மாமா கோபு,
பாடுவதில் வல்லவர்.
அதுவும் டிஎம் எஸ் அவர்களின் பாடலை
அப்படியே பிறழாமல் பாடுவார். இதெல்லாம்
அவருடைய இளம் வயதில்.
நானும் திருமணம் முடித்து வந்த பிறகு
பாட்டி வீட்டுக்கு செல்வது குறைந்து விட்டது.
மாமாவின் குடும்பமும் வேறு வேறு ஊர்களில் இருந்து
விட்டு மீண்டும் சென்னைக்கு வந்த போது
15 வருடங்கள் கடந்திருக்கும்.
அவரின் நினைவில் சில பாடல்களும் ஒரு திரைக் காட்சியும்.
தூக்குத்தூக்கி அனைவரும் விரும்பக் கூடிய
படம். அதில் வரும் வசனங்களும்
மறக்க முடியாதவை.
அடுத்து வருவது வணங்காமுடி படத்தின்
பாடல். ரீங்காரமாய் இன்றும் நம் காதில்
ஒலிக்கக் கூடிய குரல்.வாழ்க அவர் புகழ்.
அடுத்து வருவது சிந்தனை செய்மனமே..
அம்பிகாபதி படப் பாடல்.
ரசிக்கலாமா.
23 comments:
நினைவுகள் மறக்க முடியாதவை. பாடல்கள் இதம் அளிக்கக் கூடியவை. பாடல்கள் மனதின் துன்பத்தைக் குறைக்கட்டும்.
உங்கள் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? வலி எல்லாம் தேவலையா? நீங்கள் கீழே விழுந்ததும், தலையில் இடித்துக் கொண்டதுமே தெரியாது. அவ்வளவு கவனமாக இருந்திருக்கேன். உங்கள் உடல் நலத்தில் கவனம் வைக்கவும்.
இந்தப் பாடல்கள் எல்லாம் அந்தக் காலத்தில் பிரபலமான பாடல்கள். பட்டி தொட்டியெங்கும் எதிரொலிக்கும் பாடல்கள். அடிக்கடி கேட்டிருக்கேன்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
உண்மைதான். நான் இவர்களிடமிருந்து
பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் அளவில்லை.
இப்பொழுது பல இடங்களுக்கும் செல்கிறேன்.
இவர்கள் கொடுத்த அடிப்படை சக்தியில் தான்.
இவர்கள் ஒன்றும் அனுபவிக்கவில்லையே என்ற
வருத்தம் எனக்கு உண்டு. நன்றி மா
அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்மா.
இதோ ஒரு வாரம் ஓடிவிட்டது.
சர்க்கரை பாதிப்பு இருப்பவர்களுக்குப்
பாதங்களில் அத்தனை உணரும் சக்தி இருப்பதில்லை.
வெய்யிலில் இருந்து உள்ளே வரும்போது பேரனின் காலணியில்
கால் வைத்ததும் மரத்தரை வழுக்கிவிட்டது.
அங்கே இருந்த அலமாரிக்கும் மேஜைக்கும் இடையில் விழுந்து அதிர்ச்சி.
இன்னும் கழுத்துப் பகுதியும்
முழங்காலும் வலிக்கின்றன.
இப்போது எதையாவது பிடித்து கொண்டுதான்
நடக்கிறேன்.
பரவாயில்லைமா.
எப்போ கேட்டால் என்ன.ஒன்றும் தவறில்லை.
நான் பல பதிவுகளைப் பிரசுரித்துக் கொண்டே இருக்கிறேன் அதுதான்
நிறைய பேருக்குத் தெரிய வந்திருக்காது.நான் சொன்னதே
உட்கார்ந்து பின்னூட்டம் இடமுடியவில்லை என்பதைச் சொல்லத்தான்.
பாடல்கள் அருமை. கேட்கும்போது உங்கள் மாமா நினைவுக்கு வருவதில் ஆச்சர்யம் இல்லை
உடல் இப்போது தேவலாமா வல்லிம்மா?
நினைவுகளில் வாழ்ந்திருப்பார்.. அவர் பாடி மகிழ்வித்தப் பாடல்களிலும்.
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் வல்லிம்மா. விரைவில் வலி பூரண குணமாகப் பிரார்த்திக்கிறேன்.
கேட்டுக் கொண்டே இருக்கலாம்... அருமையான பாடல்கள் அம்மா...
