இருக்கிறது. அந்தத் தம்பதிகளுக்கு
அன்று ஏதோ ஊடல் என்பது மட்டும் நினைவில்.
அது போகட்டும். நடந்த  சம்பவத்துக்கு இப்போது
வருந்தி என்ன பயன்.:(

இதெல்லாம் நினைவுக்கு வந்தது சமீப காலங்களாக்ப் பார்த்து வந்த
 இங்கிலாந்து அரச பரம்பரை பற்றிய
தொடர் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.


இந்த ஆங்கிலேயர்கள் என்ன ஒரு கொடுமையைப் 
புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள்  என்று தோன்றியது.!!
எதற்காக நம் ஆனந்தத்தையும், அழுகையையும்
வெளிப்படுத்தக் கூடாது?
திரைப்படங்களின் சோகக் காட்சிகள் நம்மை
அழவைத்த காலங்கள். நல்லிசைப் பாடல்கள்
நம்மனதை ஆட வைத்த காலங்கள்.
உன்னதமானவை.! அவை நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாகச் 
செயல் பட்டன என்றே நம்புகிறேன்.
என் தலை முறையைக் குறை சொல்லவில்லை.
ஆனால் ''stiff upper lip'' கொடுமை இனி வேண்டாம்
என்று தோன்ற வைத்த கணங்கள் இப்போதாவது
வந்தால் சரியென்று தோன்றியது.

இப்போது நிறைய மாறிவிட்ட காலங்களைப் பாராட்டுகிறேன்.
நான் வளர்த்தாலும்,
என்னைப் பின்பற்றாமல் தங்கள் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து
அரவணைத்து ,முத்தமிட்டு கொஞ்சியே வளர்க்கிறார்கள்.






  *(((இப்போது இந்தத் தொற்று காலத்தில் யாரும் யாரையும் 
அணைத்துக் கொள்வது என்பதே 
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே ஆனது,
வேறு விஷயம்.))))))


 

வல்லிசிம்ஹன்

12 comments:

ஸ்ரீராம். said...

அந்நாட்களில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் பிடிக்கும்.  ஏனென்றால் அப்போது அப்பா என் அருகிலேயே பெரும்பாலான நேரம் அமர்ந்திருப்பார்.  அவ்வப்போது வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார்.  கேள்விகள் கேட்பார்.  கோபப்படாமல் என்னைச் சாப்பிடச் செய்வார்.

ஸ்ரீராம். said...

புகைப்படத்தில் இருக்கும் அம்மாவை எனக்குத் தெரியும்.  அப்போது அல்லது அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நாளில் எப்படியோ தெரியாது..  இப்போதெல்லாம் அவர் குரலிலேயே அன்பு வழிந்தோடும், தன் குழந்தைகளிடம் மட்டுமல்ல..  அவர் பேசும் ஒவ்வொருவரிடமும்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்வது போல (தமிழ்ப்)படங்கள் நம் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய் இருந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.  சிவாஜிக்காக, நாகேஷுக்காக அழாவிட்டாலும் நம் சொந்த அனுபவங்களுக்காக அழுதிருப்போமோ!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,
இனிய காலை வணக்கம்மா.

உண்மைதான். காலம் நிறைய கற்றுக கொடுக்கிறது. எனக்கும் பதினம வயதுகளில்
டான்சில்இடிஸ் இருந்ததால் அம்மா அப்பா கவனிப்பு அதிகமாகும்.
அனுபவித்திருக்கிறேன் அந்த நாட்களை:) நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம் ,

எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, சிங்கம் சொன்னார் படம் எடுக்கப் போகலாம்
என்று!

குழந்தைகளைத் தயார் செய்து பொவதற்குள் ஏழு மணி ஆகிவிட்டது.
உணவு விஷயங்களில் கறார் நான்.

என்அன்பு குழந்தைகளுக்கும் தெரியும். உங்களை மாதிரி அவர்களும் என்னை அருமையுடன் இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அதனாலயே படங்கள் எனக்குப் பிடித்தது மா. நம்முடைய outlet அங்கு தான் கிடைத்தது என்று நம்புகிறேன்.
அருமையான புரிதல் உங்களுக்கு.

கோமதி அரசு said...

//புகைப்படத்தில் இருக்கும் அம்மாவை எனக்குத் தெரியும். அப்போது அல்லது அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நாளில் எப்படியோ தெரியாது.. இப்போதெல்லாம் அவர் குரலிலேயே அன்பு வழிந்தோடும், தன் குழந்தைகளிடம் மட்டுமல்ல.. அவர் பேசும் ஒவ்வொருவரிடமும்//

ஸ்ரீராம் சொன்னதை நானும் வழி மொழிகிறேன். அன்பும் , பரிவும் குரலில்,வழிந்தோடும்.

