Blog Archive

Tuesday, October 06, 2020

பொய்யில் பிழைக்க முடியுமா?


வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

நம்மூரில்  சில காலங்களுக்கு முன்

ஏதாவது  அரசியல் வாதிக்கு  சவாலாக ஏதாவது சந்தர்ப்பம் நேரந்தால் உடனே நெஞ்சுவலி என்று சொல்லி 
பொது மருத்துவமனையில் சேரந்து விடுவார்கள். இது பற்றி அடிக்கடி  துக்ளக்கில் வரும் ஜோக்.

 தம்பி. கல்கத்தாவில் இருக்கும் போது அங்கு இருந்த உயர்தர மருத்துவமனை  யில் அனுமதிக்கப் படும் பெரிய மனிதர்களைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வான்.



அந்த ஹாஸ்பிட்டல் பெரிய ரிஸார்ட் போல இருக்குமாம். அடிக்கடி
உள்ளே. இருப்பவர்கள். கலந்து பேச வசதி இருக்குமாம்.
இது ஒரு கேலிக் கூத்தாகவே நடந்தது. புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் 



போக்கு அப்படித்தான்   இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

இது நம் ஊருக்கு மட்டும் உரித்தான ஸ்பெஷல் நடவடிக்கையாக இல்லை.
அநுதாப அலைக்காக. எதுவும் நடக்கச் சான்ஸ் இருக்கிறது 
என்பது தெரிகிறது.

ராமர் ஒரு அஸ்திரம் எடுத்தால்
நினைத்த காரியத்தை முடிக்காமல் திரும்பாதாம்.

அது போல் இந்தத் தொற்று எல்லோரையும் நோக்கிப் பாய்ந்தால்
என்ன செய்வது.
அனுப்பினவனிடமே சரண் அடைய வேண்டும்.

சொல்லப்பட்ட கட்டளைகளை மீறக் கூடாது.
இது எல்லாம் உணர்ந்தே இருக்கிறோம்.

தினப்படியே உழைத்துப் பிழைப்பவர்களை
எப்படிக் காப்பது?
 அந்த நினைப்புடன்  எங்கள் உறவினர்கள் 
சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அரிசி 
வகையறாக்களைச் சேர்த்து  பக்கத்துக் குடியிருப்புகளில்
வினியோகிப்பதாகவும்,
பல குடும்பங்கள் வெவ்வேறு விதமாகப்
பணம் சம்பாதித்துக் கொள்ள ஆரம்பித்திருப்பதையும்
என் அம்மா வழி உறவினர் சொன்னார்.
சிறு துளிதானே பெரு வெள்ளம்.

இங்கு வீட்டு மராமத்துக்கெல்லாம் ஆட்களை
வரவழைப்பது குறைந்துவிட்டது.
அனேகமாக வெளித்தோட்டத்து வேலை செய்பவர்கள்
தொற்றில்லாமல் இறைவன் காத்து வருகிறான்.
இறைவனுக்கு நன்றி.
இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர்
தலைவரைப் பின் பற்றி பல கூட்டங்களுக்கும் சென்று வருபவர்.
அவரை வீட்டுக்குள் வரவிடவே 
பயமாக இருப்பதால் அந்த வேலைகள் நிற்கின்றன.

நம் ஊரில் இருக்கும் வயதானவர்களைப் 
பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது.
அதுவும் வீட்டில் தங்காமல் பயணங்களிலேயே
 இருப்பவர்கள் கொஞ்சம் மன நிலை
குன்றி கலவரப் படுவதையும் தொலைபேசியில் தெரிகிறது.

எல்லா மன சிரமங்களும் தீரும் காலம் வரும். 
அதுவரை நம் மனசாட்சிக்கு ஒப்ப நடப்போம்.
பித்தம் பிடித்தவர்கள் பேச்சைக் கேட்க வேண்டாம்.



15 comments:

ஸ்ரீராம். said...

உண்மை.  சீக்கிரம் இந்நிலை மாறவேண்டும்.  இந்தியாவில் இதன் தாக்கம் கடந்த ஐந்து நாட்களில் குறைந்திருப்பதாய் நேற்று செய்தித்தாளில் படித்தேன்.  உண்மையாயிருந்தால் சந்தோஷம்.

ஸ்ரீராம். said...

