Blog Archive

Thursday, October 15, 2020

உண்மை நட்பு எப்பொழுதும் அழைக்கலாம்.


வல்லிசிம்ஹன்

சமீபத்தில் படிக்க நேர்ந்த எண்ணங்கள்,
 தோழிகளின் வாட்ஸாப் செய்திகள்.........
மிகவும் சிந்திக்க வைத்தன.
இந்தத் தொற்று வெளிப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன.

எத்தனையோ விதமான விபரீதங்களைப் பார்த்தாகிவிட்டது.
வெளியே போக முடியாத சூழ்னிலை.
வெளியே போயே ஆகவேண்டிய சில நண்பர்களைப்
பற்றிய கவலை.


குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பதால் 
அவ்வப்போது ஏற்படும் சிறு உரசல்கள்.
எந்த வித சூழ்நிலையிலும் மன உறுதி
கலையாமல் எப்பொழுதும் போலக் கலந்துரையாடி வரும் நட்புகளே
இப்போது கை கொடுக்கின்றன.
 பழைய படத்தைப் பார்த்ததும்  அதிரடி அதிரா நினைவு வந்தது.:)
தேம்ஸிலே குதிக்கிறதை விட்டு விட்டார்களா?
ஏன் எழுதுவதில்லை?

ஒவ்வொரு ஊரிலும்  சேகரித்து வைத்திருக்கும்  நட்புப் 
பொக்கிஷங்கள் .
லண்டனில் ஏஞ்சல்.
ஜகார்த்தா வில் தான்  யாரும் கிடைக்கவில்லை.

எங்கள் ப்ளாக்  அரட்டை செய்த புண்ணியம் என்  உயிர்த்தோழி 
கிடைத்தாள் .
மீண்டும் ஆவலுடன் பேசுவது  , தொடர்கிறது.
இருவருக்கும்  அந்தக் காலம் மாதிரி  இருந்தால் 
தினப்படி  பத்து பக்கக்  கடிதங்களை அஞ்சல் செய்து கொண்டிருப்போம்.

இப்பொழுது அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை 
கொஞ்சமாகத்தான்   நேரம் கிடைக்கிறது.

மிக  அழகான அருமையான பாடல்.
நட்பு என்பது என்ன?

புரிதல் கட்டாயம் வேண்டும்.  இவள் என் தோழி. என்னை  புரிந்தவள்.
குற்றம் குறை கண்டுபிடிக்க மாட்டாள்   .

நானும் அனுசரித்து நடந்தால் எல்லாம் இனிமை.

என்னுடன் சேர்ந்து பயணித்த இன்னும் பயணித்து வரும் 
நட்புகள் எல்லோருமே ஆதரவானவர்கள்.

கீதா சாம்பசிவம், துளசி கோபால், கோமதி அரசு,
ஸ்ரீராம் பாலசுப்ரமணியம், கீதா ரங்கன், கவுதமன் ஜி,  வெங்கட் நாகராஜன் ,,Kamala Hariharan,அன்பு தேவகோட்டைஜி,
துரை செல்வராஜு, பானுமதி வெங்கடேஸ்வரன்,

ஷாந்தி மாரியப்பன் , உஷா ராமச்சந்திரா,மதுமிதா,
 இன்னும் அந்தரங்கத்    தோழிகளாக  விடாமல் 
அரவணைக்கும்  எல்லாக் குழுக்களும் 
 நான் எழுதத்  தொடங்கின நாட்களிலிருந்து கிடைத்தவர்கள்.

 என் இனிய நாட்களிலும் , இனிமை இல்லாத நாட்களிலும் 
கூடவே  இணைந்திருந்தவர்கள்.
தமிழ் கொடுத்த இந்த இனிமை  ,இணையம் கொடுத்த நட்பு 
எல்லாமே வார்த்தைகளில் அடைத்து விட முடியாது.

இவை எல்லாம்  தொடர இறைவனே அருள் செய்ய வேண்டும்.

