இப்போதும் இங்கு சென்னையிலும் கூட காலை ஆறரைக்கு நான் அலுவலகம் செல்லும்போதே பல கடைகளில் சூடாக வடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எட்டரைக்குமேல் ஆறிப்போயிருக்கும். ஓரிரு கடைகளில் பெரிய அகல அண்டாவில் பூரித்த பூரிகள் அடுக்கி வைத்து, இன்னமும் பொறித்துக் கொண்டிருப்பார்கள்.
மதுரை வடை ரொம்பவே பிரபலம். அதிலும் மேலமாசி வீதி மாடர்ன் ரெஸ்டாரன்ட், சிம்மக்கல்லில் இருந்த மாடர்ன் லாட்ஜ் இரண்டு இடங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு போடும் ஸ்பெஷல் வடை மிக அருமையாக இருக்கும். ஒரு சின்ன தோசைக்கல் அளவுக்கு இருக்கும் வடை சாம்பாரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். காராவடையும் மதுரைச் சிறப்பு உணவே! மற்ற இடங்களில் அதிகம் பார்க்க முடியாது.
மதுரையில் அம்மா வீட்டுப்பக்கம் நிறைய வடை கடைகள் இருக்கிறது. எப்போதும் ஏதாவது கடையில் சூடாய் வடை கிடைக்கும். முள்ளு முருங்கை வடையும் கிடைக்கும்.
காலையில் இட்லி, வித விதமான வடைகள், பனியாரம், காரம், இனிப்பு என்று செய்து விற்பார்கள். போளி, கொழுக்கட்டை, புட்டு இடியாப்பம் என்று சாப்பிடும் உணவு கடைக்கு தட்டு பாடே இல்லை.
கீதா சொல்வது மேலமாசி வீதி மாடர்ன்ரெஸ்டான்ட், மேலமாசி வீதிகளில் செய்து விற்கும் சின்ன சின்ன கடைகள் என்று வடை ருசியாக கிடைக்கும்.
அன்பு கீதாமா, உண்மைதான். மதுரையின் அத்தனை நினைவுகளும் பலகாரங்களைச் சுற்றி என்று என் தங்கைகள் கூடச் சொல்வார்கள். அப்பாவுடைய கசின் ஒருவர், எங்கள் தாத்தா இறைவனடி சேர்ந்த பொது எங்களை டவுனுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிடவைத்தார்.
அதற்கப்புறமும் நிறைய நாகப்பட்டணம் ஹல்வா கடை போயிருக்கிறோம். அப்பாவுக்குப் பிடிக்கும். அவ்வளவு பெரிய வடையைப் பார்த்ததில்லை. பெரு மூச்சுதான் விடத் தோன்றுகிறது.
12 comments:
மாஸ்க் போட்டிருப்பதால் சமீபத்தைய காணொளி போலும்! அதிகாலையில் வடையைக் காண்பித்து ஆசையைக் கிளப்பி விட்டீர்கள்! மதுரையில் எல்லாமே ஸ்பெஷல். வடை. இட்லி, அதற்குத் தொட்டுக்கொள்ள பலவகை சட்னிகள்..
இப்போதும் இங்கு சென்னையிலும் கூட காலை ஆறரைக்கு நான் அலுவலகம் செல்லும்போதே பல கடைகளில் சூடாக வடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எட்டரைக்குமேல் ஆறிப்போயிருக்கும். ஓரிரு கடைகளில் பெரிய அகல அண்டாவில் பூரித்த பூரிகள் அடுக்கி வைத்து, இன்னமும் பொறித்துக் கொண்டிருப்பார்கள்.
மதுரை வடை ரொம்பவே பிரபலம். அதிலும் மேலமாசி வீதி மாடர்ன் ரெஸ்டாரன்ட், சிம்மக்கல்லில் இருந்த மாடர்ன் லாட்ஜ் இரண்டு இடங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு போடும் ஸ்பெஷல் வடை மிக அருமையாக இருக்கும். ஒரு சின்ன தோசைக்கல் அளவுக்கு இருக்கும் வடை சாம்பாரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். காராவடையும் மதுரைச் சிறப்பு உணவே! மற்ற இடங்களில் அதிகம் பார்க்க முடியாது.
