தமிழில் Instigator வார்த்தைக்கு என்ன பொருள்
என்று பார்த்தேன்.
சிறு வயதில் இருந்து எனக்கு இந்த விஷயத்தில் பொறுமை
இருந்ததில்லை என்று தெளிவாகியது.
இல்லாவிட்டால் உலகில் கேலி செய்பவர்களும்,
அதனால்
பாதிக்கப் படுபவர்களும்,
அவர்களின் துன்பத்தைக் கண்டும்
அலட்சிய ப் படுத்துபவர்களும் இருப்பதைக் காணும் போது
இத்தனை வருந்த வேண்டாம்.
நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்?
.
.
இதோ இங்கே ஒரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
உலகம் எங்கும் தொற்று விளையாடிக் கொண்டிருக்க
அத்தனை உயிர்களும் அதிர்ந்து மரித்துக் கொண்டிருக்க
யார் முன்னோடியாக இருக்க வேண்டுமோ
அவரே எல்லாவற்றையும் கேலிக்கூத்து என்று
சொல்லிக் கொண்டிருந்தார்.
அகத்தியர் படத்தில் இராவணன் பாடுவது போல
வென்றிடுவேன்'' என்று சூளுரைத்தவர்
தானே அந்தப் புயலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இறைவன் தான் அனைவரையும் காக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் கோவிட் 19க்கு
இரையான என் தோழிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
சாந்தமே வடிவானவள். அதிர்ந்து பேசத் தெரியாது.
சென்ற வருடம், இந்த ஊரில் இருக்கும் அவளுடைய மகள் வீட்டிற்கு
வந்திருந்த போது
சந்தித்துப் பேசிக்கொண்டோம்.
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை. வேலைக்கு அஞ்ச மாட்டாள்.
யார் வழியாக இந்த நோய் வந்தது என்று தெரியாமலேயே
5 நாட்களில் இறைவனடி சேர்ந்தாள்.
அந்த மக்கள் படும் துன்பம் அளவிட முடியாதது.
தாயைப் போய்ப் பார்க்க முடியாத நிலை.
உலகம் மாறட்டும். நல்ல வார்த்தைகள் சொல்லி
பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
முகக் கவசம் அணிவோம்.
முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்ப்போம்.
நம்மால் மற்றவருக்கும்
அவர்களால் நமக்கும் தொற்று வராமல்
இருக்க ஒரே வழி அது.
14 comments:
தங்களது தோழியின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.
பலருக்கும் இழப்புகள் தொடர்கின்றன.
உங்கள் தோழியின் மறைவு - அடடா... அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மன நிம்மதியை இறைவன் அளித்திட எனது பிரார்த்தனைகள்.
ரொம்ப வருத்தமான செய்தி. உங்கள் தோழியின் ஆன்மா நற்கதி அடையட்டும். கொரோனா ஒரு பக்கம் குறைகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் அதிகரிக்கிறது. மக்களோ எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் பயணிக்கின்றனர்.
முடிந்தவரை ஒவ்வொவரும் தம்மைக் காத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதுவே இக்கொடிய நோயை விரட்ட சரியான வழி. பலர் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நடப்பதால்தான் இந்த விளைவுகள்.
மிகவும் வருந்த வைக்கும் சம்பவம். தோழியை இழந்து வாடும் உங்களுக்கும், மறைந்தவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கொடுமையான நிலை நிறைந்த ஒரு காலகட்டம். சீக்கிரம் கடக்கவேண்டும் என்று மனதில் ஆவல்.
படத்தை போட்டுப்பின் பிறந்தநாள் வாழ்த்து எனப் படிப்பதற்குள் மனம் படபடத்துவிடுகிறது...கண்டேன் சீதையை என அனுமன் சொல்லியதன் முக்கியத்துவம் இப்போதுதான் புரிகிறது...