இன்னும் நண்பர்கள்  பெயர்கள் விட்டுப் போயிருக்கும்.
நம் சந்திரமௌலி கணபதி போல.
எல்லோரும் முக நூலுக்கு மாறிய வேகத்தில் வலைப் 

பதிவில் எழுதுகிறார்களா தெரியவில்லை.

ஐப்பசி வர போகிறது. கூடவே மௌனமாக இருக்க வேண்டிய தினங்களும் வரும்.

நன்மைகள்  சேர அனைவரும் மிக நலமாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துக்கள்.

எல்லோரும்   எப்படிக் கொண்டாடப்  போகிறீர்களோ 
தெரியவில்லை. இதுவும்  ஜூம்  வழியே நடக்குமோ.:)
பார்க்கலாம்.

Special mention to Sujatha Yagnaraman,and Latha Ganesan











19 comments:

ஸ்ரீராம். said...

வெளியே போகக்கூடாது என்று நாம் நினைத்தாலும் சில உறவுகள் அவர்கள் வீட்டு விசேஷத்துக்கு வலுக்கட்டாயமாக இழுக்கிறார்கள்.  வராவிட்டால் மிகவும் வருத்தம், கோபம் அடிக்கிறார்கள்.  அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு-வரும் ஞாயிறு அன்று.  அவர்கள் குறைவாகவும் ஆட்களை அழைக்கவில்லை.  நூறு பேர்களுக்கு மேல் அழைத்திருக்கிறார்கள்.  

ஸ்ரீராம். said...

ஆமாம்...   அதிராவை ரொம்ப நாட்களாய்க் காணோம்.  பிஸி போல...   நட்புகள் அமைவது வரம்.  பழைய தோழி மீண்டும் கிடைத்திருப்பது சந்தோஷம்.  மனதில் பழைய நினைவுகள் வந்து குதூகலம் அரும்பும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இது தப்பில்லையா. நேற்றுதான், வெறும் சிராத்த காரியத்தில் 30 பேரில் நாலு பேர்
தொற்று வந்து
பெருமாள் கிட்டயும் போயாச்சுன்னு
செய்தி வந்தது,.

நீங்கள் அங்கே போவதானால் எப்படி சமாளிப்பீர்களோ.
நூறு பேரா.
இல்லை நிலைமையின் தீவிரம் அவர்களுக்குப்
புரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் உண்மைதான்.
தோழி கிடைத்ததில் பழைய சந்தோஷங்கள்
மீள்கின்றன.நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன. போகாமல் இருந்ததால் சில உறவினர்கள் பேசுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்! புரிதல் இல்லை! என்ன செய்ய முடியும்! அவர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகருகின்றன.

அழகாக எழுதி இருக்கிறீர்கள் மா. என்னையும் பதிவில் குறிப்பிட்டு இருப்பது பார்த்து மகிழ்ச்சி.

இனிமையான பாடலையும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடரட்டும் இனிய நட்பும் புரிதலும்!

கோமதி அரசு said...

உண்மையான நட்பு எப்பொழுதும் அழைக்கலாம் தலைப்பு அருமை.
பழைய நட்பு மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி.

உங்கள் அன்பான நட்பு வட்டத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அக்கா. சுகதுக்கங்களை பரிமாறிக் கொள்ள நட்பு மிகவும் அவசியம் ஒவ்வொருவர் வாழ்விலும். அது அருமையாக கிடைத்து இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாளை கொஞ்ச பொம்மைகளை வைத்து கொலு ஆரம்பிக்க வேண்டும். முன்பு மாதிரி பட பட என்று வேலைகள் செய்ய முடியவில்லை மெதுவாக ஆமை வேகத்தில் போகிறது.

