Blog Archive

Saturday, January 23, 2021

வாழ்வை நிர்ணயிப்பது .........

வல்லிசிம்ஹன்

எங்கேயோ படித்த வரிகள்.
கடவுள் நமக்கு த்தரும் கொடை
 24 தங்க நாணயங்கள்
ஒரு நாள்.

 அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம்??என்பது
வார்த்தைகளையும்
 நம் மனதையும் நடத்தையையும் பொறுத்தது.


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே..////////////

திருமூலர் திருமந்திரம்.

இங்கே நான் வந்ததிலிருந்து
தேர்தல் ஜுரம் ஆரம்பித்தது. ஆமாம் கடந்த ஒரு வருடமாக
தேவையோ இல்லையொ
நம் காதுகளில் வந்து விழும் வார்த்தைகள். அவன் சரி. இவன் கெட்டவன்.
அவன் வாழ்க்கை இப்படி  இருந்தது
இவன் இத்தனை மனிதர்களை அழித்தான்.

இப்படி விரும்பியோ விரும்பாமலோ
கேட்க நேர்ந்தது.

இதில் வேடிக்கை என்ன என்றால் நான் இந்த ஊர்க் குடியுரிமை 
இல்லாதவள். எனக்கு ஓட்டு உரிமையும் கிடையாது.
இந்த வீட்டுக்கு ஒருபக்கம் தனியாக வசிக்கும் 
நடுத்தர வயது பெண்.
அந்தப்பக்கம் ஒரு பெரிய குடும்பம்.

குடும்பத்தினர் கடந்த ஆட்சியைச் சேர்ந்தவர்கள்.

தனியாக இருக்கும் பெண் இப்போது 
வந்திருக்கும் ஆட்சியை ஆதரிப்பவள்.

ஒரு வியாழக் கிழமை  .....அன்று குப்பை போடும் நாள்.
நான் மாட்டிக் கொண்டேன்.
இந்த மனிதர் வந்தது நம் கொடுப்பினை.
இனிமேல் அசட்டுப் பேச்சு தொலைக்காட்சியில்
கேட்க வேண்டாம் என்றாள்.
நான் தலையாட்டி வைத்தேன்.
குளிர் அதிகமாக இருக்கவே, மெதுவாக உள்ளே
வந்துவிட்டேன்.என்ன இருந்தாலும் அவர்கள் உண்பது,
குடிப்பது எல்லாம் வேறு வேறு அல்லவா:_))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


மாலையில் குப்பைத் தொட்டியை உள்ளே வைக்க வேண்டுமே.
இம்முறை இந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டியின் முறை........
அனியாயத்துக்கு வருத்தப்பட்டார்.
இப்படி ஆச்சுதே. இனிமேல் இடது சாரி ஆட்சி
கெட்டிப்படும். 
நம் கதி அதோ கதி என்றார்.
நமக்கு இடதும் வேண்டாம், வலதும் வேண்டாம்,
மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால்
சரி என்று வந்துவிட்டேன்.
அதுதான் இப்போ இங்க நிலைமை.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
நமக்காவது ஒன்றும் இல்லை.
நாம் இங்கே குடியல்லோம்!!!!!!!









17 comments:

கோமதி அரசு said...

பதிவும் பாடலும் நன்றாக இருக்கிறது.
திருமந்திரம் சொல்வது போல் இன்னுரையுடன் நாளும் இருப்போம்.

Angel said...

உண்மைதான் வல்லிம்மா .இங்கே வேலை செய்யுமிடத்திலும் தொலைக்காட்சி பெட்டியால் பெரும் பிரச்சினை :) அங்கங்கே மெகா சைஸ் டிவி இருக்கும்   பொதுவான நிகழ்ச்சிகளை போட்டுட்டு ரிமோட்டை ஒளிச்சிடுவோம் இல்லேன்னா அவ்ளோதான் பிரளயமே வெடிக்கும் அவ்வப்போது //நீ யாரை சப்போர்ட் செய்கிறாய் //  என்ற கேள்விகள் .நான் ஒரேயடியா சொல்லிடுவேன் எனக்கு அரசியல் அறிவே இல்லைன்னு :) 

Angel said...

24 தங்க நாணயங்களை பலர் வீணாக்குகிறார்கள் என்பது வேதனை .ஒவ்வொரு நிமிடமும் மணித்துளியும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் பயன்படறமாதிரி எதையும் செய்வதில்லை .

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
நலமாப்பா. உண்மையே நல்ல சொற்கள்
கேட்க மாட்டோமா என்று ஏங்கும் நிலைமைக்கு வந்து விட்டோம்.

என் அம்மா இந்த ஒரு மந்திரத்தை நல்ல
முறையில் சொல்லிக் கொடுப்பார்.
சுள்ளேன்று யாரையும் பேசக் கூடாது
என்பதில் கவனமாக இரு என்று அப்பாவும் சொல்வார்.

