Blog Archive

Saturday, March 06, 2021

வெங்கடேஷ் பட் ....அரைத்துவிட்ட சாம்பார்.

10 comments:

Avargal Unmaigal said...

இவர் நடத்தும் ஷோ பார்ப்பதர்கு பிடிக்கும் ஆனால் இவர் சொல்லும் மெத்ட் முறையில் செஞ்சால் சரியாக இருக்குமா என்பதுதான் என் கேள்வி.. இவர் மட்டுமல்ல இவர் மட்டுமல்ல பிரபலங்கள் சொல்லும் மெத்ட் என்னவோ எனக்கு டேஸ்டாக இருப்பதில்லை.. இப்படித்தான் இவர் சொன்னபடி ஆணியன் ராவ தோசை செய்யாலாம் என்று அவர் சொன்ன முறைப்படி அளவுப்படி நேரப்படி செய்த்தேன் நல்லாவே வரவில்லை வீட்டில் உள்ளவர்கள் ஏன் இன்று ரவா தோசை நன்றாகவே இல்லை என்று கேட்கும்படி ஆகிவிட்டது அதன் பிந்தான் சொன்னே இவர் செய்முறைப்படி செய்தேன் என்று... காரணம் இவர் செய்வதைவிட என் ராவா தோசை செய்முறை மிக எளிது மிக நன்றாக வரும்..


இவர்கள் சொல்லுவதில் சி டிப்ஸ்க்கள் பயனளிக்குமே தவிர மற்றவைகள் சரி வராது ஒரு வேளை சமைக்க தெரியாதவர்களுக்கு பிடிக்குமோ என்னமோ

என்னை பொருத்தவரை பிரபலங்கள் சொல்லும் மெத்ட்டை விட சாதாரண் வீட்டு பெண்மணிகள் சொல்லும் மெத்ட் ருசியாக வருகின்றது

Angel said...

எனக்கும் இவர் ரெசிப்பீஸ் ரொம்ப பிடிக்கும் .எல்லா ரெசிபியும் பார்த்து எனக்கு வேண்டியதை எடுத்துப்பேன் .அப்படித்தானா உடுப்பி ரசப்பொடி செய்து பருப்பில்லாம அந்த பொடியை போட்டு ரசம் வைச்சேன் செம ருசி .நீர்தோசை இவர் செய்முறையில் நல்லா வந்தது.அப்படித்தான்  பொங்கல் கூட  சூப்பரா வந்தது .

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு துரை.
என் மகள் இவர் செய்முறைக்கு சரி என்றே சொல்ல மாட்டாள்.எண்ணெய்,
நெய் அதிகம் என்று சொல்லி விடுவாள்.

நீங்கள் சொல்வது சரி. ரவா தோசை எனக்கும் நன்றாகச் செய்ய வரும். இவரது காணொளிகளை விரும்பிப் பார்ப்பேன்,
அவ்வளவுதான். மிக மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

ருசியான சாம்பார்.  இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி எண்ணெய் விளம்பரம் செய்வார்... !!    "இதுதான் நான் உபயோகிக்கும் எண்ணெய், நல்லது, வல்லது,  பல சத்து உள்ளது" என்றெல்லாம் சொல்வார்!

Geetha Sambasivam said...

இவர் சொல்லித் தான் நான் நீர் தோசை செய்திருக்கேன். நன்றாகவே வந்திருக்கு. அதே போல் புளிக்காய்ச்சலும் இவர் சொன்ன முறையில் தான் இப்போதெல்லாம் பண்ணுகிறேன். நன்றாகவே இருக்கிறது. ராகேஷ் ரகுநாதனின் செய்முறையும் பரவாயில்லை.

Geetha Sambasivam said...

ரவாதோசை எனக்கும் நன்றாக வரும். நேற்று கோதுமை மாவில் தோசை வார்த்தேன். நன்றாகவே வந்தது. கரைத்த தோசை பொதுவாகவே மாவு கரைக்கும் விகிதத்தில் இருக்கு. அதோடு ரவாதோசைக்கு அதிகம் ஊற வேண்டாம். கோதுமை தோசை ஊற ஊற நன்றாக வருகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
எனக்கும் இவர் செய்முறைகளில் வத்தக் குழம்பும்
பொடி வகையறாவைக் கடைப்பிடிக்கும்படி

இருக்கும்.
நீர் தோசை பார்த்தேன் செய்யவில்லை.
இது போல செய்முறைகளில் கொஞ்சம் நெய் ,எண்ணெய்
இவைகளைக் குறைத்து செய்ய வேண்டும்
அவ்வளவுதான்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவர் நிகழ்ச்சியை அந்த எண்ணெய்க்காரர்கள்
ஸ்பான்சர் செய்கிறார்கள்.
அவர் சொல்லித்தான் ஆகவேண்டும்:)
நல்ல நாளாக இருக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.

நன்றாக விளக்கமாகச் சொல்கிறார்.
அவரைக் கேட்டு செய்வது எளிதாக இருக்கிறது.
நல்ல எனர்ஜி. பேசிக்கொண்டு செய்வதும் மனதுக்குப்
பிடித்தது.
ராகேஷ் ரகு நாதன் பதிவுகளில் அவரது அம்மாவை மிகப்
பிடிக்கும்.