என் தோழி ஒருவருக்கு மழை என்றால்
பயம். சென்னை வெள்ளத்தில் மாட்டிய அனுபவம்.:(
மழைக்காலங்களில் சென்னை அழகாக இருப்பது போலத் தோன்றும்.
அதாவது வெகு காலத்துக்கு முன்.
கார் மாதிரி வண்டியில் போகிறவர்களுக்கு அவ்வளவு கவலை
இல்லை. இரு சக்கிர வாகனங்களில்
செல்வோருக்கும், பஸ்ஸில் பள்ளி சென்று வரும்
குழந்தைகளுக்கும் மிக மிக சிரமம்.
இந்த மழைக்குப் பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்
ஒரே உத்சாகம்.
பள்ளி மூடப்போகும் சமயத்தில் கொட்டித் தீர்க்கும்.
நான் குடையோடு பஸ் நிற்கும் இடங்களுக்குச் சென்று விடுவேன்.
சாலையில் போகிறவர்கள் எல்லாம் நம் வீட்டு வாசலில் அப்போதிருந்த முகப்புக்குக் கீழே நின்று கொள்வார்கள். நேற்று இங்கே பெய்த மழை கொண்டு வந்த
நினைவுகள்:)
24 comments:
முதல் பாடல் காட்சி பழைய பம்பாயாக இருக்ககூடும்.
மழை இன்று பெருநகரங்களுக்கு இடையூராக ஆக்கி கொண்டது மக்களே...
மழையில் நனைவது என்றால் சிறுவயதில் கொண்டாட்டம்தான் இப்போது அப்படி அல்ல அதுவும் நாய்க்குட்டி வந்த பின் மழை என்றாலே அலர்ஜிமாதிரி ஆகிவிட்டது காரணம் மழை நேரத்தில் நாய்குட்டியை கூட்டி சென்றால் வந்த பின் அதனை துடைத்து சுத்தம் செய்வதர்குள் போதும் என்று ஆகிவிடும். காரணம் என் நாய்க்குட்டியின் முடிகள் பஞ்சுகள் போல இருப்பதால்..
ஆனாலும் மழை பெய்யும் போது வேடிக்கை பார்க்க பிடிக்கும்
மழை என்றால் எப்போது எனக்கு ஞாபகம் வருவது சில வருடங்களுக்கு முன் வெர்ஜினியா பீச்சிற்கு நீயூஜெர்சியில் இருந்து போகும் வெர்ஜினியா நகரத்திற்கு அருகே செல்லும் போது அங்குள்ள பாலத்தில் அந்த பாலம் மிகவும் நீளமானது அதில் பாதி கடலுக்குள்ளும் பாதி கடல் மேலும் செல்லும் அதில் நான் கார் ஒட்டி செல்லும் போது கடுமையான மழை மதிய நேரம் என்றாலும் இரவு போல டார்க்காக ஆகி எங்கே செல்கிறோம் என்பது கூட புரியாமல் காரை ஒட்டி சென்றோம் 5 அடி தூராத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்பதும் தெரியவில்லை அங்கேயே அப்படியே காரையும் நிறுத்த முடியாது நல்லவேளை காரில் ஜிபிஎஸ் இருந்ததால் அது சொல்லும் பாதையில் மிக மெதுவாக ஒட்டிச் சென்றோம் இன்று கூட அதை நினைத்து பார்த்தால் திகிலாகத்தான் இருக்கிறது
முதல் பாடலும் சீனும் மிக அருமை அமித்தாப் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவரின் நடிப்பிற்கு ஈடு இணை இல்லை என்பேன்
சின்ன வயதில் மழை எனக்குப் பிடிக்கும். பாளையங்கோட்டையிலிருந்து கீழந்த்தத்திற்கு நடந்து வரும்போது மழை வந்தால்தான் கஷ்டம்.
கல்ஃபில் மழை என்பது சிறுதூரல்கள்தாம்.
எப்போதுமே மழையைக் கண்டு ஓட மாட்டேன். நனைவது பிடிக்கும். மண் வாசனையும் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம். ஆமாம் இது பழைய மும்பை தான்.
நாங்கள் அங்கே இருந்த போது கூட மழைக்காலம் அழகுதான்.
இப்போது எல்லாம் மாறி விட்டதுதான் வருத்தம்.
காலம் மாறத்தான் செய்யும்.
அன்பு தீஜ் துரை மா,
இந்த ஊரில் பேய் மழை பொழியும்.
அதுவும் இடி மின்னல் உடன்.
நாங்கள் வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது
அது ஜூலை மாதமாக இருக்கும்.
காரின் மேல் தடதடவென்று சத்தம் போடும். மின்னல் வெட்டும்.
