Blog Archive

Monday, March 08, 2021

பழைய கதை.2018

வல்லிசிம்ஹன்M onday, March 05, 2018
குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.

பல காரணங்கள்.
1,
சர்க்கரை அளவு ..அதிகமாக இருப்பதோ ,குறைவாக இருப்பதோ.
2,
இரத்த அழுத்தம்  அதிகம் ,அல்லது குறைவு,
3
முந்தின நாள் ஜீரணம் சரியாக இல்லாமல், இழந்த நீர்ச்சத்து,
4,
தூக்க மருந்து உட் கொள்பவர்களின் தூக்கம் தடை படும்போது.

5, இருமலுக்கான ஸிரப் அதிக அளவில் உட்கொண்டு
ஒருவித மயக்கத்தில் இருப்பது.

6,கடைசி எல்லோருக்கும் பொருந்தாது.
Aneurism...முன்பே தலையில் அடிபட்டவர்கள், வேறு விதமான
சங்கடங்களால் ,உடலில், ரத்தத்தில் உலவும் விபரீதமான
இரத்தக் கட்டி.
    இனி விளைவுகளைப் பார்க்கலாம்.
இவை எல்லாமே மயக்கத்தில் கொண்டு விடுவதில்லை.
பகலில் விழுந்துவிட்டால் ,சத்தம் கேட்டு வந்து காப்பாற்றப் படும் சாத்தியம்.

இரவாக இருந்தால் விழுந்தபிறகு எங்கிருக்கிறொம் என்று தெரியாத நிலை.
இறைவன் அருளில் எனக்கு பத்து நிமிடங்களில் விழிப்பு வந்ததாக நினைக்கிறேன்
உடல் அசைக்க முடியவில்லை.  என் வாழ்க்கையில் இரது வரைக் காண்பிக்காத தைரியம் எங்கிருந்தோ வந்து ,குளியலறையின் வாசலுக்குக் கொண்டுவிட்டது.

வைத்தியர் சொன்ன அறிவுரை.
எப்பவும் அலர்டாக இருக்க ஆக்சிஜன் தேவை. நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
கழிப்பறை வேலை முடிந்ததும் உடனே எழும்பவேண்டாம். ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு,
பக்கத்தில் இருக்கும் நகராத பொருட்களைப் பிடித்து எழுந்து நின்று,
 தீர்க்கமாக மூச்சு விடவேண்டும்.
பிறகு மெதுவே நடந்து வெளியே வரலாம்.

பாத்டப் எங்காயாவது தலையில் இடித்திருந்தால் ரத்தக் காயம் நிச்சயம். உடனே
உதவி தேவை.
அடுத்த ஸ்டெப் எமெர்ஜென்ஸி போவதுதான். எங்கே அடிப்பட்டிருக்கிறது, எலும்பு முறிவு இருக்கிறதா,. ஸ்கான் அவசியமா என்றேல்லாம் வைத்தியர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வயதானவர்களின் குளியறையில் த்ண்ணீர் தேங்கக் கூடாது. இந்த ஊரில் அந்தப்பிரச்சினை இல்லை.
நம் ஊரில் உண்டு.
டாய்லெட் இருக்குமிடத்தைச் சுற்றி என் மகன் கம்பி போட்டு வைத்து இருக்கிறான் ..சென்னையில்.
குளிக்கும் இடத்திலும் அவ்வாறே.
கீழே வழுக்காத தரை.

தினம் மூச்சுப் பயிற்சி.
நிதானமான அழுத்தமான நடை,
அடிக்கடி நீர் பருகுதல். படுக்கும் முன் இதமான பால்.

அதிக வருத்தம் ,கவலை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு,கடவுள் பிரார்த்தனை.

என்க்குத்தெரிந்ததைச் சொல்லி இருக்கிறேன். மருத்துவர்கள் இன்னும் அழகாகச் சொல்வார்கள். நலமே வாழ்க..

Fainting during urination (micturition syncope): What causes it? - Mayo ...
https://www.mayoclinic.org/diseases-conditions/vasovagal-syncope/.../faq-20058084
Micturition (or post-micturition) syncope is fainting during or, more commonly, immediately after urination due to a severe drop in blood pressure. Micturition syncope is most common in older men and usually occurs at night after a deep sleep. The exact cause of micturition syncope isn't fully understood.

