Blog Archive

Thursday, April 15, 2021

லில்லி ஏப்ரஹாம் என் தோழி 1964


சென்னையில் எனக்குக் கிடைத்த தோழிகளில் 
முக்கியமானவள் லில்லி.

புரசவாக்கத்தில் ஆங்க்லோ இந்தியர்கள் அதிகம்.
முதலில் பார்த்த போது
அவர்கள் உடையையும் பேச்சையும்
பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக
இருந்தது.
ஆனால் பழகப் பழக அந்தக் குடும்பத்தின் வெள்ளை மனமும்

புரிய என் மனத்தடை அகன்றது.
பாட்டியோடு இருந்ததால், நான் அங்கே அவர்கள்
எழும்பூர் வீட்டுக்குப் போகிறேன் 
என்றால் சற்று மனத்தாங்கல் வரும்.
இருந்தும் ஒரே பஸ்ஸில் போய் வரும் நேரங்களை
வெகுவாக அனுபவித்து ரசிப்பேன்.

அவளது சங்கீதமும் அவளுடைய கிடாரும் 
என்னை அவ்வளவு ஈர்த்தது.
பார்க்க ஒரு பப்ளிமாஸ் போல நல்ல ஆகிருதியுடன் இருப்பாள்.
அவள் கூந்தல் கழுத்து வரை தான்.
குழந்தை முகம். நல்ல சிரித்த தோற்றம்.
எங்கள் குழுவில் எல்லா மானிலத்துப் 
பெண்களும் இருப்பார்கள்.
எல்லா மொழிப் பாடல்களும் என்னையும்
சேர்த்து...... குழுவாகப் பாடுவோம்.
அந்த இனிய நாட்களை நினைத்து இந்தப் பதிவு.

15 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. சின்ன வயது நட்புகளை சிறிதேனும் மறவாது நினைவில் கொண்டு வாழும் உங்களுக்கு என் அன்பான நன்றிகள் சகோதரி. காணொளிகள் பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.

இளமையில் நம்முடன் ஒன்றாகப் பயணித்த பலரின் நட்பை இழந்து விட்டோம் என்று எனக்கு எப்போதும் தோன்றும்.

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள் எப்போதுமே இனிமை.

Angel said...

ஆமாம் வல்லிம்மா .புரசை ,பாரிமுனை வில்லிவாக்கம் மாதவரம் பெரம்பூர் பக்கம் நிறைய ஆங்கிலோ இந்தியர்கள் இருந்தாங்க இப்போ நிறையபேர் ஆஸ்திரேலியா போய் செட்டில் ஆகிட்டாங்க  .அவங்க வீடுகள் பிரிண்டெட் கர்ட்டன்ஸ் ,கட்லரி செட்ஸ் பெரிய டைனிங் டேபிள் அலங்காரம்  எல்லாம் அழகா இருக்கும் .எனக்கும் நிறைய நட்புக்கள் இருந்தாங்க .அவங்க பேசும் தமிழும் கிளி மொழி அழகு .நானும் வீட்டில் திட்டு வாங்கியதுண்டு அவர்களுடன் அதிக பழக்கமா இருந்தப்போ :) 
எல்லாரும் நல்ல மனுஷங்க அன்புக்கு பாரபட்சம் எங்களுக்கு தெரியாதே ..நல்ல நினைவுகள் . 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏஞ்சல் ,என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வது மிக உண்மை.

புரசவாக்கத்தில் ,என் அம்மாவிற்கு வீட்டில் வந்து
பிரசவம் பார்த்தது கூட ஒரு ஆங்க்லோ இந்திய
நர்ஸ் தான்.

பல தொழிகளின் தந்தைகள் ரயில்வேயில்
நல்ல வேலைகளில் இருந்தார்கள்.
அவர்களுக்கு என்று ரயில்வே க்வார்ட்டர்ஸ்
இருக்கும்.
நீங்கள் சொன்ன சீன் சட்டென்று நினைவுக்கு வருகிறது.
லில்லி வீடும் அப்படித்தான்.
அவர்கள் உலகம் தனி.
இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல்
நீங்கள் சொன்னது போல ஆஸ்டிரேலியா
சென்றவர்களே அதிகம்.
திருச்சி பொன்மலையில் வேலை புரிந்த
ஈவிலின் தன் குடும்பத்துடன்
அங்குதான் இருக்கிறாள்.
ஆ!! சொல்ல மறந்தேனே. லில்லிக்கு
இன்னோரு பெயர் விக்டோரியா ரெஜினா:)
அப்போது பட்டத்துக்கு வந்த க்வீன் எலிசபெத்தின்
பெயர். நாங்கள் பிறந்த வருடம்
அது பிரபலமாக இருந்தது.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா,
வணக்கம் மா.
இனிமையான காலத்தில் ஒரு விகல்பம் இல்லாமல்
பழகிய நேரம் இல்லையா அம்மா. யாரையும்
ஜட்ஜெமெண்ட்டலாக அணுகாத வயது.
நீங்களும் வந்து படித்துக் கருத்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி
மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் மா.

உண்மைதான் நாம் இடம் மாறுகிறோம்.
ஒரே இடத்தில் இருக்கும் பாக்கியம் சிலருக்கே
கிடைக்கிறது.
அந்த முறையில் எங்கள் குழந்தைகளுக்கு இன்னும்
அவர்களது பள்ளி, கல்லூரித் தோழர்கள்,

வேலை செய்யும் இடத்தில் பழகியவர்கள் என்று ஏக உறவுகள்:)
எனக்குக் கொஞ்சம் பொறாமைதான்.
இப்போது இருக்கும் நட்புகளையாவது
காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
இளவயது நட்புகள் எப்போதுமே இனிமை.

கோமதி அரசு said...

வாழ்க வளமுடன் அக்கா

கோமதி அரசு said...

மலரும் நினைவுகள் அருமை. பாடல்கள் கேட்டேன் அக்கா நன்றாக இருக்கிறது.

KILLERGEE Devakottai said...

பழைய நினைவுகள் யாவர்க்கும் சுகமானதே... காணொலிகள் கேட்டேன்.

ezhil said...

மலரும் நினைவுகள் என்றுமே இனிமைதான்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இனிய காலை வணக்கம்.
இந்தப் பதிவின் பாடல்கள், அவள்
அறிமுகப் படுத்தியவைதான்.

நல்ல பெண்.அவளும் ஆஸ்திரேலியா
பார்த்துப் போயிருப்பாள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
பழைய நட்புகளும் அவர்கள்
கொட்த்த பாடல்களும் மிக மிக அருமைதான். பாடல்களைக் கேட்டதற்கு
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மலரும் நினைவுகள் என்றுமே இனிமைதான்//
Very very true dear Ezhil.