எதையும் வித்தியாசமாக ரசிப்பதிலும், விதவிதமாக சுவைப்பதிலும் மதுரையை வெல்ல முடியாது...!
ஆஹா... காலையில் இப்படி விதம் விதமாக வடை பார்க்க, வடை சாப்பிடத் தோன்றியது!
எத்தனை எத்தனை வடை வகைகள். தீநுண்மி காலத்தில் இந்த மாதிரி கடைகளை வைத்திருப்பவர்களுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் கடினம் தான்.
விரைவில் சூழல் சரியாக வேண்டும்.
மதுரையில் அம்மா வீட்டுப்பக்கம் நிறைய வடை கடைகள் இருக்கிறது. எப்போதும் ஏதாவது கடையில் சூடாய் வடை கிடைக்கும்.
முள்ளு முருங்கை வடையும் கிடைக்கும்.
காலையில் இட்லி, வித விதமான வடைகள், பனியாரம், காரம், இனிப்பு என்று செய்து விற்பார்கள்.
போளி, கொழுக்கட்டை, புட்டு இடியாப்பம் என்று சாப்பிடும் உணவு கடைக்கு தட்டு பாடே இல்லை.
கீதா சொல்வது மேலமாசி வீதி மாடர்ன்ரெஸ்டான்ட், மேலமாசி வீதிகளில் செய்து விற்கும் சின்ன சின்ன கடைகள் என்று வடை ருசியாக கிடைக்கும்.
முகக் கவசத்தைப் பார்த்ததும் எனக்கும் தோன்றியது.
ஸ்ரீராம்.
தூங்கா நகரம். அந்த வீதிகளை என்னால்
மறக்க முடியாது. என்ன ஒரு கலகலப்பு.
சுறுசுறுப்பு.பழைய மதுரையைப்
பொக்கிஷமாக நினைக்கிறேன்.
உற்சாகமான,கள்ளமில்லாத நகரம்.
சென்னையில் பாண்டி பஜாரில் பார்த்திருக்கிறேன்.
சாப்பிட்டதில்லை.
மதுரையின் ஈர்ப்பு எங்கேயும் வராது.
திருச்சி ,கோவையில் உணர்ந்ததுண்டு.
நன்றி மா. Sriram.
அன்பு கீதாமா,
உண்மைதான். மதுரையின் அத்தனை நினைவுகளும்
பலகாரங்களைச் சுற்றி என்று என்
தங்கைகள் கூடச் சொல்வார்கள்.
அப்பாவுடைய கசின் ஒருவர்,
எங்கள் தாத்தா இறைவனடி சேர்ந்த பொது
எங்களை டவுனுக்கு அழைத்துக் கொண்டு போய்
சாப்பிடவைத்தார்.
அதற்கப்புறமும் நிறைய நாகப்பட்டணம் ஹல்வா
கடை போயிருக்கிறோம்.
அப்பாவுக்குப் பிடிக்கும்.
அவ்வளவு பெரிய வடையைப் பார்த்ததில்லை.
பெரு மூச்சுதான் விடத் தோன்றுகிறது.
ஆமாம் அன்பு தனபாலன் என்றும் புதுமை, ஆக்கம், அரசனை, துணிச்சல் நிறைந்த இடம் மதுரை.
எல்லோரும் மதுரைக்கு ஒரு விசிட் கொடுக்கலாம் வெங்கட்.இந்தத் தொற்று விலகட்டும்.
அன்பு கோமதிமா,
மதுரையில் எல்லாம் கிடைக்கிறது. வடையைப் பார்த்துதான் ஆசையாக இருக்கிறது.
கிருமிகள் தொலையட்டும். வெளியே செல்லலாம்.
Post a Comment