மாப்பிள்ளை சாமர்த்தியமாக ஓட்டி வருவார்.
உங்கள் அனுபவத்தைக் கேட்கும் போதே
நடுக்கமாக இருக்கிறது.
நாய்க்குட்டி நனைந்தால் மிக சிரமம் தான்.
இது போல சமயங்களில் மழையை ரசிக்க முடிவதில்லை.
நன்றி மா.
உண்மைதான் துரை. இது மிகப் பழைய படம். அத்தனை உயர அமிதாப்ற்கு ,குள்ள மௌஷ்மி
ஜோடி:)
இருந்தாலும் அமிதாபின் நடிப்பைப்
பழுது சொல்லவே முடியாது.
சூப்பர் ஸ்டார் தான்.அன்பு தீஜ் துரை மா,
அன்பு முரளிமா,
மழையில் நனைய பெற்றோர் விட்டது கிடையாது.
அதனால்யே பள்ளி விட்டு வரும்போது தூறினால்
மிகப் பிடிக்கும்.
அதுவும் சத்தம் போடாத சன்னமான மழையை
மும்பையில் ரசித்து நடந்திருக்கிறேன்.
குளிரில்லாத மழை.
மிக மிக நன்றி மா.
முதல் பாடல் மழை என்பதால் பெண்குரல் போட்டிருக்கிறீர்கள். ஆனால் எனக்கு இதை கிஷோர் பாடுவது பிடிக்கும்.
உண்மைதான். 2015 சென்னை வெள்ளத்துக்குப் பின் மழை என்றாலே பயமாகத்தான் இருக்கிறது. ஆபத்தில்லாமல் இருக்கும்வரை மழையை ரசிக்கலாம்.
கில்லர்ஜி சொல்வதுபோல மழையைப் பார்த்து பயப்படும்படி வைத்துக் கொண்டது 90 சதவிகிதம் மனிதர்களின் பொறுப்பற்ற தன்மைதான்,
நெல்லை சொல்வதுபோல எனக்கும் அமிதாப் பிடிக்கும். கல்லூரி பாடபுத்தகத்திலேயே முதல் பக்கத்தில் அவர் படம் ஒட்டி வைத்திருந்த நினைவு வருகிறது! பொதுவாக உயரமானவர்களைப் பார்த்தாலே ரசிப்பேன். உதாரணமாக வெங்கட்.
மதுரையில் இருந்தவரை மழையை ரசித்திருக்கிறேன். ஏனெனில் அப்போதெல்லாம் தெருக்களில் தண்ணீர் தேங்கிப் பார்க்கவில்லை. வீடுகளும் உயரமான படிகளோடு இருந்ததால் தண்ணீர் புகுந்தது இல்லை. சென்னையிலும் ஆரம்ப நாட்களில் மழையினால் பிரச்னை ஏதும் இருந்தது இல்லை. பின்னர் வந்த நாட்களில் மழை என்றாலே கவலை/பயம் தான். அதே மழை ராஜஸ்தான்/குஜராத்தில் அனுபவித்து ரசித்திருக்கிறேன்.
என்னதான் கஷ்டங்களை அனுபவித்தாலும் மழையை வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியலை.மழை வேண்டும். நிறையப் பெய்ய வேண்டும்.
மழை என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் நனைவது மிகவும் பிடிக்கும் . சிறுவயதில் நனைந்து வருவேன் பள்ளியிலிருந்து அம்மாவிடம் திட்டு வாங்குவேன்.
மழை யாரும் தீங்கு தராதவரை பிடித்த ஒன்றுதான்.
கடும் மழை தரும் பாதிப்பு மனதுக்கு வருத்தம் தரும்.
திருவெண்காட்டில் நாங்கள் இருவரும், அப்புறம் குழந்தைகளுடன் மழையை ரசித்தது, அப்புறம் இருந்த வீடுகளில் மழையை ரசித்த காலங்கள் மனதில் வந்து போகிறது.
பாடல்கள் கேட்டேன்.
மழை குறித்த நினைவுகள் நன்று. எனக்கும் மழையில் நனைவது மிகவும் பிடித்த விஷயம்.
காணொளிகள் பிறகு தான் பார்க்க முடியும்.
