இருவர் படம் ரசித்துப் பார்த்தேன்.
மோஹன்லாலும் ,ப்ரகாஷ் ராஜும்
போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
ப்ரகாஷ் ராஜின் பங்கு கடினமானது.
கவிதை சொல்ல வேண்டும், அதுவும் உணர்ந்து நல்ல தமிழில்
சொல்ல வேண்டும்.
நிறைய காட்சிகளை ,அழுத்தமாகச் செதுக்கியிருப்பார்
இயக்குனர் மணி ரத்னம்.
இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆ, என்று தெரியவில்லை.
எனக்குப் பிடித்தது.
சரித்திரத்தைப் படமாக்குவது என்பது சுலபம் இல்லை.நேரிடையாகச் சொல்லவும்
வேண்டும் அதே சமயம்
அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரியும்
இருக்கக் கூடாது.
ஐஸ்வர்யா ராய், ரேவதி,தபூ, கௌதமி அனைவரும்
நன்றாக நடித்திருப்பார்கள்.
தமிழ் நாட்டின் அரசியலை இத்தனை
சிறப்பாக உணர்த்த முடியுமா என்பது பெரிய கேள்வி.
இருந்தும் பல புரியாத புதிர்கள்
லேசாகப் புரிந்தன. நன்றி மணி ரத்னம் சார்.
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்.
மன்னிப்பு படம்.
நான் பார்க்கவில்லை.
கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள்
படம் பார்க்காமல் குழந்தைகள் வளர்ப்பில்
கரைந்தன.
அம்மா வீட்டிற்குப் போனால் என் அருமைத்தம்பி
சின்னவன் ரங்கன் சினிமா
பார்க்க அழைத்துப் போவான்.
எனக்கும் அவனுக்கும் இருந்த ஒற்றுமை அது.
அதுபோல பார்த்த படங்களைக்
கணக்குப் போட்டு பார்த்தேன் .
ஒரு 15 படங்கள் இருக்கும்.
நன்றிடா ரங்கா.
14 comments:
இரு பாடல்களையும் ரசித்தேன். வெண்ணிலா வெண்ணிலா பாடல் அப்போது கேட்டது. இதில் நறுமுகையே பிடிக்கும். போனதாம் பார்க்கவில்லை.
இரண்டாவது பாடல் மிகவும் இனிமையான பாடல். சரணங்களில் டி எம் எஸ்ஸும் சுசீலாவும் ஒருவர் மற்றவருடன் ஒரு ஹம்மிங்கோடு இணைவது சிறப்பு.
வெண்ணிலா பாட்டு அருமை/ படம் தெரியாது. ஆனால் பாடல் கேட்டிருக்கேன். இருவர் படமும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன்.
இருவரை குறித்து விமச்சித்தது அருமை அம்மா.
நல்ல பாடல்.
அருமையான பாடல்கள்...
வெண்ணிலா பாடழும் இசையும் அருமை.
வெண்ணிலா வானில் நேரும்போது மாலை/இரவு ஆறு அல்லது ஆறரை இருக்கும் அந்த நேரத்தில் விழித்திருந்ததாக சொல்லப்படுவது புதுமையல்லவே.
இரண்டு பாடல்களையும் ரசித்தேன் வல்லிம்மா..
இரண்டாவது பாடல் அருமை.
இரண்டுமே வெண்ணிலா!
இருவர் படத்தில் மற்றொரு பாடல் டக்குனு வேர்ட்ஸ் வரவில்லை மோஹன்லால் எம்ஜி ஆர் ஸ்டைலில் ஆடிப் பாடி மக்களை அணைப்பது எல்லாம் வருமே அந்தப் பாடலும் பிடிக்கும்.
படம் பார்த்ததில்லை.
கீதா
இரண்டு பாடல்களும் அருமை.
கேட்டு ரசித்தேன்.
உங்கள் நினைவுகளும் அருமை.
அன்பு ஸ்ரீராம்.
படம் எனக்குப் பிடித்தது.
பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
இந்தப் பாடல் நிலாவுக்காகப் பதிந்தேன்.
மேற்கத்திய ஜாஸ் இசையை
ரஹ்மான் பயன்படுத்த ஆஷா பான்ஸ்லே
பாடி இருப்பார்.
அவர் குரலின் காந்தம் இந்தப் பாடலின்
மெயின் வசீகரம்.
ஜெய்சங்கர், வெ,நிர்மலா பாடலில் டிஎமெஸ் அவர்களும் சுசீலாம்மாவும்
இழைந்திருப்பார்கள்.
மிக மிக அருமையான இசை.
நன்றி மா.
அன்பு கீதாமா,
முதல் படம் இருவர்.
நிலாவுக்காக அந்தப் பாடலைப் பதிந்தேன்.
இரண்டாவது படம் மன்னிப்பு.
பாடல் மிக அருமை. பிரபலம் ஆனதும் அதுதான்.
தமிழ் வரிகளுக்காக இசை வந்த காலம் அது. சோபித்தது.
நன்றி மா.
அன்பு தேவ கோட்டைஜி,
விமரிசனம் என்று ஆழமாகப் போகவில்லை. கண்ணில்
பட்டுக் கருத்தில் தெரிந்ததை எழுதினேன். அதை நீங்கள் அருமை என்று சொல்வதுதான் இனிமை.நன்றி ராஜா.
அன்பு தனபாலன் ,
நன்றி ராஜா.
பாடல்கள் உங்களுக்குப் பிடித்தது எனக்குப் பிடித்தது.
அன்பு திரு.கோயில் பிள்ளை சார்.
அவர் வெண்ணிலா உதயத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
பாதி இரவில் தூக்கம் கலைந்து
வெளிவந்து நிலவைப் பார்க்கிறார்.
எண்ணிலாக் கனவுகளில்
எதை எதையோ நினைத்திருந்தேன்
என்கிறாரே. காதலர்களுக்கே உரித்தான நிலை.
எனக்குத் தோன்றியது அதுதான்.:)
நன்றி சார்.
அன்பு கீதாரங்கன் மா,
நீங்கள் சொல்வது ஆயிரத்தில் நான் ஒருவன். நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
பாட்டு. அதுவும் எனக்குப் பிடிக்கும்.
இன்னோன்று பழைய பாடல்.50 வருடங்களுக்கு முந்தியது.
அமுதமான இசை.
எல்லோருக்கும் பிடித்திருப்பதில்
அதிசயம் இல்லை. நன்றி கண்ணா.
அன்பு கோமதி, தம்பிக்குத்தான் பேரன் பிறந்திருக்கிறான். அவன் நினைவு அடிக்கடி வருகிறது. நன்றாகப் பாடுவான்.
ஏதாவது இசைக்குழுவில் சேர்ந்து
ட்ரம்ஸ் வாசிக்க ஆசை.
படித்து வேலைக்குப் போனதென்னவோ
வேறு ஒரு துறைக்கு.
நான் பதியும் பாடல்களில் தமிழெல்லாம் அவன் விருப்பம்.
நன்றி ராஜா.
Post a Comment