Blog Archive

Friday, January 22, 2021

எங்கேயோ கேட்ட பாடல் மீண்டும்.....

 எங்கள் ப்ளாக்  வலைத்தளத்தில் வெள்ளியிக்கிழமைப் 
பாடல்கள் 
எங்கள் சேலம் நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்தன.
சேலத்தில் நான்கு ரோட், ஐந்து ரோடு 
என்று சாலைகள் சந்திக்கும் இடங்களுக்குப் பெயர்.

அங்கே இருந்து பிரியும் ஒரு இடத்தில் டிவிஎஸ் கிளையில் 
சிங்கம் பணி புரிந்து வந்தார்.
திருமணமான புதிது.
புதுக்கோட்டையிலிருந்து வந்த உடன் சின்ன 
மாமனார் வீட்டில் இருந்தோம்.
இரண்டு வாரங்களில் பணிமனைக்குப் பக்கத்திலேயே 
புது வீட்டைப் பார்த்துவிட்டார்.

எப்பொழுதும் போல் ஊருக்கு எட்டா தூரம்.
ஏன் என்று இப்போது யோசிக்கிறேன்.
சிங்கம் தனிக்காட்டு ராஜா தானே எப்போதும்.!!!
நாலு சகோதரிகளுடன் வளர்ந்ததில்
தனிமையை விரும்பும் ஆணாக இருந்திருக்கிறார்.
எனக்குத்தான் புரிபடவில்லை.
எனக்கு வீடு நிறைய மனிதர்கள் இருந்தால் தான்
பிடிக்கும்.

அந்த வீட்டின் ஜன்னலோரத்தில் ஒரு சோஃபாவும் போட்டு,
பக்கத்தில் தன் நூலகத்தையும் வைத்து,
இசையில் மனம் லயிக்கும் படி ஒரு வானொலியும் வாங்கிக் கொடுத்து
தான் தன்  வேலைக்களத்தில்
மூழ்கிவிட்டார்.

ஜன்னல் வழியே தெரியும் சாலையையும், அதற்கும் அப்பால் இருக்கும்
மலைத் தொடர்களையும்,
அந்த மலைத் தொடர்களில் அவ்வப்போது 
எரிக்கப் படும் மரங்களின் அக்கினிச் சிவப்பையும் 
பார்ப்பேன்.
குன்றின் மேல் ஒரு தனி மரம் என் பார்வையில் படும்.
அதன் பக்கத்தில் ஒரு சிறு வீடும் இருக்கும்.
என் எண்ணங்களில் அந்த வீட்டில் இருக்கும் 
தலைவியையும் அவள் குழந்தைகளையும் நினைத்துப்
பார்ப்பேன்.
எனக்காவது அடுத்தாற்போல் ஒன்றிரண்டு வீட்டாராவது இருக்கிறார்கள்.

அந்தக் குடும்பத்தலைவிக்கு யார் துணை?
மகிழ்ச்சிக்கோ , இல்லை அவசிய உதவிக்கோ
யாராவது இருப்பார்களா என்றெல்லாம் மனம்
கணித்துக் கொண்டே இருக்கும்.

அந்த யேற்காடு மலைக்கே ஒரு நாள்
அழைத்துப் போனார் சிங்கம்.
ஏரிக்கரையின்  அருகே இருந்த ஒரு
நண்பரின் வீட்டுக்கும் போனோம்.

அந்த வீட்டில் தான் மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்குனர் திரு ராம்சுந்தரம் அவர் மனைவி கலை, மகன்,
மகள் எல்லோரையும் சந்தித்தேன்.

இப்போது அவர்கள் வளர்ந்து திருமணம் முடித்து 
அவரவர் குடும்பங்களுடன் சுகமாக இருக்கிறார்கள்.
கலை, தன் கணவரின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதாகக் கேள்விப்பட்டேன்.
இதமான பெண்மணி,

இதெல்லாம் பழங்கதை.
அவர்கள் படத்தின் இசையில் கண்டு
கொண்ட நயம் என்னை வெகுவாக
ஈர்த்தது.
பாடல்களின்  அமைப்பு,இந்தி ,ஆங்கிலத்தைத் தழுவினாலும்
பாடலின் வரிகளை எப்படி இதுபோலக்
கச்சிதமாக அமைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக
இருக்கும். 
மேலே பதிந்திருக்கும் இந்திப் பாடல் ஏப்ரில் ஃபூல் படத்தில் லதா மங்கேஷ்கர்
பாடியது.
அதே போல இருவல்லவர்கள் படத்தில் ''அங்கே யேன் இந்தப் பார்வை""
பாடலும் எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஒலிக்கும்.

இதோ இன்னோரு பாடல்.  '
நூறு வருடங்களுக்கு முன்பே'
என்னும் வரிகளுடன் ஆரம்பிக்கும் ஒரு இந்திப்
பாடல். இதன் பிரதி
''மனம் என்னும் மேடை மேலே'' பாடல்.   வல்லவனுக்கு வல்லவன். அசோகனும்  மணிமாலாவும்
பாடும் பாடல். 
ரசனையில் வல்லவர்கள். நாமும் ரசிக்கலாம்.

