Blog Archive

Friday, October 02, 2020

நல்ல நடிப்பு என்றால் என்ன?

அந்த நாள் படமும் இன்னோரு கோணத்தில் சிவாஜியைக் காண்பித்தது. ஆண்ட்டி
ஹீரோ. முழுமையான படம்.
வீர பாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எல்லாமே
நடிப்பின் மைல் கற்கள்.

அவர் நடிப்பும் என்றும் நம்முடன்.


வல்லிசிம்ஹன்

இந்தப் பதிவு என்னைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே.:)))))))))))

நடிப்பு என்ற ஒன்றுக்காகவே படங்கள் 
வெற்றி பெற்ற காலங்களில் வளர்ந்த நாங்கள் நல்ல கருத்துகளைக் கேட்டோம்.
குடும்பம் , பாசம், கட்டுப்பாடு, நேர்மை
தேச பக்தி என்று கட்டுக்கோப்பாய் அமைந்து வந்த
படங்களை நடிகர்கள் நடித்து வெளி
வந்த போது நன்மை வெற்றி பெறும்.
தீமை தொலையும் என்றே  நம்பினோம்.

பராசக்தி முதல் உயர்ந்த மனிதன் வரை  நடிகர் திலகம் 
படங்களை அத்தனையும் பார்க்காவிட்டாலும் 

நல்ல விமரிசனம் வந்த படங்களுக்கு
அப்பாவே அழைத்துப் போவார்.
ப'' வரிசைப் படங்களில் இசையும் நன்றாக இருகும்.
கருத்தும் நன்றாக இருக்கும்.

ஆமாம் பணம் வாங்கிக் கொண்டுதான் 
நடித்தார்கள்.
 ஆனால் எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ
அத்தனை திறமையையும் கொடுத்தே
நடித்தனர்.

சின்னத்தம்பி ரசித்தது போல அவர் நடிப்பை அங்குலம் அங்குலமாக்ச் 
சொல்ல முடியாது.
மொத்தத்தில் அவரது பாடல்கள்
ரசிக்கும்படி இருக்கும்.
வயதான பிறகு அவர் நடித்த படங்களை நான் விரும்பிப்
பார்க்கவில்லை.
தேவர் மகன் படம் அந்தக் குறையைத் தீர்த்தது.

சோகம் நிரம்பிய படம் என்பதற்காகப்
பாசமலர் முடிவதற்கு முன்பே வெளியே வந்த நினைவும் 
இருக்கிறது.
எழுத்தாளர் சுகா அவர்களின் 'தாயார் சன்னிதி'யில்
பாசமலர் படப் பெயரைப் 
பார்த்ததுமே அவர் நண்பர் அழுதுவிடுவாராம்:)
உண்மையிலேயே  மிகச் சிறப்பான வசனங்களுடன்,
காட்சி அமைப்புகளுடன் வந்த படம்.
அண்ணனும் தங்கையும் ஒன்றாக உயிர் நீத்த கதை அது ஒன்றுதான் 
என்று நினைக்கிறேன்.
அப்படி எல்லாம் நடக்க சாத்தியக்கூறுகள்
இல்லை என்றாலும், நம்ப வைத்தார்கள் சிவாஜியும் நடிகையர் 
திலகமும்.
அதே போல ''கை கொடுத்த தெய்வம்''

உயர்ந்த மனிதனின் கௌரவமான நடிப்பு.

சாவித்திரியின் நடிப்புக்கு இன்னோரு கோணம்,
பெருமை கொடுத்த படம்.
முதல் பாதியில் அட்டகாசம் செய்தாலும் அடுத்த பாதியில்
மிக அடக்கி நடித்திருப்பார் சிவாஜி.

''தங்கப்பதக்கம்'' இன்னோரு பக்கம்.
மிகை மிகை என்று சொல்பவர்களுக்கு
இந்த நடிப்பை நேரில் மேடையில் 
பார்த்திருக்கும் எனக்கு என்ன பதில் என்றே சொல்ல 
முடியவில்லை.
இப்படி எல்லாம் காவல் துறை அதிகாரிகள் 
இருந்திருக்கிறார்கள்.என்று நம்ப வைத்த படம்.






ஞான ஒளி நாடகமும் , திரைப்படமும் 
பார்த்திருக்கிறேன்.
மேஜரும், சிவாஜியும் நல்ல ஜோடி.
இருவரும் நடிப்பில் வல்லவர்கள்.

மெலோட்ராமா என்று வைத்துக் கொண்டாலும் அலுக்காத 
படம்.
அதுவும் கடைசிக் காட்சியில் நடிகை சாரதாவும், 
மேஜரும்,சிவாஜியும்  நடிப்பில் ஜெயித்திருப்பார்கள்.

14 comments:

ஜீவி said...

