Blog Archive

Monday, February 08, 2021

இன்றும் இன்னும் வரப்போகும் நாட்களுக்கான.

தை மாத நாட்கள் குளிர் நின்று வெய்யில் படர ஆரம்பிக்கும்
காலம். 
பலப் பல திருமண் நாட்கள். இன்று 
என் மாமனார் மாமியார் திருமண நாள். 1930இல் 
நடந்தது. 
அந்தக் கால மைலாப்பூரில் 
இப்போதைய லேடி சிவஸ்வாமி, அப்போதைய நேஷனல்
பெண்கள் பள்ளியில் படித்த பெண்ணைப்
பார்த்து இவளே என் மனைவி என்று தீர்மானம் செய்தவர்
பி எஸ் பசங்க பள்ளியில் படித்த மாமனார்.

அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகே
திருமணம் நடந்தது.
அவ்வளவு பெரிய ஆளுமையுடன் இருந்தவரை
என் மாமியார் சமாளித்த விதம் 
மிக அருமையும் சிறப்பும் நிறைந்தது.
மாமனாரின் அரட்டல், உருட்டலுக்கெல்லாம்
மசிந்து விடமாட்டார்.
''நீ இரு மாமா. நானெல்லாத்தையும் பார்த்துக்கறேன்
என்று சொல்லி விடுவார்.!"
பெற்ற நான்கு  பெண்களுக்கும் அருமையாகச் சீர் செய்து
சுணங்காமல் பார்த்துக் கொண்டு,
மாமியார் சொற்களுக்கு அசராமல்,
துணைக்கு என்னையும் மருமகளாக
ஆக்கிக் கொண்டவர்.

47 வருடங்கள் மங்கலமாக வாழ்ந்து 
மாமனாரையும் நிறைவாகவே அனுப்பி வைத்தார்.
ஒரு குடும்பம் ஸ்திரமாக இருக்க

என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ
அவற்றைச் செவ்வனே செய்தவர்.

கண் பார்வை மங்கின காலத்திலும் அவர் காட்டிய தைர்யமும்
தன் நம்பிக்கையும் அளவிட முடியாதது.
இந்த இனிய தம்பதியை,
என் கணவரை எனக்குக் கொடுத்தவர்களைப்
போற்றி வணங்குகிறேன்.
👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫

8 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள்.  அவர்களின் ஆசி என்றென்றும் குடும்பத்தாருக்கு இருக்கும்.  

கோமதி அரசு said...

அருமையான நினைவுகள்.
அத்தை , மாமாவுக்கு வணக்கங்கள்.

பகிர்ந்த பாடல்கள் இரண்டும் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நல்லதொரு தம்பதி. ஆதர்ஸம் இருவரிடையும்
கண்ணால் பார்க்க முடியும். நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
நல்ல ஜோடி இருவரும்.
விடாமல் அரட்டை அடிப்பார்கள்.
எத்தனை தடவை அம்மாவை நடக்க வைப்பாரோ தெரியாது.
காப்பிக்காக அழைத்துக் கொண்டே இருப்பார்.
அவரது தோழர்கள் கூட்டம் வேறே!!!
மாமா'' வெளியில் தொங்கும் வீட்டுப் பெயரை எடுத்துவிட்டு
''சுந்தரராஜன் கஃபே' என்று போட்டுவிடு"
என்று அலுத்துக் கொள்வார்.

Geetha Sambasivam said...

மிக அருமை. நீங்கள் மிக அற்புதமான நினைவலைகளைக் கொண்டிருக்கிறீர்கள். ஏற்கெனவே உங்க மாமியார் பத்தி எழுதி இருப்பதையும் படிச்சிருக்கேன். இப்போவும் படித்து ரசித்தேன். மாமியார்/மாமனார் ஒருவருக்கொருவர் சொந்தமோ? "மாமா" என அழைத்திருக்கிறாரே அதனால் கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

மிக ஒற்றுமை இருவரும். மாமனார் நல்ல ஆகிருதியுடன் உயரமாக இருப்பார். மாமியார் குள்ளம். ஆனாலும்
அப்படி ஒரு பொருத்தம்.

உறவில்லை. அவருடைய சகோதரி குழந்தைகள் மாமா என்று அழைத்ததால் மாமனார் அவரது சகோதர்ர்கள் எல்லோருமே
மாமா என்று அழிக்கப் பட்டாரகள்.
எல்லா மாமியார்களும் தத்தம் கணவரை மாமா என்றே அழைப்பார்கள்:)))))

வல்லிசிம்ஹன் said...

திருத்தம் . அழைக்கப் பட்டார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.

அவ்வப்போது இந்த இனிமையான நினைவுகளை எண்ணிப் பார்ப்பதும் சுகம்தான்.