அஞ்சுவது அஞ்சாமை பேதமை. இது இப்போது நாங்கள்
அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரம்.
பள்ளிகளை திறந்து குழந்தைகள் வரவேண்டும் என்று தீர்மானித்து
சில மாண்டிசோரி பள்ளிகளுக்குக் குழந்தைகள் அனுப்பப் பட்ட நேரம்
அவர்களுக்கும் நோய்த் தொற்று
ஏற்பட்டிருக்கிறது.
அடியோடு ஒழித்துவிட்டோம் என்று அறைகூவிய மாகாணங்கள் சிலவற்றில் மீண்டும் தலையெடுத்திருக்கிறது இந்த அசுரக் கிருமி.
அந்த நோயிலிருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
பலியானவர்களும் இருக்கிறார்கள்.
மீண்டவர்களின் சதவிகிதம் அதிகம்.
இங்கே அனேகமாகக் கடைகள் திறந்தே இருக்கின்றன.
கடைக்குச் செல்பவர்களும் அதிகமாகி
இருக்கிறார்கள்.
எத்தனை நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது என்ற
முணுமுணுப்பு கேட்கிறது.
வீட்டில் என்னை மாதிரி வயதானவர்கள்,
சில பல நோய்களைச் சொத்தாக வைத்திருப்பவர்கள்
இவர்கள் வெளியே போவது
விரும்பப் படுவதில்லை. நம் வீட்டைத் தேடிப் பேச வருபவர்களும் பத்தடி
இடைவெளியில் நின்றுதான் பேச வேண்டும்.
ஏனெனில் அறிகுறிகள் இல்லாமலேயே
அந்த நோய் அடங்கி இருக்குமாம்.Asymptamatic.
கோடைக்காலத்தில் நல்ல வெய்யில்
இங்கே கொண்டாடப்படும்.
எல்லோரும் சேர்ந்து உணவுகளைப் பகிர்ந்து கொண்டு
,ஏரிக்கரையோரம் சென்று ,நீரில் விளையாடி,
படகுகளில் சென்று வருவார்கள்.
ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில்
குளிர ஆரம்பித்து விடும்.
எவ்வளவுக்கெவ்வளவு உஷ்ணத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமோ
அவ்வளவு எடுத்துக் கொள்வார்கள்.
இப்போது கட்டிப் போட்ட மாதிரி வீட்டுக்குள்
இருக்கப் பிடிக்கவில்லை.
எல்லாம் சரிதான். அவசியமில்லாமல் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.
அதுவும் இந்த ஊரில் நிறையக் கடைகள் சூறையாடப் பட்டு
கலவரம், துப்பாக்கி சூடு நடந்ததும்
Downtown மூடப்பட்டது சிலகாலம்.எல்லோருக்கும்
(மற்றவரைப்) பார்க்கும் போதே பயம்
வருகிறது.
மிக நல்ல வேளையாக உறவினர்களுக்குள்
பேச்சு வார்த்தைகளும் , தொலைபேசி உரையாடல்களும் அதிகரித்திருக்கிறது.
மனம் லேசாகிறது.
காலம் கற்றுக் கொடுக்கும் பாடம் இதுதான்.
எல்லா உயிர்களையும் மதிப்போம்.
எல்லா உறவுகளையும் கொண்டாடுவோம்.
எல்லா நட்புகளையும் போற்றுவோம்.
வாழ்க நலம் வாழ்க வளமுடன்.
20 comments:
எல்லோரும் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்.
வணக்கம் சகோதரி
உங்கள் பதிவை படிக்கையில் மனதுக்குள் வருத்தம் மேலிடுகிறது. இவை கடுமையான காலகட்டங்கள்தான்.இதைத் தந்த இறைவன் இதை சமாளிக்கும் துணிவையும்,தர வேண்டும். அதையும் தருவான் என்ற நம்பிக்கையோடுதான் நாமும் ஒவ்வொரு நாட்களையும் நகர்த்துகிறோம். (அப்படியே அவனும் நகர்த்த வைக்கிறான்.) இந்த தொற்று நல்லபடியாக நம்மை விட்டு விலகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். வாழ்க வையகம். இந்த வேண்டுதல் ஒன்றே இப்போதைய நமது தாரக மந்திரம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சூழல் விரைவில் சரியாக வேண்டும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது மா.
