Blog Archive

Friday, October 16, 2020

கேட்க இனிமை.

வல்லிசிம்ஹன்

1967 எல்லாப் பெண்களின் உள்ளத்திலும் இந்தப்
பாடல் ஓடி இருக்கும். என்ன குரலம்மா
உங்களுக்கு சுசீலாம்மா.
அதுவும் நாகேஷ், ஜெயலலிதா உணர்ச்சிக் குவியல்
நடிப்பில் சிகரம் எட்டும் காட்சி.மிகப் பிடித்தது.
திருமணமாகி கைகுழந்தையுடன் பிறந்த வீட்டில் இருக்கும் போது
சிங்கம் மட்டும் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்து
சொல்லும்போது அவ்வளவு  கோபம் வந்தது.
சரி போன்னு விட்டு விட்டேன்:)


பாத காணிக்கை ஒரு குடும்பப் படம்.
1963இல் திரையிடப்பட்டதோ.

திண்டுக்கல்லில் கேட்ட பாடல்.

சாவித்ரி அம்மாவின்  நடிப்புடன் குழையும் குரல்.
படம் பின்னாட்களில் பார்த்தேன்.
அன்பும் காதலும் இழையோடும்.
இந்தப் பாடல் வரிகளும் வேறெந்தப் பாடலுக்கும் அமையவில்லை.
''பச்சைக் கிளியானால் பறந்தே சென்றேகுவேன்.
பாடி வரும் தென்றல் 
காற்றேறி ஓடுவேன்.
சென்ற காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது சொல்லக் காணேன்''    .....

10 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான பாடல்கள் அம்மா...

KILLERGEE Devakottai said...

அருமையான பாடல்கள் அம்மா...

ஸ்ரீராம். said...

வாலி பாடலும், கண்ணதாசன் பாடலும்.  ஏனோ இரண்டாவது பாடல் அவ்வளவாகப் பிடிக்காது.  முதல் பாடலும் பாடலைத் தந்தோறும் காட்சியும் பிடிக்கும்.

Geetha Sambasivam said...

எல்லாமே தேர்ந்தெடுத்த பாடல்கள். நல்ல ரசனை! இப்படித்தான் நான் பையரைப் பிரசவிச்சிருக்கும்போது நம்மவர் "பாபி" படம் மதுரை சிந்தாமணியில் பார்த்துட்டு வந்தார்னு நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கோபம் எனக்கும் வந்தது.

துரை செல்வராஜூ said...

ஒவ்வொன்றும் இனிமை.. தனித்துவமான பாடல்கள்...
நான்குமே மிகவும் பிடித்தமானவை..

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அதுதான் அந்தப் படத்தில் அம்மா
வந்துவிடுவாளே.
ஸாரி மா. சுசீலாம்மா குரல் இனிமையா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நன்றி மா. நமக்கெல்லாம் ஒரே டேஸ்ட். அதுதான்.

வல்லிசிம்ஹன் said...

மூன்று காதலுக்கு, ஒன்று அன்னைக்கு.
என்று பாடல்களைப் பிடித்த பாடல்களைப் பதிந்தேன்.
அன்பு துரை மிக நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பாடல்கள். நானும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். அந்தக் கால பாடல்கள் நமக்கு என்றுமே நினைவில் தேனாக இனிப்பவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.