Blog Archive

Tuesday, February 16, 2021

என்றும் நம்முடன்

வல்லிசிம்ஹன் https://youtu.be/pRZXDaweU10


என்றும் நம்முடன் இருக்கும் குரல்.
சுசீலா அவர்களைப் பற்றி வெறும் காணொளி
போதாது. அவர்களின் குரலை எத்தனை
பதிவில் பதிந்தாலும் ஒரு பெரிய மலையின் ,சமுத்திரத்தின்
ஓரமாக நின்று பார்க்கும்
சிறிய முயற்சியாகத் தான் முடியும்.70 ஆண்டுகளாக
நம்மைத் தொடரும் இந்தக் குரல்
தந்த களிப்பும், நிம்மதியும்,உற்சாகமும்
வேறு எவராலும் தர முடியாது.
நம்முடன் இப்பொழுதும் ஒளிவிடும் இந்த 
அருமையான வரத்தைப் பற்றி ஒரு சின்ன காணொளி.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

என்றும் சுசீலா. என்றும் வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

மிக அருமையான காணொளி.
சுசீலா அவர்களின் வாழ்க்கை வரலாறு அவரின் புகைப்படங்கள் எல்லாம் அருமை.

இறைவன் கொடுத்த அருமையான பாடகி வாழ்க வளமுடன்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை இனிமையான குரல்வளம் அவருக்கு.

மாலையில் தான் காணொளி பார்க்க முடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
தாமதமாகப் பதில் சொல்கிறேன். மன்னிக்கணும்.
சுசீலா அவர்களின் குரலை இத்தனை வருடங்களாகக்
கேட்டு வருகிறேன்!!
இப்போதுதான் பதிவிடத் தோன்றுகிறது.

நம் வாழ்க்கையின் நலங்களில் அவரும் ஒன்று.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா. நல்லதாக ஒன்றைப் பார்த்தவுடன் பதிகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம். மிக நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்