தோட்டவேலை, கட்டிடவேலை என்று கடின வேலைகள் செய்வோரை இது பெரும்பாலும் பாதிக்கவில்லை என்பதை நானும் கவனித்தேன்.  அவர்கள் உடம்பில் கடின உழைப்பு காரணமாக எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

Geetha Sambasivam said...

இங்கும் அப்படித் தான். எலக்ட்ரீஷியன், ப்ளம்பர் ஆகியோரை வரவழைத்து வேலைகளைச் செய்யச் சொல்லவே பயமாக இருந்தது. கடைசியில் குழாய் நீர்க்கசிவு வர ஆரம்பித்ததும் வேறு வழியில்லாமல் அழைத்தோம். வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணையே வெளியே சென்றுவிட்டு வந்தாளானால் அன்று வரவேண்டாம்னு சொல்லிடுவேன். வீடு சுத்தம் செய்யும் ஆட்களை அழைத்து சுத்தம் செய்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. முடிந்தவரை நாங்களே செய்துக்கறோம். அதுக்கும் பயம் தான். தூசி ஒத்துக்கொள்ளாது. உடம்பு வந்துட்டால்! என்னவோ போங்க! போறாத காலம் பிடிச்சு ஆட்டுகிறது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அப்பார்ட்மெண்ட் வீடானதால், தோட்டம் துறவு இல்லாவிடினும், இங்கு வீட்டு வேலைகளை நாங்கள்தான் செய்து கொள்கிறோம். வீடு தினமும் பெருக்கித்துடைக்க மட்டும் கடந்த இரண்டு வருடமாகத்தான் ஒரு வேலையாள் வைத்திருந்தோம்.(அதுவும் சிறு குழந்தைகள் உள்ளதால்.. அதற்கு முன் நானேதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வேன்.) அவர்களையும் கடந்த ஏப்ரலிருந்தே வர வேண்டாமென்று நிறுத்தியாச்சு. இப்போது தினமும் பெருக்கும் வேலையும் என்னுடையது ஆயிற்று. பாத்திரங்கள் சேரச்சேர அவ்வப்போது சமையல் செய்தபடியே கழுவி விடுவேன்.நீங்கள் கூறியபடி ஒரு வேலையாட்களையும் வீட்டுக்குள் அழைக்க பயமாக உள்ளது. ஆனால், வெளியில் மற்ற எல்லோரும் மாஸ்க்குடனும். அது இல்லாமலும் பயணிப்பதை பால்கனியிலிருந்து பார்க்கும் போது, அவர்களது தைரியங்களை பாராட்டாவா, இல்லை, கோபப்படவா எனத் தெரியவில்லை.

தங்களது உறவுகள் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டுக்கள். விரைவில் இயல்பு நிலை திரும்ப நானும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

இது கடந்து தொலைக்கையில் நாமும் கடந்து நிற்போமா இல்லை கரைந்து தொலைவோமா என்கிற கவலை 60 ஐக் கடந்தவர்கள் அனைவருக்குள்ளும் இருப்பது நிஜம்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும் அம்மா...

கோமதி அரசு said...


எல்லா மன சிரமங்களும் தீரும் காலம் வரும். //

வரட்டும் அக்கா.

உறவுகளை, நட்புகளை என்று எங்கும் பார்க்க போக முடியவில்லை. அவர்கள் வந்து நம்மை பார்த்து விட்டு நம்மை வரமாட்டேன் என்கிறீர்கள் மிகவும் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி போகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம். நல்ல செய்தி தொடரட்டும். நிறைய சிரம்ப் பட்டாச்சு.

இங்கே நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.
சின்னவனை அனுப்பதாக இல்லை.
இங்கே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தல ஆடும் ஆட்டம் எல்லோரையும் தவிக்க வைக்கிறது.

நம்ப இருப்போம் நல்ல காலத்துக்கு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் , கடவுள் கிருபையில் அவர்கள் எல்லா வீடுகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் போவதில்லை.
நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு. கீதாமா, நம்மால இந்த வேலைகளைச் செய்ய முடியாதே மா.
அவர்கள் வரும் போது நாம் ஒதுங்கி இருக்க வேண்டியதுதான்.