#dedicated to my loving husband Singam simmu.
Posted by வல்லிசிம்ஹன் at 9:00:00 PM

12 comments:

ஸ்ரீராம். said...

உபயோகமான குறிப்புகள்.  நானும் வீட்டில் பற்றிக்கொண்டு எழ ஒரு கம்பி பதித்திருக்கிறேன் - மாமியாருக்காக.  அவர் இன்னமும் பிடிவாதமாக இந்தியன் கழிப்பறையைதான் உபயோகிக்கிறார்.

வெங்கட் நாகராஜ் said...

பலருக்கும் பயனுள்ள தகவல்கள்.

நலமே விளையட்டும்.

நெல்லைத்தமிழன் said...

முக்கியமானதை எழுதியிருக்கீங்க. என் காலில் க்ரிப் இல்லை. கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் வழுக்கும், எனக்கும் அந்த ஃபோபியோ உண்டு. தரையில் தண்ணீர் இருந்தால் என்னை அலர்ட் பண்ணிடுவாங்க.

அலர்ஜி வந்தால் ப்ரெஷர் எனக்கு குறையும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பாத்ரூமில் விழுந்து சில பல நிமிடங்கள் (ஓமான் பயணத்தில்) கிடந்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

இந்த மாதிரியான நிலைமை எல்லாம் வராமல் கவனமாக நம்மை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். கவலை ஒரு பக்கம், மற்றவர்களுக்குக் கொடுக்கும் தொந்திரவு ஒருபக்கம். இருக்கும் வரை நல்லபடியாக இருக்கணும்.

Geetha Sambasivam said...

அவரால் இந்தியக்கழிவறையில் உட்கார்ந்து எழுந்து கொள்ள முடிகிறது அல்லவா? அது தான் நல்லது ஸ்ரீராம். அவர் சௌகரியப்படி விடுங்கள். அதே போல் கீழே அமர்ந்து கைகளால் சாப்பிடுபவர்களையும் அப்படியே சாப்பிட விட வேண்டும். அது தான் உடம்பில் ஒட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள தகவல்கள்
நன்றி சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
எழுந்திருக்கும் போது ஒரு பிடிப்பு வேண்டி இருக்கிறது.
முழங்கால் எப்பொழுதும் பிரச்சினை 2000 த்திலிருந்து
தொடர்கிறது.
எழுந்திருக்கும் போது பிடித்துக்கொள்ள திடமான
எதுவும் இல்லாவிட்டால் வலியும் தடுமாற்றமும் அதிகரிக்கும்.

உங்கள் மாமியாரால் முடியும் என்றால் அது நல்லதுதான்.
திடமாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் நம் பிரார்த்தனை அன்பு வெங்கட்.
அனைத்து முதியோர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஃப்ளாட் ஃபீட் இருந்தால் பாலன்ஸ் செய்வது கடினம். ஓமனில் விழுந்தீர்கள் என்று கேட்டு
வருத்தமாக இருக்கிறது.

இங்கேயும் பசங்க சந்தியா வந்தனம் செய்யும் போது,
அங்கே உடனே துடைத்து விடுவார்கள்.
பாட்டி இங்கே வராதேன்னு கூப்பாடு வேற:)ஜாக்கிரதையாக இருக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அதேதான் எப்பொழுதும் வேண்டுதல்.
நம்மால் சின்னவர்களுக்கு சிரமம் கூடாது.
பகவான் தான் நம் பக்கம் இருக்கணும்.

நீங்கள் சொல்வது போல் என்னாலும் கீழே உட்கார்ந்து எழுந்திருக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி மா.

கோமதி அரசு said...

பயனுள்ள குறிப்புகள்.

//தினம் மூச்சுப் பயிற்சி.
நிதானமான அழுத்தமான நடை,
அடிக்கடி நீர் பருகுதல். படுக்கும் முன் இதமான பால்.//

நல்ல பலன் தரும்.

கவலைகளை ஒதுக்கி விட்டு இறைவழிபாடு செய்து படுக்க வேண்டும் அதுதான் நல்லது. ஆனால் இரவு நேரம் கவலைகள் மனதை சங்கடப்படுத்துகிறது. அதிலிருந்து மீள வேண்டும். அதற்கும் இறையருள் வேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவல்..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்..