Blog Archive

Thursday, April 22, 2021

மட்ரி........மாலைவேளைப் பலகாரம்


வல்லிசிம்ஹன்

நாம செய்கிற துக்கடா தான்.:)
அப்போது மைதாமாவில் செய்வோம்.
இப்போது முழுக் கோதுமை மாவில் செய்தோம்.

முன்பு துபாயிலும், இப்போது இங்க குஜராத்தி கடையிலும்
ரெடிமேடாக வாங்கிய அனுபவம்.
வீட்டிலேயே செய்து பார்த்ததோம்.
அந்த அளவு நெய் விடவில்லை.

கோதுமை மாவை சலித்துக் கொண்டு 
உப்பு, ஜீரகம், ஓமம்,பெருங்காயம்,  கொஞ்சம்
சோடா உப்பும் , ஒரு கப் மாவிற்கு
கால் கப் தண்ணீர்

எண்ணெய்  மூன்று டீஸ்பூன் எல்லாம் தேவையான அளவு சேர்த்துப்

பிசைந்து  வைத்து விட்டேன்.

சப்பாத்தி இடுவது போல , இட்டுக் கொண்டதும்,
ஒவ்வொரு லேயருக்கும் நெய் மேலாகத் தடவி
பராத்தாவுக்கு மடிப்பது போல மடித்து மடித்து 
இட்டு, 
எங்கள் பாட்டி செய்வது போல சுருட்டி வைத்தேன்.
சுருட்டின மாவை மீண்டும் சப்பாத்தி
மாதிரி இட்டு,
ஹார்லிக்ஸ் மூடியினால் வட்டமாக 
அழுத்தி சாப்பிடுகிற முள் கரண்டியினால்
ஓட்டை போட்டுக் கொண்டதும்

மட்ரி துண்டுகள் தயார்.
வாணலியில் இந்த ஊர் ரைஸ் ப்ரான் எண்ணெயை வைத்து
மிதமான சூட்டில் பொரித்து எடுக்க
வேலை ஓவர்.
நல்ல கரமுரா பிஸ்கட் மாதிரி உப்பும் உறைப்புமாக
இருந்தது.
கொஞ்சம் நாசூக்காகச் செய்ய வேண்டும்:)

9 comments:

கோமதி அரசு said...

துக்கடா நன்றாக இருக்கிறது.
முன்பு மைதாவில் செய்வோம்.

அப்புறம் கோதுமை மாவில் செய்வோம் . வெளியில் வாங்காமல் வீட்டில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லது .

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

மட்ரி... நன்றாக வந்துள்ளது. படத்தை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. இந்தப் பெயர் நான் கேள்விப்பட்டதில்லை. மைதா துக்கடா என நீங்கள் கூறியபடி, இதே பாணியில் சர்க்கரை சேர்த்து இனிப்பும், இப்படி காரமுமாக செய்துள்ளேன். உண்மைதான்.. மாலை நேர ஸ்நாக்ஸாக காப்பியோ, அல்லது தேனீருக்கு முன்பாக கொரிக்க நன்றாக இருக்கும்.தங்கள் செய்முறை அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

துக்கடா அருமையாக வந்து இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.

வழக்கமாக சோடா சேர்ப்பதில்லை.
இந்த மொறுமொறுப்பு வேண்டும் என்பதால்
சேர்த்து செய்தோம்.
ஒரு கிண்ண மாவுக்கு அரை டீஸ்பூன்
சோடா போட்டுப் பிசைந்ததில் நன்றாக
வந்தது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா, வாழ்க வளமுடன்.
ஒரு மாற்றத்துக்கு இப்படி செய்தேன்.
இங்கே எண்ணெய்ப் பலகாரம் அவ்வளவு செய்வதில்லை.
ஆமாம்...நீங்கள் செய்தது போல இனிப்பு துக்கடாவும் அருமை தான்.
அம்மா சர்க்கரைப் பாகில் போட்டு எடுப்பார்.
வந்து கருத்தைப் பகிர்ந்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,

பதிவைப் படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா. நலமே பெறுக.

Geetha Sambasivam said...

முன்னெல்லாம் ஊர்களுக்குச் செல்கையில் இந்த மட்ரி தான் நிறையப் பண்ணி எடுத்துக் கொண்டு போவோம். பின்னாட்களில் வட இந்திய செய்முறை பழக்கம் ஆனதில் இதோடு சேர்த்துக் காய்ந்த வெந்தயக்கீரை/கசூரி மேதி சேர்த்துச் செய்கிறோம். அடிக்கடி பண்ணுவது உண்டு. பூரி மாதிரி சாஃப்டாகப் பொரித்துக் கொண்டும் சாப்பிட்டது/சாப்பிடுவது உண்டு.

வெங்கட் நாகராஜ் said...

இங்கே பெரும்பாலான வட இந்தியர்களின் வீடுகளில் தேநீர் உடன் இந்த மட்ரி தான் சாப்பிடுவார்கள். நன்றாக இருக்கும். நானும் சுவைத்தது உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

உங்களுக்கு இந்தப் பலகாரம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்று
நினைத்தேன்.
தில்லி மாமாவின் மனைவி செய்வதாக
அப்போது சொல்லி இருக்கிறார்.
அப்போது டால்டா வனஸ்பதி பிரபலமாக இருந்த காலம்.
மாமியாரும் செய்யச் சொல்வார். இத்தனை
மடிப்புகளுடன் செய்ததில்லை.

நன்றாக இருக்கிறாது.அதுவும் ஓம வாசனை கம்மென்று மணக்கிறது.
நன்றி மா..