18 comments:

கோமதி அரசு said...

பகிர்ந்த பாடல்களும், மலரும் நினைவுகளும் மிக அருமையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு அன்பு கோமதி.

நேற்று எங்கள்ப்ளாகில் பாடல்கள் ஸ்ரீராம் பதிந்தபோது தோன்றியதை
எழுத ஆரம்பித்தேன்.
இவை எல்லாமே எங்கள் திருமணமான இரண்டு
வருடங்களில் வந்தவை.
நீங்கள் வந்து படித்ததுதான் எனக்கு மகிழ்ச்சி,
நன்றிமா. உங்கள் பின்னூட்டம் இன்னும் உற்சாகம்
தரும்.

ஸ்ரீராம். said...

சுவையான நினைவுகள்.  ஊர்க்கோடியில் தனியான இல்லத்தில் வசிப்பது சவாலானது.  ஆபத்தானதும் கூட.  அனால் சிங்கம் இருக்க பயமேன்!

பாடல்களும் சுவை.  மனம் என்னும் மேடைமேலே போலவே இதே டியூனை வைத்து இன்னொரு டி எம் எஸ் ஓஆடலும் உண்டு.  சிலைசெய்ய கைகள் வேண்டும் அல்லது  தங்கம் வேண்டும் என்று வும் என்று நினைவு.

ஸ்ரீராம். said...

https://www.youtube.com/watch?v=yWQZNO_4CwQ

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மிக நன்றி மா. இந்தப் பாடலையும் கேட்டிருக்கிறேன்.
யார் இசை அமைத்தார்களோ!!!
நன்றாக இருக்கிறது.''சிலை செய்யக் கைகள் உண்டு .தங்கம் கொஞ்சம் தேவை.''
சுவையான பாட்டு.

வல்லிசிம்ஹன் said...

ஊர்க்கோடியில் வயல்களுக்கு நடுவில்
பத்து வீடுகள் ரயில் வண்டித் தொடர்
போல. குடி வருவதற்குத்தான் ஆள் இல்லை.

பெரியவன் பிறந்த பிறகு நகரத்துக்குள் வந்து விட்டோம்.
ஆனால் ஒன்று. எனக்கு அப்போது பயம் என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது.

தனிமைதான் பிடிக்காது. பேச ஆளில்லாமல் ரோட்டோரத்தில் இருந்த
செட்டியார் கடையில்
கடுகு வாங்கப் போய் வருவேன்.
அவரோ அம்மா நீங்க வரக்கூடாது.
பையனை அனுப்பறேன் லிஸ்ட் கொடுங்கோ
என்பார்.:)

ஸ்ரீராம். said...

அப்படி மனிதர்கள் இருந்த காலம்.

KILLERGEE Devakottai said...

மலரும் நினைவுகள் அருமை அம்மா.

Geetha Sambasivam said...

நாங்க இருந்ததும் அநேகமாக இம்மாதிரித் தனியான காட்டு பங்களாக்களில் தான். நீங்க சொல்வது போல் அப்போ பயமெல்லாம் தெரியலை. நன்றாகத் தான் இருந்தது. இப்போ நினைச்சால் கூட ஆச்சரியமாத் தான் இருக்கு.

Geetha Sambasivam said...

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் குடும்பத்தார் உங்களுக்கு இவ்வளவு நெருக்கம் என்பதை இப்போதே அறிந்தேன். எ.பியிலும் எழுதி இருந்த நினைவு.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்து கொண்ட மூன்று பாடல்களுமே இனிமை. கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மலரும் நினைவுகள் நன்று - பல சமயங்களில் தனிமையும் தேவையாகவே இருக்கிறது.

தொடரட்டும் நினைவுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

நெல்லைத் தமிழன் said...

பகிர்ந்த பாடல்களும், நினைவலைகளும் ரசிக்கும்படி இருக்கின்றன.

அப்போதெல்லாம் தனியாக இருப்பது உங்களுக்கு பயமாக இருந்திருந்தாலும் பொதுவாக பயம் என்பது கிடையாது (திருடர் பயம் போன்று) என நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அந்தக் காலம் அப்படி இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அந்த வயதும் சூழ்னிலையும் அப்படி.
இவர் ஒவ்வொரு நாளும் வீடு வரவே 10 மணி ஆகிவிடும்.

நான் சாலையைப் பார்த்தவாறே தூங்கி விடுவேன்.
நீங்கள் சொல்வது போல பயந்ததில்லை.
உங்களுக்கும் அதே போல
இருந்ததுதான் எனக்கு ஆச்சரியம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வந்து ரசித்ததற்கு மிக நன்றி மா.
இசை நம்மை ஒன்று சேர்க்கிறது.

தனிமை வேண்டும் தான். அந்தந்த
காலங்களுக்கு ஏற்ப நம் ஆவலும் ஆசைகளும்
மாறுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா.
நன்மைகள் சேரட்டும் வாழ்வில்.