வல்லிசிம்ஹன்முதல் பாடலில் வரும் கோவேறு கழுதை,
அந்தக் கால விவசாயப் பண்ணைகளில்
மிக மிக முக்கியமானது.
முக்கியமாக மலைப் பிரதேசங்களில்.
நம்மூர் காளைகளைப் போல்
உழைப்புக்கு அஞ்சாதவை. அந்த ஜீவனுக்காகப்
பாடிய பாடல்.
அந்தக் கால விவசாயப் பண்ணைகளில்
மிக மிக முக்கியமானது.
முக்கியமாக மலைப் பிரதேசங்களில்.
நம்மூர் காளைகளைப் போல்
உழைப்புக்கு அஞ்சாதவை. அந்த ஜீவனுக்காகப்
பாடிய பாடல்.
பாடல் ஒரு வயதான, தங்கம் சுரங்கத்தைத் தேடி அலைந்த
Miner, தன் வயதான ஊனமுற்ற mule இடம்
பேசுவதாக அமைந்த பாடல்.
''என் நண்பா உனக்கும் வயதாகி விட்டது
உனக்கும் வயதாகிவிட்டது.
ஏறி இறங்கி சம்பாதித்து வாழ்வின் இறுதிக்கு வந்து
கொண்டிருக்கிறோம்.
அதோ நமக்காக ஒரு தங்கச் சுரங்கம்
வானத்தில்
காத்துக்கொண்டிருக்கிறது.
அங்கு போய் நாம் இந்த உலகம் சுழல்வதை வேடிக்கை பார்க்கலாம்.
நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்ற நண்பர்களுக்கு
ஹலோ சொல்லி சந்திக்கலாம்.
அந்தத் தங்க சுரங்கம் சென்றடையும் வரை
காத்திருப்போம்.
இந்தப் பாட்டை அடிக்கடி சிங்கம் அழகாகப்
பாடுவார். கனவுலகில் கேட்பது போல இருக்கும். எனக்கு
ஏதாவது உடல் நலம் சரி இல்லையானால்
இந்தப் பாடலைச் சுழலவிட்டு விடுவார்.
கழுதை நின்று விட்டது .எஜமானர் சென்று விட்டார்.
எங்களிடம் இருந்த இசைத்தட்டுகளில்
முதலில் வாங்கிய எல்.பி ரெகார்ட் இதுதான்'
சிங்கத்துக்கு பிடித்த குரல்களில் இவர் குரலும் ஒன்று.
ரொமாண்டிக் சிங்கம்.
இன்னும் இந்த ஊரில் தான் வசித்து வருகிறார்.
சினிமாக்களிலும் நடித்து வந்தார்.
இவர் பாடல்களில் காதலன் பாடுவதாக அமைந்த
இசையே அதிகமாக இருக்கும்.
அவரது இருபது 25 வயதுகளில் பாடிக் குவித்த
பாடல்கள் எல்லாமே ஹிட்ஸ் தான்.
பிறகு இறைத்துதிகளில் இறங்கினார்.
இவர் குரலில் மயங்கியவர் எத்தனையோ.
உண்மையில் ஆங்கில இசை உலகில்
இவர் குரல் யாருக்கும் வாய்க்கவில்லை.
6 comments:
//எங்களிடம் இருந்த இசைத்தட்டுகளில்
முதலில் வாங்கிய எல்.பி ரெகார்ட் இதுதான்'
சிங்கத்துக்கு பிடித்த குரல்களில் இவர் குரலும் ஒன்று.
ரொமாண்டிக் சிங்கம்.//
இனிய நினைவுகளுடன் கூடியது இல்லையா! அப்ப ரொம்ப ஸ்பெஷல்தான்!
துளசிதரன்
கீதா
பாட்டு கேட்டேன் அம்மா....நன்றாக இருக்கிறது. இப்படியான பாடல்கள் உங்கள் மூலம்தான் கேட்கிறேன்.
கீதா
அன்பு துளசிதரன்,
நலமாப்பா.
ஆமாம் முதலில் வாங்கிய இசைத்தட்டு.
இப்போது எந்த பீரோவில் ஒளிந்திருக்கிறதோ தெரியாது.!
நன்றி ராஜா.
அன்பு கீதா,
முதலில் ஆங்கில இந்திப் பாடல்களைப்
பதிவிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது.
பிறகு நல்ல இசையைப் பகிர்வதில் நஷ்டம் எதுவும் இல்லையே
என்று ஆரம்பித்துவிட்டேன் மா.
ரசித்து கேட்டதற்கு மிக மிக நன்றி ராஜா.
சிங்க அப்பா நல்ல ரசிகர்.
நல்ல இசை என்றும் கேட்க இனிது.
உங்கள் மூலம் பல பாடல்களை கேட்க முடிகிறது. நன்றிம்மா.
நினைவுகள் இனிமை. பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம். எங்களுக்கு பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் வந்ததற்குக் காரணம்., குழந்தைகள் தான்.
அத்தனை பேரும் சேரந்து வெளியே செல்வது சிரமமாக இருந்தது. ஐந்து பேரும் சேரந்து விளையாடும் போது பாடலகள் கேட்போம்.
மூவருமே இசையில் தேரந்தவர்கள் ஆனார்கள்.. பாடலை ரசித்ததற்கு மிக நன்றி மா.மகிழ்ச்சி.
நல்ல பாடல்களை, இனிமையான பாடல்களைத் தொடர்ந்து பகிர்வதில் மகிழ்ச்சி. நன்றியும் கூட.
மலரும் நினைவுகளும், பாடல்களும் மிக அருமை.
நினைவுகளை பகிர்ந்த விதம் அழகு.
சாரின் நினைவுகள் , குழந்தைகளுடன் பாடல்களை கேட்டு மகிழ்ந்த காலங்கள் எல்லாம் இனிமையானது தான் .
Post a Comment