தம்பியும், தம்பி மனைவியும் உதவிக்கு வரவா என்று கேட்டார்கள் வேண்டாம் எல்லாம் கீழே தான் வைத்து இருக்கிறோம் பொம்மைகளை மெதுவாய் எடுத்து வைத்துக் கொள்கிறோம் . என்று சொல்லி விட்டோம்.

மாயவரத்தில் அழைத்தது போல் இங்கு அழைப்பது இல்லை ஆட்களை (அதுவும் இப்போது இருக்கும் நிலையில்) வருகிறேன் என்பவர்களை வராதே என்றும் சொல்லவும் முடியாது.

ஒவ்வொரு குடும்பமும் தனி தனியாக வந்து பார்த்து சென்றால் நல்லது பார்ப்போம் மனது நோகாமல் சொல்ல வேண்டும். உறவினர் வீட்டு அழைப்புகளுக்கு போகாமல் இருக்க பார்த்து பேச வேண்டும் . அம்மன் தான் எல்லாம் அருளவேண்டும்.



வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம்மா.

இங்கே அதிகரிக்கும் தொற்று பயத்தைக் காற்றில்
உலாவ விடுகிறது.
ஒரு வேளை நம் ஊய்ல் அந்தப் பயமும்
குறைந்து விட்டதோ.?

வீட்டில் முடங்கிக் கிடப்பது சிரமம் தான்.
ஏற்கனவே அலுவலகத்தில் ஒருவருக்கு
தொற்று இருக்குமோ என்று பயந்தீர்கள்.
இப்போது வலியப் போய் அந்த வம்பை
அணுகலாமா.

அவர்களுக்குத் தான் தெரிய வேண்டும்.
இறைவன் துணை இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
உண்மையிலேயே இது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு.
மறந்து போய்விட்டேன் என்று நினைத்த
மகிழ்ச்சி நினைவுகள் ஊர்வலம் தான். நல்ல வேளை இந்தப்
பதிவு நினைவுக்கு வந்தது.

அன்பும் நட்பும் நெஞ்சில் எப்பொழுதும்
உறைய வேண்டும்.
நம் நட்பு வட்டாரத்தில் தேவகோட்டைஜியையும்,
துரை செல்வராஜுவையும் குறிப்பிட மறந்து விட்டேன்.

இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு இந்த எழுத்தும் , உங்கள்
எல்லோருடைய அன்பும் அக்கறையும் தான் காரணம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய நவராத்திரி வாழ்த்துகள் அம்மா.
நவரத்திரி நாயகிகள் எழுந்தருளி இருந்து
நம்மைக் காக்கட்டும்.

துரை செல்வராஜூ said...

மிகவும் அதிர்ச்சியாகவும் பதற்றமாகவும் இருக்கின்றது..

தஞ்சையில் அவ்வப்போது மகன் சற்றே வெளியில் சென்றுவர மனைவி எங்கும் செல்வதில்லை.. ஆயினும் வைரஸ் தொற்று ஏற்பட்டு - இறைவனின் அருளும் மூலிகை மருந்துகளும் பூர்வ ஜென்ம புண்ணியமும் என் மனைவியைக் காத்து நின்று மீட்டுக் கொடுத்திருக்கின்றன..

இங்கிருந்து புறப்படலாம் எனில் விமானப் போக்குவரத்து எப்போது என்று தெரியவில்லை...

நிறுவனத்திலிருந்தும் உடனடியாக வெளியேற முடியாது..

எல்லாவற்றுக்கும் தெய்வமே துணை..

Geetha Sambasivam said...

உங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சி. அப்போ எழுத ஆரம்பித்தவர்களிலே நீங்க, நான், துளசி மூவரும் தான் இன்னமும் எழுதுகிறோம்னு நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் எனக்கும் நண்பர்களே! அனைத்து நண்பர்களின் ஆதரவினால் தான் இந்த அளவிற்கு எழுத முடிகிறது. இனிமையான நட்புக்கும் நண்பர்களுக்கும் இறைவனுக்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

என்னையும் தங்களது நட்பு வட்டத்தில் சேர்த்ததற்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

Angel said...

