Blog Archive

Tuesday, October 13, 2020

Homemade pani puri recipe | golgappa recipe | puchka recipe |How to mak...

வல்லிசிம்ஹன்

கடைக்குப் போய் இதெல்லாம் சாப்பிட முடிவதில்லை.
அதனால் யூ டியூபில் பார்த்து இங்கு பதிவிட்டேன்.

6 comments:

Geetha Sambasivam said...

பூரி செய்வேன். ஆனால் பானி எல்லாம் செய்து சாப்பிட்டதில்லை. அப்படியே எடுத்துப்போம். பேல் பூரி அடிக்கடி பண்ணுவேன். அதுக்கு அதிகம் செலவோ, நேரமோ எடுத்துக்காது! பச்சைச் சட்னியும், புளிச்சட்னியும் தயாரா இருக்கணும். இல்லைனாலும் பேரிச்சம்பழத்தை வைத்து அரைத்துவிடுவேன். பேல்பூரி வயிறும் நிரம்பும்.

கோமதி அரசு said...

சூப்பர்.
நல்லா இருக்கிறது. முன்பு பிள்ளைகள் இருக்கும் போது செய்தேன். இப்போது பார்த்து ரசிப்பதுடன் சரி.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... இங்கே சில நண்பர்களின் வீட்டில் செய்வார்கள். பொதுவாக எனக்கு இந்த பானிபூரி பிடிக்காது! எப்போதாவது சாப்பிடுவதுண்டு. அவ்வளவு தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இங்கே மகள் அழகாகச் செய்வார்.
முன்பு அவர்களின் இளவயதில்
செய்து கொடுத்திருக்கிறேன்.
BHEL பூரி , பானி பூரி இரண்டும் ஒரே நாளில்
இரவு சாப்பாடு கூட வேண்டாம் என்னும் அளவில்
சாப்பிட்டு விடுவார்கள்.
இப்போது பார்த்து ரசிக்க நன்றாக இருக்கிறது.
சப்பாத்தி செய்வது கூட வாரத்துக்கு ஒரு
முறையே.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் அன்பு கோமதி.

இங்கே வெளி சாப்பாடு என்பதே குறைந்த நிலையில்
புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது.

பேரனே யூ டியூபில் பார்த்து
சொல்கிறான்.
செய்து கொடுத்தால் ரசித்து தான் சாப்பிடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பானி பூரிக்குக் கொஞ்சம் வேலை இழுக்கும்.
பேல் சுருக்க செய்து விடலாம்.
எல்லாம் அவரவர் ருசியைப் பொறுத்தது மா.