Blog Archive

Friday, August 07, 2020

அஞ்சலி

வல்லிசிம்ஹன்

கீழநத்தம் வீர ராகவன்  கோபாலன்.
என்  மூன்றாவது மாமா,
81 வயதில்  இறைவனடி சேர்ந்தார்.

நல்ல  வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார்.

பல நல்ல நினைவுகள்.
அவரது  குண நலன் .
பிறருக்கு உதவும் நற்பண்பு,
என் அம்மாவைப் பார்க்க வரும்போது அவர் கொண்டு வரும் சீர்.
அக்காவிடமும் , அவள் குழந்தைகளிடம் அவர் வைத்திருந்த 
பாசம்   எல்லாமே   நினைவில் பதிந்திருப்பவை .

அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் 
எங்களுக்கும்  பிரிவு சோகம் தவிர 
மற்ற வருத்தம் இல்லை. உலக  தொந்தரவுகளிலிருந்து அமைதி பெறட்டும் அவர் ஆத்மா.



20 comments:

துரை செல்வராஜூ said...

எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நற்கதி அருளட்டும்...

நெல்லைத்தமிழன் said...

தலைப,பைப் பார்த்ததும் என்ன நம்ம ஊர் பெயரா இருக்குன்னு யோசித்தேன். நெல்லையில் வீர்ராகவபுரம் உண்டு. இவர் எங்க ஊர் கீழந்த்தம் கார்ரா? எந்த வருடம் அந்த ஊரைவிட்டுச் சென்றார்?

ஏகாந்தன் ! said...

ஸ்ரீராமனின் அருளால் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஸ்ரீராம். said...

ஆழ்ந்த இரங்கல்கள்.  அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

Geetha Sambasivam said...

எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோமதி அரசு said...

மாமாவின் ஆதமா இறைவனின் நிழலில் சாந்தி அடையட்டும்.

என்றும் உங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

KILLERGEE Devakottai said...

எனது இரங்கல்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அதையே பிரார்த்தித்த வண்ணமே இருக்கிறேன்.
நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கும் வாழ்வு.
நலம் பட வாழ இறைவனே துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கீழனத்தம் அம்மாவின் பெற்றோர்
வசித்த ஊர்.
நில புலன் களை உறவினரிடம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவர்கள்
90 ஆண்டுகளுக்கு முன்பே
சென்னை வந்தாச்சு.
வருடா வருடம் வேணுகோபால ஸ்வாமி திரு நாளை ஒட்டி சென்று வருவார்கள்.
அதனால்தான் இந்த மாமாவுக்கு கோபாலன் என்று பெயர்.
வீரராகவன் என் தாத்தா,அந்தக் கால சயன்ஸ் மாஸ்டர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் ஜி,
ஆமாம் அங்கு பூமி பூஜை
நடக்கும் போது இவர் நேரில் காணக்
கிளம்பி விட்டார்.
நலமே நடக்கும். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம்.
நல்ல பக்தி நெறியில் வாழ்ந்தவருக்கு நற்கதியே
கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி
கீதாமா. என் வளர்ச்சிக்குக் காரணமாக
இருந்தவர்களை நினைவில் நிறுத்தவே இங்கே பதிந்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு கோமதி மா.
குடும்பம் நல்ல நிலைமையில் இருக்கிறது.

உழைத்துக் களைத்த உடல் ஓய்வெடுத்துக்
கொண்டது,
நற்கதி இறைவன் அருள்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி .
மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...


அன்பு தேவகோட்டைஜி.
என்றும் வாழ்க வளமுடன்.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா இறைவனிடத்தில் சேர்ந்திட பிரார்த்தனைகள்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.

கீதா

Kamala Hariharan said...

உங்கள் மாமாவின் பிரிவுச்செய்தி வருத்தத்துக்குரியது. அவரின் மறைவு குறித்து மனம் கஸ்டமாக உள்ளது. அவரின் பிரிவால் வருத்தமுறும் உங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அவர் உங்கள் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.