ஆஆவ் !!! வல்லிம்மா சும்மா எ .பி சைட் பாரில் பார்த்து வந்தேன் ..ஸ்வீட் ஸர்ப்ரைஸ் .
வேலை டைமிங்ஸ் குளிர் எல்லாம் எங்கியும் போக விட மாட்டேங்குது .மீண்டும் அதிரடியா அதிராவும்  களம் இறங்குவார் .தொடர்பில் இருப்போம் வல்லிம்மா .

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
என்னமா? இப்படியொரு செய்தி சொல்கிறீர்கள்.:(
நான் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே.

அந்தப் பெரிய கோயில் உடையவர் தான் எல்லோரையும் காக்க வேண்டும்.

ஆமாம் விமானங்களும் செல்வதில்லை.
பயணங்களும் பாதிக்கப் பட்டு இருக்கின்றன.
நலமுடன் இருக்கட்டும் தங்கள் துணைவி,.
மகனையும் பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள்.

எங்கேயோ இருக்கிறோம்.
நமக்கு இறைவன் ஒருவனே உறுதுணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் வாழ்வின் சுவையான கட்டத்தில் சேர்ந்தோம்.
இனிமையான வார்த்தைகளுக்குப்
பஞ்சமில்லாமல் நாம் பழகிக் கொண்டு வருகிறோம்.

உங்களைப் போன்ற அறிவார்ந்த விஷயங்களையும், உணவுப்
பழக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
நம் கோமதியின் வழியே கடவுளர் தரிசனம் கிடைக்கிறது.
எத்தனையோ நன்மைகளைக் கொடுத்திருக்கும் இறைவன்
எல்லோரையும் மிக பத்திரமாகக் காக்க வேண்டும்.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.

வல்லிசிம்ஹன் said...

துரை, நாந்தான் கொடுத்து வைத்தவள்.
அன்பு புதல்வர்களின் சாம்ராஜ்யம் கிடைத்திருக்கிறது.
வளமுடன் இருங்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
இப்போதே ஆரம்பித்து விட்ட குளிரை இன்னும் எப்படி சமாளிக்கப்
போகிறோம் என்றே மலைப்பாக இருக்கிறது.

ஏதாவது எழுதுங்கள் அம்மா.
வளமுடன் வாழுங்கள். மகள்,கணவர் மற்றும் செல்லங்களுக்கு
நல விசாரிப்புகள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வல்லிம்மா, ஸ்ரீராம்... யாரையையும் தேட வைக்காமல் அப்ப அப்போ தலை காட்ட வேண்டும் என நினைப்பேன்.. முடியாமல் போய் விடுகிறது.

இது அஞ்சு என்னை மிரட்டினா, வல்லிம்மாவும் தேடுகிறா போய் ஒரு கொமெண்ட் போடக்கூடாதோ என, அதனால சரி இன்று மாதப்பிறப்பு, நவராத்திரி ஆரம்பம்.. ஒருக்கால் எல்லோரையும் நலம் விசாரிக்கலாமே என வந்தால், எந்தப் போஸ்ட் எனத் தெரியாமல்.. தேடிக் கண்டு பிடிச்சிட்டேன்.. அதற்குள் வல்லிம்மா 2 போஸ்ட்டுகள் போட்டுவிட்டீங்கள்... சந்தோசம் இப்படி சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக இருங்கோ... நன்றி.. மீண்டும் வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, அல்லிராணி :)
வருக வருக.
இங்கயும் குளிர் படுத்தும் பாடு அதிகமாக இருக்கு.
வீட்டுக்குள்ளயே வளைய வருவது,

அதுதான் பதிவுகள் இடுகிறேன்.
நல்லபடியாக ஐப்பசி பிறந்தது.
நவராத்திரி ஆரம்பமானது.
அன்னையின் அருளில் நம் வாழ்வு சிறக்கட்டும்மா.