Blog Archive

Sunday, August 09, 2020

Andhra Paruppu Podi|Kandi Podi | ஆந்திரா பருப்பு பொடி| Episode #12 | Rak...

வல்லிசிம்ஹன்

14 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா சகோதரி? எப்படி உள்ளீர்கள்? தங்கள் வலிகள் சற்று குறைந்துள்ளனவா?

ஆந்திரா பருப்பு பொடி காணொளி நன்றாக உள்ளது. நல்ல விளக்கமாக செய்து காட்டியுள்ளார். நான் பொட்டுக்கடலைக்குப் பதிலாக கொஞ்சமாக கடலைப்பருப்பு சேர்ப்பேன். மத்ததெல்லாம் உண்டு. வாசனைக்கு சிறிது மிளகும் சேர்ப்பேன்.பூண்டு சேர்த்ததில்லை. (விஷேட தினங்களுக்கு அப்படிச் சேர்த்தால் ஒத்து வராது என்பதினால்) பொட்டுக்கடலையும், பூண்டும் சேர்த்து இந்த மாதிரி இனி அரைக்க வேண்டும்.பக்குவம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நல்ல விளக்கமாக சொல்கிறார்.  நாங்கள் பூண்டு போடமாட்டோம்.  பொட்டுக்கடலையும் போட்டதில்லை.  சீரகத்துக்கு பதில் மிளகு!

நெல்லைத் தமிழன் said...

பூண்டு, சீரகம் - எங்க வழக்கம் இல்லை. அதைத் தவிர்த்துவிட்டு செய்து பார்க்கணும்

KILLERGEE Devakottai said...

விளக்கம் அருமையாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... சிறப்பா இருக்கே...! அனைத்தும் உடலுக்கு உகந்தவை... நன்றி அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ஹை நம்ம ராகேஷ்! ஆந்திரா பருப்பு பொடி
இப்படியும் செய்வதுண்டு. தில்லியில் இருக்கும் தங்கை பெண்ணிற்கு பூண்டு போட்டால் பிடிக்கும். மகனுக்கும் பிடிக்கும், எங்களுக்கும். பொட்டுக்கடலை மட்டும் போட்டு கன் பௌடர் என்றும் அவர்கள் செய்வதுண்டு. எனவே பூண்டு போட்டுச் செய்வது என்று கொஞ்சம், அவள் மாமனார் மாமியாருக்கு நம்மூர் டைப்பில் பருப்புப் பொடி என்று செய்து கொடுப்பதுண்டு. ஆனால் பூண்டு இதில் பாதிதான் போடுவேன் ஒரு கப்பிற்கே, அப்புறம் இதில் ஜீரகம் போட்டு பொடிக்காமல் நெய்யில் தாளித்துவிடுவதுண்டு.

இப்படிச் செய்வதை எனது மகனின் நண்பன் நாராயணா ஆந்திரா/யானம் பகுதியைச் சேர்ந்தவன் கல்லூரியின் கடைசிவருடங்களில் எங்களோடு கடைசி 6 மாதங்கள் தங்கியிருந்தான் அக்கடமிக் இன்டெர்ன்ஷிப் போது ஹாஸ்டலில் இருந்து வெளியில் சென்று தங்கிக் கொள்ள வேண்டும் என்பதால். அப்போது அவன் அம்மாவிடம் இருந்து கேட்டு வாங்கி எனக்கு தெலுங்குத் தமிழ், தெலுங்கு ஆங்கிலம் என்று கலந்து கட்டி சொன்னான். அப்படி ரொம்பக் கொஞ்சம் நான் கற்றதுதான் தெலுங்கு!!

ஆந்திரா சமையலும் அவனுக்காகச் செய்து கொடுப்பது அவனுக்கு ஒரே சந்தோஷம். வீட்டில் இருப்பது போன்று இருக்கு என்று. இபோதும் தொடர்பில் இருக்கிறான். மாதம் இரு முறை அழைத்துப் பேசுவான். கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கண்டிப்பொடின்னும் துவரம்பருப்பு மட்டும் போட்டுச் செய்வதைச் சொல்வதுண்டு. (ராகேஷ் சொல்றாரோ வீடியோவில்? கவனிக்கணும்) Gun பௌடர்னு அது தனி. எல்லா பருப்பும் போட்டும் செய்வதுண்டு.

எர்ரா காரம் தோசை, எர்ரா காரம் மசாலா தோசைன்னு அவங்க செய்யறதுல பருப்புப் பொடியை தோசையில் பூண்டுச் சட்னி தடவி அதன் மீது இந்தப் பொடியைத் தூவி செய்வதுண்டு வீட்டில்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா.
வந்து படித்ததற்கு நன்றி மா.
வலிதான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

இது போல காணொளி இணைப்பது சுலபமாக
இருக்கிறது.
நானும் இதுவரை பூண்டு சேர்த்து பொடி செய்ததில்லை.

நீங்கள் சொல்லும் காரணம் தான்.
பொட்டுக்கடலையும் சேர்த்ததில்லை.
இந்த முறையிலும் முயற்சிக்கலாம்.
எல்லோருக்கும் பிடித்தால் நிறைய செய்து வைக்கலாம்.
மகளுக்குக் கொஞ்சம் வேலை குறையும்.
அன்பு கமலா நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் நீங்கள் சொல்வது போல் தான் பருப்புப் பொடி செய்வோம்.
சேலத்தில் இருக்கும்போது
சிங்கம் டவுனிலிருந்து பொடி வாங்கி வருவார். அதுபோலச் சுவை
நான் கண்டதே இல்லை.
இந்தப் பொடி செய்முறையைப்
பார்த்ததும் பொட்டுக் கடலை போட்டு செய்யலாமோ என்ற யோசனை வருகிறது.
பார்க்கலாம் எல்லோரும் சம்மதித்தால் செய்கிறேன்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உடல் நலம் தேவலையா.

நாங்களும் சீரகம் பூண்டு போட்டதில்லை.
சின்னவனுக்கு பூண்டு வெங்காயம் பிடிக்காது. வீர வைஷ்ணவன்:)
பொட்டுக்கடலை போட்டு செய்து பார்க்கலாம்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மைதான் மா. எல்லாம் நலம் கொடுக்கும் பொருட்கள்.
தைரியமாக பயன் படுத்தலாம்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
ராகேஷ் நல்ல சமையல் சொல்கிறார்.
சொல்வதைக் கேட்டுக்கலாமே என்று பதிவிட்டேன்.

ஆந்த்ரா பையன் கொடுத்துவைத்தவன். கீதா ரங்கன் சமையலை ருசித்திருக்கிறானே.

உள்ளத்தில் தயவு இருந்தால் மொழியிலும் கையிலும் அன்பு
கனிந்து வரும்.

அழகான பின்னூட்டம்.
இது போல செய்து பார்க்கலாம். கன் பௌடர் என்று தோசை
மிளகாய்ப் பொடியையும் ஒருவர் சொல்லிக் கேள்வி.
இவர் துவரம் பருப்பை அப்படிச் சொல்கிறார்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
திருப்பதி போகும்போது ,
ஆந்த்ரா பொடி வகைகளும்,
ஆவக்காயும் பார்க்கும்போதே
நாவூறும்.

நன்றி டா.