Blog Archive

Tuesday, April 27, 2021

ரயிலுக்கு கைகாட்டியது உண்டா.






8 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அழகான காணொளிகள். இரயிலைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து சந்தோஷமடையும் சிறுமிகளும் சரி, அடுத்ததில் வரும் இரயிலை கண்டதும் வியந்து, பின் சற்று பயந்து தன் முகத்திலேயே ஆயிரம் பாவங்களை காட்டும் சிறுமியும் சரி, நம்மை சிறு வயதிற்கு அழைத்துப் போகிறார்கள்.

இரயில் பயணமே அலாதியான ஆனந்தமானதுதான். இப்பவும் நம் தென் தமிழ் நாட்டிற்கு பயணிக்கும் போது, இரயிலைக் கண்டதும் இந்த மாதிரி சில சிறுவர் சிறுமியர் குதூகலித்து கை ஆட்டுவதை பார்த்திருக்கிறேன். இப்போது நம் அருகில் பலரும் பார்த்திருக்கும் போது பதிலுக்கு கையாட்ட நமக்குள் ஒரு கூச்சம் வருகிறது. முன்பு சில சமயங்களில் (என் குழந்தைகளுடன் செல்லும் போது) நம் மடியிலும் அதே போல் ஒரு குழந்தையிருப்பதால்,அதன் கையைப் பிடித்து ஆட்டி நானும் சந்தோஷித்திருக்கிறேன்.:) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், காட்டி இருக்கேன்.இருக்கோம். நிறையத் தரம்.

Thulasidharan thilaiakathu said...

அம்மா எனக்கு ரயில் தான் ரொம்பப் பிடிக்கும் பயணம் செய்யவும். ஜன்னலின் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவது.....என் மகனுக்கும் ரொம்பப் பிடிக்கும்.

காணொளிகளை மிக மிக ரசித்தேன்..குழந்தைகளின் குதூகலம்...வாவ்!!

மகனின் சிறு வயதை நினைவூட்டியது. திருன்வனதபுரத்திலிருந்து சென்னை செல்லும் போதெல்லாம் ஈரொடு வந்ததும் மகன் என்னை மழலையில் சொல்வான்...ம்மா கப்ளிங்க் பாக்கணும் நு. அங்கு எஞ்சின் மாற்றுவார்கள். அவனை அழைத்துக் கொண்டு அந்த நடு ராத்திரியில் அவனை தூக்கிக் கொண்டு அல்லது கையில் பிடித்துக் கொண்டு மாற்றுவதைக் காட்டிவிட்டு மீண்டும் வேகமாக வந்து பெட்டியில் ஏறிக் கொள்வேன் அல்லது ஏதேனும் பெட்டியில் ஏறி உள்ளே ந்டந்து நாங்கள் இருந்த பெட்டிக்கு வருவேன். இப்படி பல ஊர்களுக்குச் செல்லும் போதும் இந்தக் கப்ளிங்க் பார்க்க அவனை அழைத்துச் செல்ல வேண்டும்.

கீதா

Thulasidharan thilaiakathu said...

அது போல கோடம்பாக்கத்தில் மாமியார் மாமனார் வீட்டில்தான் அதிகம் இருந்தது அப்போது. ரயில் ட்ராக் அருகில். மகன் ரயில் சத்தம் கேட்கும் போதெல்லாம் இரு கைகளியயும் விரித்து தூக்கிக் கொண்டு போய் காட்டச் சொல்வான். பெரும்பாலும் மாமனார்தான் அவனை அழைத்துக் கொண்டு சென்று காட்டுவார். ரொம்பப் பொறுமையாகக் காட்டிவிட்டு சின்ன மாமியார் வீடு ட்ராக்கை ஒட்டி இருக்கும் என்பதால் அங்கு சென்று திண்ண்னையில் உட்கார்ந்து பார்த்துவிட்டு வருவார்கள்..

மகனுக்கு நிறைய ரயில் பொம்மைகள். இப்போது வீடு காலி செய்த போது அவை எல்லாம் இதோ இங்கு வந்திருக்கு. பத்திரமாக ஒன்று கூட உடைக்காமல் வைத்திருப்பான். அப்படியே புதியதாய் இருக்கு எல்லா பொம்மைகளும்..

ரயில் வீடியோக்கள் அசத்தல்!!! ரொம்ப ரசித்தேன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா,
இந்த ரயில் மோகம் நம்மை விட்டுப்போகாது என்றே நினைக்கிறேன்.
ரயில் நம் வாழ்வோடு பிணைந்த ஒன்று.

இப்போதிருக்கும் ஏஸீ ரயில்கள் பிடிப்பதில்லை.
தலையைக் கையை வெளியில் நீட்ட முடியாது.
அந்தந்த ஊர்களுக்கான வாசனை ஒன்று இருக்கும்.
அதை நுகர முடிவதில்லை.
இப்போது எல்லாமே மாறி இருக்கும்.
நீங்கள் சொல்வது தென் தமிழ் நாட்டில்
அந்த கள்ளமில்லாத சிரிப்பை அனுபவிக்க முடியும்.

சிறிது வயதான பிறகு ஏதோ நம்மைத் தடுத்து விடுகிறது.
இந்தச் சிறுமியின் வீடியோ அகஸ்மாத்தாகப்

பார்த்தேன். அப்படிப் பார்த்தவுடன் என்னைக் கவர்ந்து இழுத்துவிட்டாள்.

நல்ல வீடியோ இது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மதுரை பசுமலையில் வீட்டுக்குப் பின் வயற்காடு. அதற்கப்புறம்
ரயில்வே லைன். தெற்கே போகும் ரயில்கள் அனைத்தையும் பார்த்த படி இருப்பேன்.

ஆமாம்,, கையாட்டினதும் உண்டு. சிலசமயம் கையாட்டல்களைப்
பெற்றதும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
எத்தனை நல்ல அம்மா நீங்கள்!!!
எனக்கும் எஞ்சின் மாற்றுவது.
எக்ஸ்ற்றா கோச் மாட்டுவது எல்லாம் மிகப் பிடிக்கும்.
அப்பா அழைத்துப்போய்க் காண்பிப்பார்.
சும்மா பொழுது போகாத நாட்களில்
ரயில்வே ஸ்டேஷன் அழைத்துச் செல்வார்.

நீங்கள் படா தைரிய சாலிதான்.ஈரோடில் இறங்குவது மீண்டும் ஏறுவது
என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
சமத்து அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சின்ன கீதாமா,
குழந்தைகளுக்கு ரயில் பொம்மைகள் பிடிக்கும். உங்கள் பையனின் ரயில் மோகம்
அளவில்லாத சந்தோஷம் தருகிறது. தங்கள் மாமனாரின் பொறுமையும் கனிவும் நெகிழ்விக்கின்றன.
கோடம்பாக்கம் பக்கம் இருக்கும்
வீடுகளைக் கடந்த ரயில்களில் நான்
பயணித்திருக்கிறேன்.
கடைசியாக 2014 இல்.

குழந்தை நன்றாக செழிப்பாக இருக்கட்டும்
நல்லது எல்லாம் நடக்க வேண்டும். நன்றாக இருங்கள் அம்மா.