Blog Archive

Tuesday, July 07, 2020

அதே அதே.

வல்லிசிம்ஹன்

பாடல்களின் ஒற்றுமை.
1952 இல் வந்த ஜீன் கெல்லி பாட்டும் நடனமும்,  TCM தயவில்  2006 il
பார்த்தது.
அவரதுTAP டான்ஸ் மிக மிகப் புகழப்பட்ட நாட்கள்.

இதே நடன அசைவுகளுடனும் அச்சு அசல்
அதே மழை, அதே குடை,அதே காவல்காரர்கள்,
அதே அதே.:)

மீண்டும் ''புன்னகை மன்னனி''ல்
ரேவதியின் அழகு முகத்தோடு
''வான் மேகம்'' பாடலோடு
வந்தது மிக அருமை.
மீண்டும் ஒத்திருக்கும்  பாடல்களோடு
இன்னோரு பதிவில் பார்க்கலாம்.

8 comments:

ஸ்ரீராம். said...

மழையில் நனைவது எவ்வளவு உற்சாகம்!  அதற்கும் வயதும், தென்பும் வேண்டும்!  இப்போது நினைத்துக் கூடப் பார்க்க  முடியாது.  வேறு ஏதேதோ பயம் வரும். 

தமிழில் வான் மேகம் பாடல் கூட அந்தப் பாடலின் டியூனை ஒட்டியே வருகிறதோ!  பிரபுதேவாவுடன் நடித்த ஒரு படத்தில் வடிவேலு நகைச்சுவையாகப் பாடுவதும் இந்தப் பாடல்தானே?

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
புன்னகை மன்னன் பார்த்தபோது, மழையில்
படும் பாடல்கள் நினைவுக்கு வந்தது.
அப்போது நம் ஊரில் டிசிஎம் சானல் இருந்தது. ஸ்டார்
மூவீஸ் வரும். அப்போது இதையும்
ஒரு நாள் ஒளிபரப்பினார்கள்.
சட்டென்று ஒற்றுமை தெரிந்தது:)

அதே நடிப்பு. இசை வேறு மாதிரிதான்.
நம் ரேவதியின் முக அழகு ஜீன் கெல்லிக்கு வருமா:)
பிரபு தேவா,வடிவேல் படம் என்றால்
காதலன் படமா.தெரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசனையான பாடல்... மிகவும் ரசித்தேன்...

KILLERGEE Devakottai said...

இவைகளை நினைவில் வைத்திருந்து சொல்வது சிறப்பு அம்மா

கோமதி அரசு said...

1952 இல் வந்த ஜீன் கெல்லி பாட்டும் நடனமும் சூப்பர்.
ரேவதி பாடலும் கேட்டேன்.

பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் அக்கா, தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.
உங்களுக்கெல்லாம் பிடித்த பாடல்களைப் பகிர்வதில்
எனக்குத்தான் மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி.
இனிமையான நினைவுகளைப் பதிய , திரை இசையின் துணையைத்தான் நாடுகிறேன் மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா
நீங்கள் தவறாமல் வந்து கேட்பதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நேற்று ஒரு பெரியவர் உரையைக் கேட்டேன். நேர்மறையான செய்திகளைக் கேளுங்கள்.
எதிர்மறை செய்திகளுக்கு மனதில்.

இடம் கொடுக்காதீர்கள் என்று.
வெகு உன்னதமான அறிவுரை. அன்புக்கு நன்றி தங்கச்சி.