வணக்கம் சகோதரி
கொரானாவால் ஏற்பட்ட உங்கள் தோழியின் மறைவு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. அவர் குடும்பத்திற்கும், உங்களுக்கும், இந்த சிரமமான காலகட்டத்தில் அவர் பிரிவைத் தாங்கும் மன வலிமையை ஆண்டவன் தர வேண்டுகிறேன்.இந்த தொற்றை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடவும் இறைவன் மனம் வைக்க வேண்டும்.பிரார்த்திப்போம்.
அன்பு தேவகோட்டைஜி,
மிக மிக சாது என் தோழி.
தாக்கப் பட்டது கூடத் தெரியாமல்
ஒரு நாள் காய்ச்சல் ஐந்து நாட்கள்
மருத்துவமனை யாரிடமும் விடை பெறாமலேயே
மறைந்தாள். பிரார்த்தனைகள் அமைதி கொடுக்கட்டும்.
நன்றி மா.
அன்பு வெங்கட்,
அனைவரின் நலனை வேண்டியபடியே இருக்கிறேன்.
இதை அலட்சியப் படுத்துபவர்கள் மற்றவர்க்கு எவ்வளவு துன்பம் தருகிறோம் என்று அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
பத்திரமாக இருங்கள் மா.
அன்பு கீதாமா,
நல்லன அல்லாத செய்தியைப் பதிவிடுகிறோமே
என்று வருத்தப் படுகிறேன்.
ஆனால் இப்படி கருத்தில்லாமல் பேசுபவர்களைக் கண்டால்
மிக வருத்தமாக இருக்கிறது.
உயிர்களின் நோவைக் காணவில்லையே
என்ற கோபமும் வருகிறது.
என்ன செய்யலாம் காலத்தின் கோலம்.
நன்றி மா. தோழிக்கும் அவள் வீட்டில்
பித்ரு கார்யம்(சிராத்தம்) செய்ய வந்தவரால் தொற்று வந்ததாக
சொல்கிறார்கள்.
அன்பு முனைவர் ஐயா,
மிக மிக உண்மை. தலைவர்களே இது போல அபத்தமாகப்
பேசி நடந்து கொண்டால்
அவரை நம்பும் மக்களும் திசை திரும்பிவிடுவார்கள் '
என்பதே சோகம்.
என்ன புலம்பி என்ன பலன்.
அவள் மகளை ,மகனை நினைத்தே வருத்தம்.
மிக நன்றி ஐயா.
அன்பு ஸ்ரீராம் என்றும் நலமாக இருக்க வேண்டும்.
சட்டென்று நடந்து விட்டது.
என்ன சிரமப் பட்டாளோ.
இறைவன் அவள் ஆன்மாவுக்கு
நிம்மதி கொடுக்க வேண்டும்.
நன்றி மா. பத்திரமாக இருங்கள் .
அன்பு கமலாமா,
மிக மிக நன்றிமா.
எல்லோரும் இந்தத் தொற்றின் வீர்யத்தை உணர்ந்தார்களா
தெரியவில்லை.
ஏன் இப்படி கூட்டம் சேர்க்கிறார்கள்?
பிரசங்கம் செய்கிறார்கள் என்று புரியவில்லை.
நம் ஊரில் ஒவ்வொரு நாளும்
சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களை நினைத்தாலே
பிரமிப்பாக இருக்கிறது.என் தோழி
அவ்வளவு பாதுகாப்பாக இருந்தவளுக்கு வீடு தேடி
வந்துவிட்டது.
இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்.
நன்றி மா.
வணக்கம் திரு அனானி.
ஆமாம் தினசரி ஏதாவது படத்தோடு செய்தி
வந்துவிடுகிறது.
படத்துக்கு முன்பே பிறந்த நாள்
என்று போட்டால் நன்றாக இருக்கும்.
என்ன செய்யலாம் காலம் சோதிக்கிறது.
நன்றி.
Post a Comment