உடல் வலிமை ,நமக்கு வேண்டும் என்கிற உணவு தயாரிப்பிலும் , மற்ற வேலைகளுக்கும்
தெம்பு வேண்டுமே.

என் சம்பந்திகள் என்னை விட வயசானவர்கள். அவர்களை நினைத்தால் இன்னும் கவலை.
மருமகளும் அங்கு செல்ல முடியாது. இறைவன் சீக்கிரம் கருணை வைக்க வேண்டும் பத்திரமாக இருங்கள் மா. என்அன்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,

இந்தத் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே
கவலைகளும், களைப்பும் கூடவே வந்து விட்டன.
இந்த ஊரில் முதலில் இருந்தே
நம் வீட்டை நாமே பார்த்துக் கொள்ளவேண்டும்
என்பது ஒரு ரொடீன் ஆகிவிட்டது.

இருந்தும் வேலையும் ஆன்லைன், பொருட்கள் வாங்குவதும் ஆன்லைன்,
மருத்துவரோடு பேச்சும் ஆன்லைன் என்று நீளும்போது மனம் களைத்துப்
போகிறது மகளுக்கும் அவள் கணவருக்கும்.

நீங்கள் சொல்வது குழந்தைகள் வீட்டில் இருந்தால்
இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகம் தான்.

நாங்கள் இருக்கும் சபர்பில் அனைவரும்
வெளியில் வருவதில்லை.
டிஸ்டன்ஸ் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெளியில் வந்தோமோ
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
நம்மை ஒரு பைத்தியம் மாதிரி
பார்க்கிறார்கள்.
நீங்கள் பால்கனியில் இருந்து பார்ப்பதை
நான் ஜன்னல் வழியாகப்
பார்க்கிறேன். தோட்டம் என்கிற யார்ட் கவனிக்காமல் விட்டால்
வேண்டாத ஜந்துக்கள் புழக்கம் அதிகமாகிவிடும்.
என்னன்னு சொல்றதுப்பா.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,

இந்தத் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே
கவலைகளும், களைப்பும் கூடவே வந்து விட்டன.
இந்த ஊரில் முதலில் இருந்தே
நம் வீட்டை நாமே பார்த்துக் கொள்ளவேண்டும்
என்பது ஒரு ரொடீன் ஆகிவிட்டது.

இருந்தும் வேலையும் ஆன்லைன், பொருட்கள் வாங்குவதும் ஆன்லைன்,
மருத்துவரோடு பேச்சும் ஆன்லைன் என்று நீளும்போது மனம் களைத்துப்
போகிறது மகளுக்கும் அவள் கணவருக்கும்.

நீங்கள் சொல்வது குழந்தைகள் வீட்டில் இருந்தால்
இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகம் தான்.

நாங்கள் இருக்கும் சபர்பில் அனைவரும்
வெளியில் வருவதில்லை.
டிஸ்டன்ஸ் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெளியில் வந்தோமோ
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
நம்மை ஒரு பைத்தியம் மாதிரி
பார்க்கிறார்கள்.
நீங்கள் பால்கனியில் இருந்து பார்ப்பதை
நான் ஜன்னல் வழியாகப்
பார்க்கிறேன். தோட்டம் என்கிற யார்ட் கவனிக்காமல் விட்டால்
வேண்டாத ஜந்துக்கள் புழக்கம் அதிகமாகிவிடும்.
என்னன்னு சொல்றதுப்பா.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் என்றும் நலமோடு இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இந்த நாள் இனிய நாளாகட்டும்.

ஆமாம் ,அவர்கள் வருவதும் நாம் பாதுகாப்புச் செய்து கொள்வதும் இன்னும் வேலைதான்.

அதுவும் சர்க்கரை என்னிடம் அதிக ஆசை வைத்திருப்பதால்
பெண் வீட்டு வாயிலில் கூட உட்கார விடவில்லை.
இதோ குளிர் வந்து விட்டது.

நன்மை விளையட்டும் மா. நலமாக இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//எல்லா மன சிரமங்களும் தீரும் காலம் வரும்.
அதுவரை நம் மனசாட்சிக்கு ஒப்ப நடப்போம்.
பித்தம் பிடித்தவர்கள் பேச்சைக் கேட்க வேண்டாம்.//

நல்லதே நடக்கட்டும். எனது பிரார்த்தனைகளும்.