இது நடிப்பு என்று தெரியாமல் இருப்பது தான் நல்ல நடிப்புக்கு இலக்கணம் என்று சொல்வார்கள்.

துரை செல்வராஜூ said...

நான் நடிகர் திலகம் அவர்களின் ரசிகன் என்றாலும் பிற்காலத்தில் அவர் நடித்த பல படங்களை விரும்பியதில்லை..

இன்னமும் முதல் மரியாதை திரைப் படத்தை ரசிப்பதில்லை...

ஸ்ரீராம். said...

சிவாஜி  சொல்லப்போனால் நிறையச்ச சொல்லலாம்.  விமர்சிப்பவர்கள் விமர்சித்துவிட்டுப் போகட்டும்.  எனக்கு(ம்) அவரைப் பிடிக்கும்.  எனக்குப் பிடித்த அவரை எனக்குப் பிடித்த படங்களில் நான் ரசித்துவிட்டுப் போகிறேன்.  எத்தனை படங்கள்...   என்ன நடிப்பு...   அப்பப்பா...  அவரின் பின்னாட்களிலான படங்களை நானும் ரசிப்பதில்லை.  முதல் மரியாதை, தேவர் மகன் விதிவிலக்கு.

KILLERGEE Devakottai said...

நாடகத்திலிருந்து பரிமாணம் பெற்று திரைப்படம் ஆனதால் பலருக்கும் சிவாஜியின் நடிப்பு மிகைப்படுத்துவது போலிருக்கிறது மற்றபடி அவரது நடிப்புக்கு இணையானவர்கள் யாருமில்லை.

வல்லிசிம்ஹன் said...

உணமைதான் ஜீவி சார்.
சரியாகச் சொன்னீர்கள்.
ஒவ்வொரு படத்திலேயும் அதைத்தான் அவர் செய்திருப்பார்.
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை வணக்கம்மா.

நானும் பல படங்களைத் தவிர்த்துவிட்டேன்.
அப்படிப் பட்ட படங்களை அவர் விட்டிருக்கலாம்.
பழைய படங்கள் கலாட்டா கல்யாணம் உட்பட
எல்லாவற்றையும் நான் ரசிக்கிறேன்.
மிக நன்றி மா.
உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறது
என்றே நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
நன்றி மா. தூக்குத் தூக்கியிலிருந்து

அவர் நடித்த நல்ல படங்களை விடுவதில்லை.
வயதுக்கு மீறிய இள வேடங்களில் அவர் எந்த
தேவைக்காக நடித்தாரோ. நமக்குத் தெரியாது.

இனி அவர் மாதிரி பன்முகத் திறமை காட்ட ஒருவரும் இல்லை.
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
நீங்கள் சொல்லும் வார்த்தைகளை நானும் படித்திருக்கிறேன்.

அதுதான் உண்மை.
நாங்கள் இருந்த தென் தமிழகத்தில் இது
போன்ற நடிப்பு மக்களை எட்டியது.

எப்பொழுதோ அவர் குரலைப்
பொதுக்கூட்டத்தில் கேட்ட போது
பிரமிப்பாக இருந்தது.
அத்தனை சுத்தத் தமிழ்.

மிக நன்றி மா.

கோமதி அரசு said...

சிவாஜியின் பழைய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
நீங்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் நல்ல படங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

எனக்கும் அந்தக்கால சிவாஜி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நீங்கள் சொன்ன "ப" வரிசை குடும்ப படங்கள் தேசபக்தி படங்கள் எல்லாமே (ஒன்றிரண்டையே தவிர்த்து) தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். அவரைப் போல கதையுடன் ஒன்றி நடிக்க சிலரை தவிர்த்து வேறு எவருமில்லை. நடுவில் வந்த படங்களில் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பு என்ற கருத்து அவரைப்பற்றி நிலவியது. (ராஜ ராஜ சோழன்படத்தில் இவர் நடிப்பு கொஞ்சம் மிகைதான்.) எப்படியும் சிவாஜிக்கு நிகர் அவரேதான்.நீங்கள் தந்திருக்கும் காட்சிகளை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்த்து விடுவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

//இந்தப் பதிவு என்னைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே.:)))))))))))// !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அரட்டையில் துரை ரொம்ப கலாய்ததார். அவரைச் சொல்லி இந்தப் பதிவை
இட எண்ணினேன். பெயர் விட்டுப் போச்சு! !!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
உண்மைதான். நல்ல படங்களை மட்டும் நாம் பாரக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,

தாங்களும். அவர் படங்களை ரசிப்பீர்கள் எனபதில் எனக்கு மகிழ்ச்சி. பழைய படங்களை விட்டு வேறு பார்ப்பதில்லை.
முடந்த போது காணொளிகளைப் பார்ககலாம் நன்றி மா.