இத்தனை உடல் உபாதையிலும் இணையத்தில் வலைப் பூக்களில் உங்களது சேவை மதிக்கத் தக்கது..
விரைவில் நலம் அடைவதற்கு வேண்டிக் கொள்கிறேன்...
நலமே வாழ்க..
நினைவுகள் சங்கீதம்.
அருமையான பாடல்கள் அம்மா.
அடடா... கீழே விழுந்து விட்டீர்களாம்மா...
கவனமாக இருங்கள் மா. பதிவுகள் எங்கே போய்விடப் போகின்றன. மெதுவாக போடலாம்!
பாடல்களை கேட்கிறேன்.
அன்பு முரளிமா,
அவனுக்கு எல்லா மொழிப் பாடல்களும்
பாட வரும். ''மானச மைனி வரு'',செம்மீன்
படப்பாடல், சௌத்வின் கா சாந்த்,
என்று குளியலறையில் பாடிக் கொண்டே இருப்பான்.
பாட்டி மிரட்டினால் தான் நிற்கும்:)
என்னைவிட ஒன்பது வயது பெரியவன். சிங்கத்துக்கும் நல்ல
தோழன்.எல்லோரும் ஒன்றாக வளர்ந்ததால் பாசம் நிறைய.
நன்றி மா.
அன்பு ராமலக்ஷ்மி,
நலமா கண்ணா.
குணமடைந்து வருகிறேன் அம்மா.
உங்கள் அம்மா நலமா.
அதிகம் சிரமப் படாமல் இறைவனடி சேர்ந்தார். அதற்கு
நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
மாமா அவர்களின் பாடும் திறமையை பகிர்ந்து கொண்டதும், பாடல்கள், காட்சிகள் பகிர்ந்து கொண்டதும் அருமை.
வலி இன்னும் இருப்பது கவலை அளிக்கிறது அக்கா.
ஒத்தடம் கொடுங்கள். ஓய்வு எடுங்கள் .
உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது வல்லிம்மா? கவனமாக இருங்கள்.
அருமையான பாடல்.
துளசிதரன்
மறைந்த மாமா அவர்கள் நன்றாகப் பாடுவார் என்பதன் நினைவில் பகிர்ந்த பாடல் என்று தெரிகிறது. இனிய நினைவுகள்.
துளசிதரன்
அன்பு துரை இனிய காலை வணக்கம்.
இசை எனக்கு ஆறுதல் தருகிறது.
இப்பொழுது சோதனைக் காலம்.இதிலிருந்து விடுபட
எனக்குத் தெரிந்த ஒரே வழி மா.
தொலைபேசியில் மாமாவின் குழந்தைகளோடு
பேசி நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வது இன்னோரு
வழி.
உங்கள் எல்லோருடைய அன்பு மருந்து.
நன்றி மா.
அன்பு தனபாலன், நீங்கள் கேட்டு ரசித்தால் எனக்குப் பெருமை மா. நன்றி மா.
இரு பாடல்களுமே கேட்டிருக்கிறேன் மிகவும் பிடித்த பாடல்கள். ஓ மாமா நன்றாகப் பாடுவாரா!! அதை நினைவு வைத்து பகிர்ந்திருப்பது இப்படியான இனிய நினைவுகள்.
இன்னும் வலி குறையவில்லையாம்மா விரைவில் நலமாகிட பிரார்த்தனைகள் டேக் கேர் அம்மா.
கீதா
அன்பு தேவகோட்டைஜி,
ஆமாம் பா.நினைவுகள் ஒரு சங்கீதம் தான்.
அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் அம்மா.
சுகமடைந்து வருகிறேன் மா. என்னுடைய வருத்தம் பதிவுகளைத்
தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் இட முடியாததே,
நன்றி மா.
அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம் மா.
எத்தனையோ தேவலை மா.
பாடல்கள் சில வேண்டாத நினைவுகளைத் தவிர்க்க உதவுகின்றன.
அதனால் கேட்ட பிறகு பகிர்கிறேன்.
நன்றி மா.
அன்பு கீதாமா,
மிக நன்றி மா.
மாமா எல்லா மொழிகளிலும் கொஞ்சம் பாடுவார்.
நலமடைந்து வருகிறேன்.
சும்மா இருப்பது ஒன்றே சுகமாக இருக்கிறது:)
நன்றி ராஜா.
https://killergee.blogspot.com/2020/07/blog-post_29.html?m=1
Post a Comment