உலகம் முழுவதும் சூழல் சரியாக வேண்டும். இங்கேயும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் காலம் கடக்கிறது. இதுவும் கடந்து போகும். போக வேண்டும்! காத்திருப்போம்.
கவனமாக இருங்கள் அம்மா...
நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் பாடல் கேட்டேன்.
ஊரின் நிலவரம் நம் மனதில் உள்ள கலவரம் பற்றி எல்லாம் சொல்லி விட்டீர்கள்.
கவனமாய் நம்மால் முடிந்தவரை இருப்போம் அப்புறம் அவன் விட்ட வழி என்று தான் இருக்கிறது.
நிலைமையின் தீவிரம் தெரியாமல் உறவுகள் அவர்கள் வீட்டு விழாக்களுக்கு அழைத்து கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டை வீட்டு எங்கும் போகாமல் அவர்களின் மன வருத்ததிற்கு ஆளாகி உள்ளோம்.
புரிந்து கொண்டு தொலைபேசியில் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ள சொல்லி வருகிறோம்.
உலகம் முழுவதும் நலம் பேற வேண்டும்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
ஆம்..நல்லதை மிக மோசமான காலமே நமக்குக் காட்டிப் போகிறது..
பத்திரமாக இருங்கள். ஹூஸ்டனில் அப்பு பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடங்கள் படிக்கும் முறையைத் தேர்வு செய்திருக்கிறாள். பெரியவளும் அப்படியே செய்யப் போகிறாள். மாப்பிள்ளை ஏற்கெனவே டூரை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டார். பிள்ளை வீட்டிலும் வீட்டிலிருந்தே தான் வேலை! குஞ்சுலுவையும் ப்ளே ஸ்கூல் அனுப்புவதில்லை. பயம் தான் காரணம். வெளியில் எதுவும் வாங்குவதில்லை என்றார்கள். ப்ரெட், பிஸ்கட், கேக் போன்றவை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பண்ணி உடனே வீட்டுக்கு அனுப்புகிறார்களாம்.
நீங்களும் பத்திரமாக இருங்கள். உடல் நலனில் கவனம் வைக்கவும்.
குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. முதல் வரியில் அழகாகச் சொல்லி விட்டீர்கள். இயன்றவரை நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வல்லிம்மா நலமா? பத்திரமாக இருக்கவும். உங்கள் உடலநலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் விரைவில் நலமாகப் பிரார்த்திப்போம்
துளசிதரன்
அம்மா ஆமாம் அங்கு பள்ளிகளுக்குச் சென்ற குழந்தைகளுக்குத் தொற்று வந்திருக்கிறது என்று மகனும் சொன்னான்.
என்னவோ போங்க.
எப்போ சரியாகுமோ? விரைவில் எல்லாம் சரியாணும் அம்மா. இங்கும் அப்படித்தானே இருக்கும்மா.
நீங்க உங்களைப் பார்த்துக்கோங்கம்மா. பிரார்த்திப்போம் வேறு என்ன செய்ய?
கீதா
அன்பு தேவ கோட்டைஜி,
இனிய காலை வணக்கம்.
நலமுடன் பத்திரமாக இருங்கள்.
அன்பு கமலாமா,
உண்மைதான் மனத் தெளிவோடு செய்திகளை எதிர் கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக் கொள்வதுடன்,
பிறருக்காகவும் கவனம் வைக்க வேண்டும்.
அலட்சியம் கூடாது.
உங்கள் பிரார்த்தனைகள், நம் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்துக் கேட்பான்.
நலம் பெறுவோம்.
மிக நன்றி மா.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம் ராஜா. எத்தனையோ
மனவலிமை தேவைப் படுகிறது.
செய்திகள் நம்மை அலைக்கழிக்கப் பார்க்கின்றன.
இறைவன் என்னும் நற்றுணையாகக் கொள்வோம்.
நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும்
கடக்கலாம்.
