கானம் செல்லாவிடினும்
கலந்துண்ண உணவுகள் தயார்.
தயிரன்னமும், புளியோதரையும் தயாராகிக்
கொண்டிருக்கின்றன.
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
அனைவரையும் ரட்சிக்க வேண்டும்.
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்
தன் ''குறை ஒன்றும் இல்லை'' புத்தகங்களில்
சொன்ன வழிப்படி கோவிந்த நாமத்தை
இடையறாது தியானிப்போம்.
உண்ணுவதும், உறங்குவதும்,கேட்பதும் நினைப்பதும்
அவன் விட்ட வழிப்படி.
நல்லவை மட்டுமே காதில் விழ வேண்டுமென்றால்
காதுகளுக்குக் கபாடம் தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
மனம் அல்லல் உறுவது கர்ம வினைகளால்.
நற்சிந்தை எப்பொழுதும் நம்மிடையே
உலவிக் கொண்டிருக்க மிகக் கடினமாக
உழைக்க வேண்டி இருக்கிறது.
நல்லதே நடக்க இறைவன் தான் துணை.
4 comments:
அல்லவை விலக்கி நல்லவை நடக்க இறைவன் துணை புரியட்டும்.
நல்லதே நடக்கட்டும்...
நலமே விளையட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
Post a Comment