படம் மிக அருமை. படம் எடுக்கும் போது எடுப்பவர் சொல்லி இருக்கலாம்
மூன்று கால் பெஞ்ச் என்பதால் அவரும் சொல்லவில்லை போலும்.

நீங்கள் சொல்வது போல் இப்போது உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து
அரவணைத்து ,முத்தமிட்டு கொஞ்சியே வளர்க்கிறார்கள்..

அன்பை வெளிகாட்டும் விதம் வேண்டுமென்றால் வேறாக இருக்கலாம், ஆனால் அன்பு நிறையவே இருக்கிறது. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நிறைய இருக்கிறது.

பதிவு அருமை.


வெங்கட் நாகராஜ் said...

அருமையான நிழற்படம்.

சில சமயங்களில் இப்படி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று! உங்கள் அன்பு நாங்களும் உணர்ந்தது தானே! உங்கள் வாரிசுகளும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

நினைவுகள் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. படத்திலிருந்தும் அம்மாவின் முகத்தில் அன்பு நிறைய குடி கொண்டிருப்பதை அழகாக தெரிகிறதே.... இப்போதும் நாங்கள் அதை தினமும் கண்கூடாக உணர்கிறோம்.

நீங்கள்(அந்த அன்புள்ள அம்மா) சொல்லும் காரணங்களும் (முக்காலி) ஒரு விதத்தில் மகளையோ, மகனையோ மடியில் வைத்துக் கொள்ள தடையாக இருந்திருக்கலாம். அதை வைத்து அன்பில்லை எனச் சொல்லலாமா? சில சமயங்களில் செய்ய முடியாத சில நிகழ்வுகள் எனக்கும் மனதில் நிழற்படமாக ஓடிக் கொண்டேதான் உள்ளது. வருத்தப்படாதீர்கள். உங்கள் அன்புக்கு கட்டுப்பட உங்கள் குழந்தைகளும், நட்பு, மற்றும் உறவுகளும், இப்போது நாங்களுமிருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் என்றும்.
மிக மிக உண்மை.

ஸ்டூல் ஆடியது இன்னும் நினைவில்:))
எங்கள் மகள் இந்த அணைத்து வளர்ப்பதில்
மிகச் சிறப்பு.
மகன்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
பெண் குழந்தைகளைக் கொஞ்சம் தள்ளியே
நடத்துவார்கள்.
மகன் மேலேறிக் கொள்வான் பேரன்.:)

நீங்கள் சொல்வது போல நமக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்திப்
பழகத் தயக்கம் இருந்தாலும்,
அம்மா நம்மைக் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையைக்
கொடுத்தால் போதுமானதாக இருந்தது.

நீங்கள் எல்லோரும் என் பலம்.
அன்பின் மகிமையை அறிந்தவர்கள். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் சொல்வது உண்மை.
நான் எப்படி வளர்க்கப் பட்டேனோ அதே போல் குழந்தைகளிடம் இருந்திருக்கிறேன்.

ஆனால் குழந்தைகளுக்கு உண்டான இன்ஸ்டிங்க்ட்,
அவர்களை என்னிடம் சேர்க்கிறது.
உங்கள் புரிதலுக்கும் அனபுக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா,
எத்தனை ஆதரவு உங்கள் வார்த்தைகளில்!!
இதற்குத்தான் உடன் பிறவாத சகோதரிகள்
நீங்கள் எல்லோரும் இருப்பதை மீண்டும் மீண்டும் இறைவன்
உணர்த்துகிறார்.

முக்காலி ஆடியது உண்மை.நான் ஆடாமல் இருந்ததே பெரிய விஷயம்:))

குடும்பமாக எடுக்க முடியவில்லையே
என்று ஆதங்கம். அதைத்தான் எழுதினேன்.
அந்த நேரத்தில் அது முடிந்தது.
அன்பில் குறையில்லை. அதை வெளிக் காண்பிப்பதில்

சற்றுக் குறைவு. இப்பொழுது நான் அப்படியில்லை.
வருத்தம் கோபம் எல்லாம் போய் விட்டது.
மிஞ்சிய நாட்களை சுமுகமாக மகிழ்ச்சியுடன்
கடக்க வேண்டும். மிக நன்றி என் சகோதரி.