தொற்று நீங்கும் காலமும் வரும்.
அன்பு தனபாலன் ,
இனிய காலை வணக்கம் ராஜா.
நம்பிக்கையுடன் வாழ்வோம். நலமாக இருங்கள்.
அன்பு கோமதி மா. ஆம நம்ம எல்லோருக்கும் இது ஒரு பரீட்சைக்காலம்.
நல்லதுக்கும் போக முடியவில்லை. அல்லாததற்கும்
போக முடியவில்லை.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம் என்றே தோன்றுகிறது.
மகளின் தோழியின் அன்னை இறைவனடி சேர்ந்தார்.
தொலைபேசியில் தான் வருத்தம் சொல்ல் முடிந்தது.
என்ன செய்யலாம்.
பாவம் அந்தப் பெண்.
இதெல்லாம் மாறட்டும். இறைவனை அண்டியே இருப்போம்.
அன்பு ரமணி சார். நீங்கள் சொல்வதுதான் நடக்கிறது. மனது நைந்து போகிறது.
பலமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம்கடமை.
அன்பு கீதாமா,
குழந்தைகளை
கல்லூரிக்கோ,பள்ளிக்கோ
அனுப்புவதாய் இல்லை.
அப்பு,குஞ்சுலு பத்திரமாய் வீட்டில் இருக்கட்டும்.
மகளும், மாப்பிள்ளையும்
வேலைகளைப் பிரித்துக் கொண்டு
ஆன்லைன் ஆர்டர் செய்கிறார்கள்.
கொண்டு வருபவர்க்கு ஒரு தாங்க் யு நோட் மற்றும் பணம் வைக்கப்
படுகிறது. வீட்டுக்குப் பின்புறம் மாலை வேளையில் உட்கார
முடிகிறது.
இதுவே போதும் என்று தோன்றிவிட்டது.
அவ்வப்பொழுது சென்னைக்குப் பேசி வருகிறேன்.
என் கசின்ஸ் எல்லாம் சிறியவர்கள்.
மிகப் பாசமாக என்னிடம் பேசி உற்சாகப் படுத்துவார்கள்.
எல்லோரும் வளமாக இருக்க வேண்டும்,
நீங்களும் மாமாவும் பரம் சௌக்கியத்துடன் இருக்க வேண்டும்.
அன்பு கீதாமா,
குழந்தைகளை
கல்லூரிக்கோ,பள்ளிக்கோ
அனுப்புவதாய் இல்லை.
அப்பு,குஞ்சுலு பத்திரமாய் வீட்டில் இருக்கட்டும்.
மகளும், மாப்பிள்ளையும்
வேலைகளைப் பிரித்துக் கொண்டு
ஆன்லைன் ஆர்டர் செய்கிறார்கள்.
கொண்டு வருபவர்க்கு ஒரு தாங்க் யு நோட் மற்றும் பணம் வைக்கப்
படுகிறது. வீட்டுக்குப் பின்புறம் மாலை வேளையில் உட்கார
முடிகிறது.
இதுவே போதும் என்று தோன்றிவிட்டது.
அவ்வப்பொழுது சென்னைக்குப் பேசி வருகிறேன்.
என் கசின்ஸ் எல்லாம் சிறியவர்கள்.
மிகப் பாசமாக என்னிடம் பேசி உற்சாகப் படுத்துவார்கள்.
எல்லோரும் வளமாக இருக்க வேண்டும்,
நீங்களும் மாமாவும் பரம் சௌக்கியத்துடன் இருக்க வேண்டும்.
அன்பு துளசிதரன்,
நன்றி மா. நலமுடன் இருக்கிறேன்.
மனதையும் உரமேற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்களும் பத்திரமாக இருங்கள்.
அன்பு கீதாமா.
உலக முச்சூடும் இது போலத்தான் இருக்கிறது.
போதாக்குறைக்கு தேர்தல் டென்ஷன் வேற.
ப்ராணாயாமம்,தியானம் இவையே
நமக்கு நன்மை செய்யும்.
கடைப்பிடிப்போம். பத்ரமாய் இருங்கோ.
Post a Comment