ஆரவல்லி என்ற படம் வந்த புதிதில் இந்தப் பாடல் அத்தனை நல் வரவு பெற்றது.
மைனாவதியுடன் கூட நடிப்பவர் யார் என்று தெரியவில்லை.
ராஜாவும் ஜிக்கியும் பாடும் பாடல்கள்
எல்லாமே மனத்தை இனிமையாக்கும்.
சிலோன் வானொலியில் அடிக்கடி
கேட்ட பாட்டை ஆங்கிலப் பாடலாக
ஹிட்ச்காக் படம். ''The man who knew too much"
என்ற த்ரில்லர் படத்தில் கேட்டேன்.
ஆங்கிலத்தில் கேட்டதை விடத் தமிழில் கேட்பது இன்னும்
சுகமாக இருந்தது.
அந்தப் படத்தில் டாரீஸ் டே, மகனை மகிழ்விக்கப்
பாடுவார்.
பின்னர் அதே மகனை விடுவிக்க,
இதே பாடலை இசைக்கவும்,
அவன் மறைத்து வைக்கப் பட்ட இடத்திலிருந்தே
விசில் அடித்து அந்தப் பாட்டை இசைப்பான்.
பார்க்கும் நம் மனம் படபடக்கும்.
முன்பே இந்த ஆங்கிலப் படத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன்.எப்படி அவன் , தந்தையால் விடுவிக்கப் படுகிறான்
என்பதே க்ளைமாக்ஸ்.
என்பதே க்ளைமாக்ஸ்.
8 comments:
எப்போதோ கேட்ட பாடல்...!
தமிழ்ப்பாடல் இரண்டுமுறை வந்து இருக்கிறது அம்மா.
இந்தப் பாடல்கள் கேட்ட நினைவு இல்லை. ஹிட்ச்காக் படம் பார்த்துதான் யாதோன் கி பாராத் தீம் உருவானது போலும்!
ஆமாம். அன்பு தனபாலன்.
மிக பழைய பாடல்.
சின்னக் குட்டி நாத்தனா சில்லறைய மாத்தினா
என்று பாட்டுக் கூட இதில் வரும். திருச்சி லோகனாதன்
பாடியது.
உண்மைதான் மா அன்பு தேவகோட்டைஜி.
முதலில் பதிவிட்ட போது பாடல் கேட்கவில்லை.
இந்தப் பாடலை நீக்கவும் முடியவில்லை.
இரண்டு இரண்டாக வந்து விட்டது.
அன்பு ஸ்ரீராம்.
நல்ல யோசனை தான்:)
உண்மையாகவும் இருக்கலாம். யாதோன் கி பாராத்
மறக்க முடியாத படம்.அருமை. நன்றி மா.
சின்னபெண்ணாகிய போதிலே பாடலும் மிகவும் பிடித்த பாடல்.ஆங்கில படமும் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.
அந்த பாடலும் மிகவும் பிடிக்கும்.
இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்தேன் மா.
Post a Comment