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்றுதான்
படிக்கிறோமே.
நன்றி அம்மா. நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நலமாப்பா. உங்கள் ஊரில் குளிர் எப்படி இருக்கிறது.
அந்த சில்லிப்பையும் மழையையும் நினைத்தாலே
உடல் நடுங்குகிறது.

ஆமாம் நீங்கள் சொல்வது போல தொலைக் காட்சிப் பெட்டிகளை விமான நிலையத்தில்
பார்த்திருக்கிறேன்.
எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்
இடங்களில் ஓடிக் கொண்டிருக்கும்.
அதைப் பார்த்துக் கொண்டு யாராவது விமானத்தைத் தவற விடுவார்களோ என்று யோசிப்பேன்.

உண்மையில் நமக்கு அரசியல்வாதிகளின்
கவலை வேண்டாம்.நல்ல
மக்கள் எல்லாக் கட்சிகளிலும்
இருக்கிறார்கள்.
இங்கே போல அவதிப் படுபவர்களைக் கண்டதில்லை.
நம் ஊரில் அமைதியில்லாமல் இருப்பவர்களைக் கண்டால்
பரிதாபமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

24 தங்க நாணயங்கள் ,தூக்கத்தில் கொஞ்சம் போனாலும்
உடலுக்குத் தேவையான உழைப்பும்
மற்றவர்க்கு உதவியும் செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
எல்லாம் இறைவன் அருள்.
நன்றி அன்பு ஏஞ்சல்.

ஸ்ரீராம். said...

திருமந்திர பாடல் பகிர்வு அருமை.  அரசியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் போல.  இறைவன் எல்லோருக்கும் ஒரே அளவு எல்லாம்தான் கொடுக்கிறான்.  எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது!

Geetha Sambasivam said...

கவனமாய்ப் பேசணும். நாம் வம்பிலே மாட்டிக்கக் கூடாது அல்லவா? இருக்குவரை எல்லோருக்கும் நல்லவராகவே இருக்க முயற்சிப்போம்.

நெல்லைத்தமிழன் said...

24 தங்க நாணயங்களில் நான் பாதிக்கும் மேல் பத்திரமா வச்சுடறேன், நல்லா தூங்கி

நெல்லைத்தமிழன் said...

அரசியல் பேசினாலே, மன வருத்தம், பிறரைக் குறை சொல்லுதல், நாம் ஆதரிப்பவர்கள் பண்ணும் தவறுகளைக் கண்டுகொள்ளாமை...என பாவ மூட்டைகளை அதிகமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எதற்கு எனத் தோன்றும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பாடல் இணைப்பு... அருமை...

வெங்கட் நாகராஜ் said...

நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன...

சரியாகச் சொன்னீர்கள் அம்மா.

பல சமயங்களில் ஒதுங்கி இருப்பதே நல்லது.

பதிவும் பாடலும் நன்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

தலைவர்கள் ஆனவர்கள் நன்மை செய்தால் ஏற்கலாம்.நாட்டுக்கு
நன்மை நினைக்காதவர்களைக் கொடாட முடிவதில்லை.

நீங்கள் சொல்வது போல்
அரசியல் அறம் இல்லாமல் நடந்தால்
எப்பொழுதாவது பதில் சொல்ல வேண்டும். உலகம் முச்சூடும்
இதுதான் உண்மை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அதேதான், அசட்டுத்தனமாகப் பேசி
மாட்டிக் கொள்ளக் கூடாது.
அதுவும் இப்போது மஹா பயங்கரமாகக்
கவனித்து வருகிறார்கள்.

நாம் சொல்லி ஏதாவது மாறப் போகிறதோ?
சொன்ன சொல் ஒன்றுதான் நிற்கும்.
டிவிக்காரன் பிழைக்கிறான். பேப்பர்க்காரன் பிழைக்கிறான்.
நமக்கு என்ன லாபம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நம் நாணயங்களைக் காப்பாற்றிக் கொள்வோம்.
நல்லன சொல்லி புண்ணியம் தேடிக் கொள்வோம்.

நம்மை நம்பி யாரும் தலைவராகவில்லை. தோற்கடிக்கப் படவில்லை.

ஆடியவர்கள் அடங்குவார்கள். அடங்கியவர்கள் ஆடாமல் இருந்தால் நன்மை.
அதுவும் இறைவன் தீர்ப்புதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
ஆமாம் மா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
நன்றி மா.
எதிர்காலம் நன்மை செய்யட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

அரசியல் என்பதைக் கவனிப்பதற்கு மனதில் உரம் வேண்டும்.
நம்மால் யாரையுமே சீர் தூக்கிப்
பார்க்க முடிவதில்லை.
அப்போது தவளை போல வாய் விடுவதில்
வார்த்தைகள் அல்லவா நஷ்டம் ஆகின்றன.
மிக மிக நன்றிமா.