சக்தி. பாடல் வரிகள் மனதை உலுக்கும்.
அத்தனையும் உண்மை.இந்தப் பாடலை திருமதி கோமதி அரசுவுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
பாடல்களைக் காட்சி இல்லாமல் ரசிப்பது ஒரு
சுகானுபவம்...
கண்களை மூடிக் காதில் நிறைத்துக் கொள்ளலாம்.
அண்மையில் வாட்ஸாப் குழுமத்தில்
கம்பீர ஆண்களைப் பற்றிப் பேச்சு நடந்து முடிந்தது.
எந்த ஊராயிருந்தாலும்
அந்த மண்ணின் மைந்தர்கள் என்று விவரிக்கப் படுகிறவர்களைக் கதைகளில்
படித்திருக்கிறேன்.
நம் சிக்கலாரும் அதில் ஒருவர். மோஹனாம்பளை மயக்கிய
ஷண்முகம், கோபுலு சாரின் கைவண்ணத்தில்
எத்தனை ஆளுமையுடன் படைக்கப்
பட்டார்!!!!!!!!
அதே போல் நம் செங்கமலத்தின் சிங்காரம்.
கொத்தமங்கலம் சுப்பு சார் எழுத்துக்களில்
மிளிர்ந்தவர்கள்.
தி.ஜானகிராமன் அவர்களின் பூவராகன், அனந்த சாமி
இவர்களெல்லாம் ஒரு வகை.
சாவியின் வழிப்போக்கன் சுந்தரம்.
எப்படி இருந்தாலும் ஒரு ஆண்மகனுக்குப் பெருமை சேர்ப்பது ,உடல்,
முக வசீகரம் மட்டும் அல்ல.
அவனுடைய பிறன்மனை நோக்காத பேராண்மையும், நேர்மையும்
தான்.
என் வாழ்வின் அங்கங்களாக விளங்கிய என் கணவர்,
தந்தை ,சகோதரர்கள் எல்லோருமே
இந்த வகையில் இருந்ததால்
வாழ்வு சிறப்புப் பெற்றது.
''கொண்டவன் நேரே நடந்தால்
கூரையேறிக் கூவலாம்" என்பார் என் மாமியார்.
நான் வலையில் மட்டும் பதிகிறேன்.
வந்தனங்கள்.
10 comments:
காணொளி என்ன பகிர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அனவைலபில் என்கிறது. கம்பீர ஆண்கள் பற்றிய விவரணம் நன்று. அந்தக் காலத்தில் கூரையேறி கூவினால் தெருவுக்கு மட்டும் கேட்கும். இப்போது வலையில் பதிந்தால் உலகத்துக்கே தெரியும்!
மிக நன்றி ஸ்ரீராம்.
எனக்குக் கேட்கிறதேமா.
கடல் என்ற படத்திலே வருகிற
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சிருக்கிறேன்
படம்.
எபி வாட்ஸாப்பில் வந்த உரையாடலின்
நீட்டம் இந்தப் பதிவு.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. கம்பீரமான ஆண்கள் பற்றி நல்ல தெளிவாக கூறியுள்ளீர்கள். எனக்கும் தாங்கள் பதிந்த பாடல் வரவில்லை. சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் கூறுவதையே நானும் கூறிக் கொள்கிறேன். நீங்கள் சரி செய்த பின் வந்து கேட்கிறேன். என்ன இருந்தாலும், இந்த வலைத்தளத்தில் நமக்கென இறைவன் தந்த உறவுகளிடையே நம் எண்ணங்களை பகிர்வது நமக்கு ஒரு ஆனந்தத்தையே அளிக்கிறது.
உண்மை.. தங்களின் தலை நோவு உபாதை முற்றிலும் குணமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காப்பிரைட் பிரச்னையாம். இந்தியாவில் இந்த வீடியோவுக்கு அனுமதி இல்லையாம். பார்க்க முடியலை. மறுபடி பார்க்கிறேன் வருதானு!
உத்யோகம் புருஷ லட்சணம் என்பார்கள். உத்தியோகம் மட்டுமல்ல, அவர்கள் பழகும் விதம், கண்ணியம் போன்றவைதான் ஆண்களுக்கு கம்பீரம் சேர்க்கும்.
கடல் படத்தில் எல்லா பாடல்கள் மட்டும் நன்றாக இருக்கும்.
அன்பு ஸ்ரீராம் நன்றி.
போற்றப்பட வேண்டியவர்களைச் சொல்வதில் தப்பில்லையே.
ஆமாம் .இப்போது அதுதான் நடக்கிறது.
என் மாமியார் பொன் மொழிகளைத் தனியாகப் பதிவிட வேண்டும்:)
அன்பு பானு மா.
மிக நன்றி. நீங்கள் அனைவரும்
பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்று
நம்புகிறேன். கடல் படத்தில் இந்தப் பாடல் ஒன்றைத்தான் கேட்டிருக்கிறேன். மற்றவற்றையும் கேட்கிறேன்.
உண்மையான வார்த்தை...கண்ணியம் நிறைந்த ஆண்.
அழகாகச் சொன்னீர்கள்.
காணொளி பார்க்க இயலவில்லை வல்லிம்மா.
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பதிவுகள் தொடரட்டும்.
அன்பு கீதாமா, நல்ல பாடல்.
உங்களுக்கு நேரம் இருக்கும் போது
யூ டியூபிலேயே பார்க்கலாம்.
அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் மா.
பாடலை யூடியூபிலேயே பார்க்கலாம் மா. வருகைக்கு மிக நன்றி.
Post a Comment