வல்லிசிம்ஹன்
என் எண்ணத்தை எழுதி விட்டு, இணையத்தில் தேடினேன். இந்தப் பாடல் கிடைத்தது. மார்க் லிண்ட்ஸே பாடி இருக்கிறார்.
நல்லதே நடக்க வேண்டும் .
வானத்தில் சட்டென்று வந்த வெள்ளிப் பறவை
ஆகாய விமானம் இல்லை. அருகே வந்து மரங்களூடே
மறைந்தது.
என்ன சொல்ல வந்தது. யாராக வந்தது.
வெகு நேரமாக மனதில் நிலைத்த அந்தப் பறவை
நாளையும் வருமோ
என் எண்ணத்தை எழுதி விட்டு, இணையத்தில் தேடினேன். இந்தப் பாடல் கிடைத்தது. மார்க் லிண்ட்ஸே பாடி இருக்கிறார்.
வானத்தில் சட்டென்று வந்த வெள்ளிப் பறவை
ஆகாய விமானம் இல்லை. அருகே வந்து மரங்களூடே
மறைந்தது.
என்ன சொல்ல வந்தது. யாராக வந்தது.
வெகு நேரமாக மனதில் நிலைத்த அந்தப் பறவை
நாளையும் வருமோ
இந்தப் பாடலின் வரிகளும் கிடைத்துவிட்டன.
பதிந்து விட்டேன்.
19 comments:
பாடலைக் கேட்டு ரசித்தேன்.
காணொளி கேட்டேன்...
அருமை அம்மா...
வெள்ளி நிறத்தில் சிறகுகள்...
நான் பார்த்ததே இல்லை
நேற்றும் வந்ததோ
இந்தப் பறவை?
இங்குமங்கும் அலையாமல்
எதையும் தேடாமல்
வந்தமர்ந்து வேறெதையும் பார்க்காமல்
என்னையே சற்று நேரம்
உற்றுப் பார்த்துச் செல்லும்
இது நாளையும் வருமோ?
நாளையாவது அது இங்கு
வரும் காரணம் சொல்லுமோ?
பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும், சும்மா தோன்றியதை எழுதி இருக்கிறேன்!
பின்னர் கேட்கிறேன் பாடலை. நம்பிக்கை ஊட்டும் பாடல் என்றவரை புரிகிறது.
பாடல் கேட்டேன் நன்றாக இருக்கிறது.
நீங்கள் உங்கள் எதிர்ப்பார்ப்பை அழகாய் சொன்னீர்கள். அதை அழகாய் கவிதை ஆக்கி விட்டார் ஸ்ரீராம், அருமை.
மிக நன்றி வெங்கட்.
மழை அதிகமாவதால் வெளியே அமர முடியவில்லை.
இந்தப் பறவையை முதல் நாள் பார்த்தது தான்.
பளிச்சிட்டு மறைந்தது.
அன்பு தேவகோட்டைஜி,
ரசிதத்தற்கு மிக நன்றி ராஜா.
நல்ல செய்திகள் வரட்டும்.
அன்பு தனபாலன் மிக நன்றி ராஜா.
அற்புதம் அன்பு ஸ்ரீராம். நேற்று வரவில்லை
இந்த வெள்ளிப் பறவை.
கறுத்த மேகங்களே உலாவுகின்றன.
நீங்கள் படைத்திருக்கும் கவிதை அழகு.
அன்னம் விடு தூது போல
இது நற்செய்தி சொல்ல வந்தததோ என்று நினைக்கிறேன்.
அந்தப் பறவை மற்றவர்கள் காணும் முன் மறைந்து விட்டது.
இனிக் கவலை வேண்டாம் நலம் பெறுவீர்கள் என்று
சொன்ன இறைத்தூதோ.இருக்கலாம்.
நன்மை தரும் பாடல் தான் கீதாமா.
1970களில் வந்த பாடல்.
உண்மைதான் அன்பு கோமதி.
எதை எதிர்பார்க்கிறோமோ
அதுவே பறவையாக வந்து ஆறுதல் சொல்வது போல
ஒரு நினைவு.
இந்தப் புரிதலுக்கு மிக நன்றிமா.
ஸ்ரீராம் ஆசுகவி ஆகிவிட்டார்,.
//ஸ்ரீராம் ஆசுகவி ஆகிவிட்டார்,.//
அப்போ நான் பாசு என்று சொல்லுங்க!
வானத்தில் சட்டென்று வந்த வெள்ளிப் பறவை
ஆகாய விமானம் இல்லை. அருகே வந்து மரங்களூடே
மறைந்தது.
என்ன சொல்ல வந்தது. யாராக வந்தது.
வெகு நேரமாக மனதில் நிலைத்த அந்தப் பறவை
நாளையும் வருமோ//
ஆஹா நிஜமாகவேவா அம்மா...
பாடல் கேட்டேன் ரசித்தேன் ஆனால் வரிகள் எதுவும் புரியவில்லை. அதனால் என்ன இசைதானே முக்கியம்.
கீதா
ஸ்ரீராம் கவிதை அசத்தல் போங்க!!
உடனே உடனே அழகா எழுதிடறீங்கப்பா!!!
திறமை!!
கீதா
அன்பு ஸ்ரீராம் அதில் சந்தேகம் வேண்டாம்.
ஆசுவும் பாசுவும் நீங்கதான்.
அன்பு கீதா ரங்கன்,
பாடல் கேட்டால் போதும். வரிகள் கிடைத்தால் பதிகிறேன்.
பழைய பாடல் இது.
நான் பார்த்த பறவை பிறகு வரவே இல்லை.
அத்தனை உயரத்தில் பறந்தது புறாவும் இல்லை.
இங்கிருக்கும் புறாக்கள் கருமை நிறம்.
அதுதான் அதிசயம்.நன்றி மா.
//ஸ்ரீராம் கவிதை அசத்தல் போங்க!!
உடனே உடனே அழகா எழுதிடறீங்கப்பா!!!
திறமை!! //
நன்றி கீதா!
//ஆசுவும் பாசுவும் நீங்கதான்//.
ஹா... ஹா... ஹா... நன்றிம்மா.
Post a Comment