Blog Archive

Tuesday, July 28, 2020

கொஞ்சம் சிரிக்கலாமா!!! 1

வல்லிசிம்ஹன்  படம் சீதா ஔர் கீதா.
கோவையில் பார்த்தது. குழந்தைகளுக்குப் பிடித்த படம்.
பரபரப்பான கிசுகிசுக்களிடையே 
படமாக்கப்பட்ட படம்


சுப்கே சுப்கே படம் சிரிப்புக்காகவே
தயாரிக்கப் பட்டது.
தர்மேந்த்ராவுக்குள் இத்தனை நடிப்பு 
ஒளிந்திருந்ததா என்று எல்லோரும் வியந்த
நேரம்.
அமிதாப், ஜெயா,ஷர்மிளா டாகூர், எல்லோருமேஓம் ப்ரகாஷ், அஸ்ரானி, உஷா கிரனுடன்
சிறப்பாக நடித்திருப்பார்கள்.
 வருடத்துக்கு இரண்டு தடவையாவது பார்த்து விடுவேன்:)
மனைவியின் அக்கா புருஷனின் 
இந்தி மோகத்தைத் தூள் செய்யும் நோக்கத்துடனே
மும்பைக்கு வரும் ப்ரொஃபெஸர் த்ரிபாதியாக படம் முழுவதும் சிரிப்புதான்.

அதில் ஒரு காட்சிதான் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
நிமோனியாவை ,பனிமோனியா என்று சொல்லும் காட்சியில்
யாருக்குமே சிரிப்பு வரும்.
ஓம் பிரகாஷின் அவஸ்தை படம் முழுவதும்
குதூகலப் படுத்தும்.
மனம் லேசாக இந்தப் படம் பார்க்கலாம்.

6 comments:

ஸ்ரீராம். said...

சீதா அவுர் கீதாவை தமிழில் வாணி ராணியாக்கினார்கள்!   நான் முதலில் காசெட்டில் ரெகார்ட் செய்த பாடல்களில் சீதா அவுர் கீதா படத்திலிருந்து ஒரு பாடல்!  ஓ...   சாத்தி சல்....   

சுப்கே சுப்கேயில் பாடல்கள் ரசித்திருக்கிறேன்.  படம் கூட எப்போதோ ஒருமுறை பார்த்திருக்கிறேன்.  

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஸ்வாரஸ்யமான கதைகளும் கொண்ட படங்களைத்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.நானும் முழுதாக நேரம் கிடைக்கும் சமயத்தில் பார்த்து விடுகிறேன். ராஜேஷ்கன்னா, தர்மேந்திரா நடிப்பு நன்றாக இருக்கும். என்ன.. ஹிந்தி உங்களுக்கு சரளமாக புரிவது போல் எனக்குப் புரியாது. ஆனாலும் முன்பெல்லாம் 80,90களில் ஹிந்திப்படங்களை தொலைக்காட்சியில் சனி தோறும் விரும்பி பார்த்து வந்தேன். நடுவில் படங்களை பார்க்க முடியாத அளவுக்கு குடும்ப வேலைகள். எல்லா மொழி படங்களை பார்க்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டது. இப்போது தற்சமயம் இந்த ப்ளாக்கில் எழுதுவது, படிப்பதுதான் உயிராக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மனோ சாமிநாதன் said...

நான் பம்பாயில் இருந்தபோது இந்தப் படங்களையெல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன். ' சுப்கே சுப்கே' படத்தில் ' பாஹோன் மைன் கைஸே ' பாடல் மிக மிக இனிமையாக இருக்கும்!!

கோமதி அரசு said...

இந்த படம் நானும் பார்த்து இருக்கிறேன், எங்கள் கணித ஆசிரியர் இந்த கதையை பள்ளியில் சொல்லி சிரிப்பு படம் பார்க்கலாம் என்றார்கள்.

இடம்மாறி விலலன், வில்லிகளை ஹேமா வாங்கு வாங்கு என்று வாங்குவது பிடிக்கும். மின் விசுறியில் உட்கார்ந்து கொண்டு சித்தியை அழைப்பது சிரிப்பாக இருக்கும்.

தமிழில் எடுத்த படத்தையும் பார்ப்பேன். மனம் லேசாகும் என்பது உண்மைதான்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் படம் தானே தமிழில் வந்தது இல்லையா?

ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தான்ப் புரியும். கேட்கிறேன் அம்மா. இனிதான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்

கீதா

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யம். நானும் சில ஹிந்தி படங்களை அவற்றின் நகைச்சுவைக்காகவே பார்த்ததுண்டு.