Blog Archive

Wednesday, February 03, 2021

தந்தை என்னும் தெய்வம்

வல்லிசிம்ஹன்
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ
என்று ஒரு பழைய பாடல்.

சில பாடல்கள் நம்மை உலுக்கி
கலங்க வைக்கும். 
அனேகருக்கு தந்தை என்பவர் ஒரு முன் மாதிரி. எங்கள் அனைவருக்குமே 
அப்பா என்றால் தனிதான்.

நாங்கள் ஒன்று கேட்டு அவர் தராமல் இருந்தார் என்பதே 
கிடையாது.

அம்மாவின் சொற்களையும் மீறி அதை நிறைவேற்றுவார்.
இவர்கள் எல்லாம் இல்லாமல் நானும் இருந்து கொண்டிருக்கிறேன்.

அவர் இருந்தால் சொல்லி இருப்பார் உனக்கென்று கடமைகள்
இருக்கும் போது
அதிலிருந்து நழுவ முடியாது. 
கீதையின் வார்த்தைகளைச் சொல்லுவார்.

பள்ளி நாட்களில் நான் வீடு திரும்ப நேரம் எடுத்தால்
திரும்பும் வழியில் அவரைப் பார்க்கலாம்.
என்னுடன் வரும் தோழிகளைக் கண்டுவிட்டு
வீடு திரும்பி விடுவார்.

என்னப்பா ,காவல் தெய்வமா உங்க அப்பா
என்று சொன்ன தோழியுடன் இரண்டு நாட்கள்
பேசவில்லை நான்.

என் தம்பியின் மகள் பள்ளியிலிருந்து வர
தாமதமாகுமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு
ஹோலி ஏஞ்சல்ஸ் வாசலிலேயே 
நிற்பார்.
திருமணம் நடந்தவுடன் கடிதங்களில்
அறிவுரை தொடருமே தவிர
மாப்பிள்ளையை விமரிசனம் எல்லாம்
செய்ய மாட்டார்.
அப்படி ஒரு பாசம் அவர் மேல்.
அதே பாசம் பேத்திக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடனும்.
அன்பு தெய்வம் அப்பாவுக்கு 25 ஆம் வருட அஞ்சலிகள்.
உங்கள் தியாகத்தால் நான் வாழ்கிறேன் அப்பா.🙏

10 comments:

கோமதி அரசு said...

அப்பாவின் நினைவு நாளில் அப்பாவின் நினைவுகள் பகிர்வு அற்புதம்.

பாசமுள்ள அப்பா எப்போதும் ஆசிகள் வழங்கி கொண்டே இருப்பார்கள்.

நினைவுகளில் வாழும் அப்பாவிற்கு வணக்கங்கள்.

ஸ்ரீராம். said...

அப்பாவின் நினைவுகள் ஸ்பெஷல்தான்.  என் அப்பா தன் மான்ஸில் இருபப்தை அதிகம் வெளியில் சொன்னதில்லை.  அவரது செயல்களில் உணரலாம் வராது அக்கறையை.

KILLERGEE Devakottai said...

//உங்கள் தியாகத்தால் நான் வாழ்கிறேன்//

அற்புதமான வார்த்தை பலருக்கு இது தெரிவதில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

தந்தை என்றும் சிறப்பு தான்.
தனக்கு மறுக்கப் பட்ட நல்ங்களைக் குழந்தைகளுக்கு
அள்ளிக் கொடுப்பார் இல்லையா அன்பு தேவ கோட்டைஜி.
நன்றி மா. இப்பொழுதில்லாவிட்டாலும் எப்பொழுதாவது உணர்வார்கள் அப்பா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.

நலமுடன் இருங்கள். கடிந்து கொள்ளும் வழக்கமே
இல்லாத தந்தை.
கொடுத்து வைத்தே நாம் இவர்களுக்கு மகள்களாகப்
பிறந்தோம்.
ஆமாம் எங்கிருந்தாலும் ஆசிகளை வழங்கிக் கொண்டிருப்பார்கள் நம்
பெற்றோர். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.

அத்தனையும் உண்மை. தந்தைகள் அதிகம் பேசுவதில்லை. அம்மாவிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வார்கள். மைலாப்பூருக்கு
ஃபோன் செய்வார். என்னம்மா குட் மார்னிங்க் என்று சொல்லிவிட்டு அம்மாவிடம்
ஃபோனைக் கொடுத்து விடுவார்.

தான் கேட்க வேண்டிய கேள்விகளை அவரிடம் சொல்லிக்
கேட்கச் சொல்வார்,
பாவம் என் தந்தை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அப்பாவின் நினைவு நாளில் அவரைப்பற்றிய பதிவு அருமை சகோதரி. நானும் அப்பாவின் நினைவில் தினமும் கரைபவள். அப்பாவின் தியாகங்கள் பெரிது. அந்தளவிற்கு நாம் செய்கிறோமா என்றால், இல்லை என்றுதான் பதில் வரும். பதிவில் மனதை உருக வைத்து விட்டீர்கள். அம்மா அளவுக்கு தன் பாசத்தை நாலு பேருக்கு முன்னால் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத ஜீவன் அப்பா...ஆனால் அவர் நம் மேல் கொண்ட பாசங்கள் அவர் மனதோடு காலம் முழுமைக்கும் சுமந்தபடியே நமக்கும் ஒரு சுமைதாங்கியாக இருப்பார். என்றும் அவர் நினைவில் நாம் வாழ வேண்டும். அருமையான பதிவு சகோதரி. உங்கள் அப்பாவுக்கு என் நமஸ்காரங்களும். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாவின் நினைவுகள் என்றுமே இனிமை. அப்பா நமக்காகச் செய்யும் விஷயங்கள் ஒவ்வொன்றும் நல்லதே. அவரது நினைவு நாளில் சிறப்பான பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா. இன்னும் எழுத நினைத்தேன்.
இங்கிருக்கும் குளிர் உடல் வலியை அதிகரிக்கிறது.

தந்தையையும் தாயையும் பார்த்து தான் நம் மக்களையும் நாம் வளர்க்கிறோம்.

நல்ல தந்தையின் பிள்ளைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.