Blog Archive

Friday, October 09, 2020

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....1

இது புதுப் படம்


வல்லிசிம்ஹன்
இது பழைய படம்.

2018இல் நான் பார்த்த தம்பதியர்  சாலியும் அவள் கணவன் ஆர்தர் மில்லரும்.

எங்கள் வீட்டு வேலிக்குப் பின் புறம் இருக்கும்
மில்லியன் டாலர் வீட்டில் இருப்பவர்கள்.

அவர்களது தோட்டத்தில் ஸாலியும் கணவரும் வேலை செய்வார்கள்.
நானும் மகளும் செம்பருத்திச் செடிகளை நட்டுக் கொண்டிருந்தோம்.

ஓரிரண்டு வார்த்தைகளில் ஆரம்பித்த நட்பு
வளர்ந்தது.

அது கோடைக்காலமாதலால்  வருபவர்கள் போகிறவர்கள்
என்று கலகலப்பாக இருந்த நேரம்,
ஒரு சனிக்கிழமை மாலை வீட்டைக் சுற்றி விள்க்குகள்.

குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம்.
என்ன விசேஷம் என்று மகளைக் கேட்டேன்.
 ஸாலி ஆர்தர் Getting married '' என்றாள்!!
என்னது. இனிமேதானா. ?
எனக்குப் புரியவில்லை. ஸாலி இரண்டாவது தடவையாகத் திருமணம்
செய்கிறாள்....ஆர்தருக்கு இதுதான் முதல் என்றாள்.

ஸாலியின் மகளும் மகனும் சிறப்பாக உடை உடுத்தி
பலூன் ,பூ அலங்காரம் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் குழந்தைகள் களியாட்டம்
போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெரிய தோட்டம் அழகான பெரிய  ஷாமியானா
போடப்பட்டு, நாற்காலிகள்  ,அதற்கான அலங்காரங்கள்
என்று சிறப்பாக  ஒளிர்ந்தது.

விருந்தினர்கள் வர ஆரம்பித்ததும்
நாங்கள் உள்ளே வந்து விட்டோம்.
 இசை, நடனம் என்று இரவு 10 மணி வரை தொடர்ந்தது.
 

இது ஆர்தருக்காகப் போடப்பட்ட பாடல்.

இது ஸாலிக்காக இசைக்கப் பட்டது.

 கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் 
பிறகு  ஸாலியை நம் வீட்டுக்கு வரச் சொல்லி 
அழைத்தாள் மகள்.

பிறகே இந்தத் திருமணத்துக்கான கதை 
புரிந்தது!!!!!


இந்த ஊரில் ஹைஸ்கூல் ஸ்வீட் ஹார்ட்ஸ்னு சொல்வார்கள் .
பள்ளியிலேயே  காதலிப்பது. சில திருமணங்களில்
முடியும்.
சிலர் பிரிந்து விடுவார்கள்.
ஆர்தர் குடும்பமும் ,ஸாலி குடும்பமும் 
பக்கத்து வீட்டுக்காரர்களாம்.

ஏதோ ஒரு  குழப்பத்தில் ஸாலியின் தந்தை
பக்கத்து வீட்டுக்காரர்களைப்
பகைத்துக் கொண்டார்.
 
காதலிக்கத் தொடங்கி இருந்த ஆர்தர் ,ஸாலி ஜோடியைப்
பிரித்தார்,.
அப்பொழுது ஸாலி கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
ஆர்தர் மனம் உடைந்து வேற்றூரில் கல்லூரிப் 
படிப்பைத் தொடர்ந்து விட்டாராம்.

அவர் தன்பெற்றோரைப் பார்க்கவே
நாலைந்து வருடங்கள் கழித்தே வந்தாராம்.
தந்தையின் கெடுபிடியில் வேற்று ஊருக்கு 
அழைத்து செல்லப்பட்டு அங்கே குழந்தை பெற்றாராம்
ஸாலி.

அங்கேயே மற்றோரு தொழிலதிபருக்கு
தந்தை திருமணம்  ஸாலியைத் திருமணம்
செய்து வைத்தாராம்.
பென்னட் என்று பெயர்.
துரதிருஷ்ட வசமாக  பென்னட் , ஸாலிக்குக்
குழந்தை இல்லை.
அதனால்  ஆதரவு அற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து
இன்னோரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தார்களாம்.

இதென்னடா இது !!! நாம் படிக்கும் கதைகளுக்கு மேலே
பெரிய கதையாக இருக்கிறதே என்று நான் திறந்த வாயை மூடவில்லை!!!!!!!!!!





10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பெரிய கதையாகத் தான் இருக்கும் போல...

வல்லிசிம்ஹன் said...

:))))))அதேதான் அன்பு தனபாலன்.
எழுத முடியவில்லை. அதனால்
அடுத்த பாகத்தில் சொல்லி விடுகிறேன்!!!!!!!!

Geetha Sambasivam said...

சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த கதை. இத்தனை வருடங்கள் ஆன பின்னரும் நிலைத்திருக்கும் அன்பு என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்கட்டும். தொடரக் காத்திருக்கேன். ஆர்தர், சாலி தம்பதிகள் நீடூழி வாழட்டும். நம்ம ஊர்த் தமிழ்த் திரைப்படங்களை மிஞ்சும் கதையாக இருக்கும்போல!

வெங்கட் நாகராஜ் said...

பாடல்கள் இரண்டுமே கேட்டு ரசித்தேன்.

எத்தனை எத்தனை கதைகள் - ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ஸ்வாரஸ்ய கதை இருக்கத்தான் செய்கிறது.

மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

நம்மூரில் இதுபோல எதிர்பார்க்க முடியாது!

கோமதி அரசு said...

ஆர்தர் ,ஸாலி ஜோடி மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி.
தலைப்பு அருமை.
.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இரண்டு வருடங்களுக்கு முன் தான்
சிகாகோ வந்தார்கள்.
கோடையில் செடிகள் நடும் சமயம் ,பேசிக் கொள்வோம். நான் தம்பதிகள் என்று நினைத்தேன்.
இருவருக்கும் 55 வயதிருக்கும்.
ஸாலி வந்து சொல்லி இருக்காவிட்டால் தெரிந்திருக்காது.
ஆமாம். இது ஒரு நேர்மையான காதல். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

சில காதல்கள் வெற்றி பெறுகின்றன. இவர்களைப் போலப் பொறுத்திருந்து வெற்றி பெற்றவர்களை

இப்பொதுதான் பார்ககிறேன். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம் நம்மூரிலும் இருக்கலாம்.. புக்ககத்தில் இரண்டு திருமணங்கள் பார்த்திருக்கிறேன் மா.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

இதுதான் எனக்குச் சட்டென்று. தோன்றியது. இரண்டு வருடங்களாகக் கிடப்பில்

போட்டு வைத்திருந்தேன். இப்போது அவர்கள் வேறு இடம் சென்றதும் எழுதலாமே என்று தோன்றியது மா.
நன்றி மா.