மழை பிடித்தமானதுதான்
வணக்கம் சகோதரி
மழை எனக்கும் மிகவும் பிடிக்கும். நனைந்தால் உடம்புக்கு வந்து விடுமென அம்மா கண்டிப்பதால், பிறந்த வீட்டிலிருக்கும்வரை மழையை கண்ணால் பார்த்து ரசிப்பதோடு சரி... அதுவும், இடி மின்னலோடு மழை என்றால் பார்ப்பதற்கும் தடை...:)) திருமணமான புதிதில் சென்னை வீட்டில் ஒருசமயம் பெரியவர்கள் வெளியூருக்கு சென்றிருந்த போது, நானும், என்னைப் போலவே மழையில் நனைந்து ரசிக்க ஆசைப்பட்ட என் இளைய நாத்தனார் பெண்ணும் (அவளுக்கும், எனக்கும் ஐந்தாறு வயது வித்தியாசம்) எங்கள் வீட்டு திறந்தவெளி பால்கனியில் எதிரில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் பார்க்காமலிருக்க, மறைப்புக்கு கொடியில் கனத்த பெட்ஷீட் போட்டுக் கொண்டு, மழை நிற்கும் வரை ஆடிப்பாடி களித்தது இன்னமும் என் நினைவுகளில் பசுமையாய் இருக்கிறது...
தங்கள் மழை பதிவும் மழையில் நனைந்தபடியான முதல் பாடலும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
மும்பையின் மழை அழகானது. அதிலும் அந்த
கடற்கரையோரமாக நடந்து போவது ஒரு தனி அனுபவம்..
மழை பெய்கிறதே என்று கவலை கொள்ள வைத்து விட்டார்களே .:(
அத்தனை அசௌகரியம் கொடுத்து விட்டது.
கேரளாவிலும் மழை பெய்கிறது.
எல்லோரும் எப்படியோ சமாளித்து இயற்கையோடு
வாழக் கற்று விட்டார்கள்.
ஆமாம் அமிதாபைப் பிடிக்காதவர்கள் யார் இருக்கக் கூடும்.
கம்பீரம் இன்னும் கலையாத உருவம்.
நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைத்துக் கொண்டீர்களா!!!
என் தம்பி சிவாஜி படம் ஒட்டிக் கொள்வான்:)))))
அன்பு கீதாமா,
மதுரையில் மழை பெய்யும் ஐப்பசி,கார்த்திகை
காலங்களில் மிகவும் ரசித்திருக்கிறேன்.
அதுவும் கொடைக்கானலின் சாரல் காலங்கள், குற்றாலத்தின் சாரல்
எல்லாமே முகத்தில் படிவது போல இருக்கும்.
இப்போது எப்படியோ தெரியவில்லை.
குஜராத்,ராஜஸ்தான் மழை எப்படி இருக்கும் என்று யோசித்துப்
பார்க்கிறேன்.
தெரியவில்லை.
சென்னை வெள்ளங்கள் எல்லோரையும் மிரட்டி விட்டது.
மழை வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
வருண பகவான் ,வஞ்சமில்லாமல்
வர்ஷிக்கட்டும்.நன்றி மா.
அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
திருவெண்காட்டு வீட்டைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
அப்புறம் மாறிய புது வீட்டைப் பற்றியும் தான். மழை நினைவுகளும்,
தெருவில் கப்பல் செய்து விட்டதும், அது ஓடி மூழ்கியதும் நினைவுக்கு வருகிறது,'
இப்பொழுது பேரனுக்கு மழை அனுபவங்கள் இருக்கின்றனவா?
மதுரையிலும் சில இடங்களில் வெள்ளம் வந்து அவதிப்பட்டார்கள்
என்று தெரியும்.
பெய்யும் மழையைச் சேமித்து வைத்தால் நல்லதுதான்.
வீணாக்கினால் தான் வருத்தம். மிக நன்றி மா
அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம்..
மழையைப் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்று நினைக்கிறேன்.
நன்றி மா. வார நாட்களில் நீங்கள் வந்து படிப்பதே சிரமம்.
பிறகு பாருங்கள்..
அன்பு ஜெயக்குமார்,
தஞ்சை மழையை அனுபவித்திருக்கிறேன்.
அங்கே வெள்ளத்தையும் பார்த்திருக்கிறேன்.
நன்றி மா.
அன்பு கமலா மா,
அத்தனையும் உண்மைதான்.
அம்மாக்களுக்குப் பெண்களிடம் அதிகம் அக்கறை.
சளிவந்தால் யாருக்கு லாபம்:)
அதுவும் வீட்டுக்கு மூத்தவளாக இருந்து விட்டால்
இடி மின்னல் ஆகாது.
நீங்கள் புகுந்த வீட்டுக்கு வந்த பிறகாவது,
மாடி மழையில் நனைய முடிந்ததே!!!
அந்தக் காட்சியையும் ரசித்துக் காண்கிறேன்.
இது போல நன்மைகளை நினைக்கும்
போதே இனிமை. அன்பு கமலா வாழ்க வளமுடன்.
Post a Comment