வல்லிசிம்ஹன்பாவை விளக்கு நாவல் 60 களில் படித்தது. கல்கியில் அகிலன் அவர்கள் தொடராக எழுதிய
போது என்று நினைக்கிறேன்.
சில நினைவுகள் தான் மிஞ்சி இருக்கின்றன.
உமா பாத்திரம் தான் மனதில் நிலைத்தது.
கதா நாயகன் மனதில் எத்தனை
பேருக்குத் தான் இடம் கொடுப்பானோ.
குற்றாலத்தில் பாடுவதாக அமைந்திருக்கும்
இந்தப் பாடல் திரு.சி.எஸ்.ஜயராமன் குரலில்
அருமையாக இருக்கும்.
இதைத் தொடர்ந்து,
உமா பாடுவதாக அமையும் ''நீ சிரித்தால் நான் சிரிப்பேன்''
பாடலும் மிக அழகு..
சந்திரனும் உமாவும் தாஜ் மகாலில் ஒன்றி உணர்ந்து எண்ணங்களில்
பாடுவதாக அமைந்திருக்கும் ''காவியமா, நெஞ்சின் ஓவியமா''
மனத்தில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.
இந்தப் படம் பார்த்ததும் திண்டுக்கல்லில் தான்.
போது என்று நினைக்கிறேன்.
சில நினைவுகள் தான் மிஞ்சி இருக்கின்றன.
உமா பாத்திரம் தான் மனதில் நிலைத்தது.
கதா நாயகன் மனதில் எத்தனை
பேருக்குத் தான் இடம் கொடுப்பானோ.
குற்றாலத்தில் பாடுவதாக அமைந்திருக்கும்
இந்தப் பாடல் திரு.சி.எஸ்.ஜயராமன் குரலில்
அருமையாக இருக்கும்.
இதைத் தொடர்ந்து,
உமா பாடுவதாக அமையும் ''நீ சிரித்தால் நான் சிரிப்பேன்''
பாடலும் மிக அழகு..
சந்திரனும் உமாவும் தாஜ் மகாலில் ஒன்றி உணர்ந்து எண்ணங்களில்
பாடுவதாக அமைந்திருக்கும் ''காவியமா, நெஞ்சின் ஓவியமா''
மனத்தில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.
12 comments:
இரண்டு சி எஸ் ஜெயராமன் பாடல்களும் பிடிக்கும்.
உமா என்று கேரக்டர் பெயரைச் சொல்கிறீர்களா? ஏனென்றால் அந்தப் பாடலைப் பாடி இருப்பவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி.
நல்ல நினைவலைகள். பாடலை பகர்ந்ததோடு மட்டும் நிற்காமல், அந்த படத்தை எங்கே பார்த்தீர்கள் என்றும் நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு!
படம் பார்த்ததில்லை. ஆனால் நாவல் படிச்சிருக்கேன். இது அகிலனின் சொந்தக்கதை கலந்தது என்று கேள்விப் பட்டிருக்கேன். எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. உமாவாக எம்.என்.ராஜம் வருவார் எனக் கேள்விப் பட்டேன். சௌகார் ஜானகி தான் முறைப்பெண்ணாகவும் கட்டிய மனைவியாகவும் வருவார் என்றும் சொல்வார்கள். நான் படம் பார்க்காததால் தெரியாது. அண்ணா, தம்பி சொல்லுவார்கள்.
இரண்டுமே புகழ் பெற்ற பாடல்கள்! அகிலனின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் படிக்க! அந்தக் கால ஹீரோ எழுத்தாளர் பல பெண்களுக்கு அவர் தான்! அவரின் அனைத்து நாவல்களும் அருமையாக இருக்கும். பாவை விளக்கு அவரின் சுய சரிதை என்று அப்போதெல்லாம் பேசிக்கொள்வார்கள்!
இரண்டு பாடல்களும் இனிமையானவை...
ஆயிரம் தடவை குற்றாலம் போனாலும் சலிக்காது... ஆனால், இந்த வருடம் குற்றாலம் போக முடியவில்லை...
அடிக்கடி கேட்கும் பாடல் தொலைக்காட்சி பழைய பாடல்களில்.
கதை படித்தது இல்லை. சினிமா பார்த்து இருக்கிறேன்.
குமாரி கமலா , என்.என் ராஜம், செளகார் ஜானகி நடித்த படம்.
ஆஹா... இரண்டுமே இனிமையான பாடல்கள் மா....
கேட்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
படம் பார்த்ததில்லை. புத்தகமும் படித்ததில்லை.
இனிய மாலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் உமா வாயசைக்க சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடியது. என் மனத்தில் அந்த வயதில் பதிந்த உருவம் உமா.
அது இப்பொழுது எழுத்தில் வந்துவிட்டது.:)
சி எஸ் ஜயராமன் அவர்களின் குரல் பிசிறடிக்காமல் நல்ல தமிழ் மற்றும் இசை மரபை
ஒட்டி வரும். நன்றி மா.
அன்பு பானுமா,
நினைவுகள் இருக்கும் வரை நெஞ்சம் இருக்கும்னு சொல்லலாமா:)
வந்து பார்த்து ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பு கீதாமா,
எனக்கும் படம் நினைவில்லை. இந்தப் பாடல்களை தொலைக்காட்சியில்
கண்டிருக்கிறேன்.
சந்திரன் வாழ்வில் செங்கமலமாகிய கமலா லக்ஷ்மண்,
மனைவியாக சௌகார்,
விசிறி+ மனம் பறிகொடுத்த பெண்ணாக எம் என் ராஜம்
என்று நினைக்கிறேன்.
அகிலன் அவர்களின் சொந்தக் கதையா.
அட. நான் அவரை அந்த மாதிரி நினைத்ததே இல்லை:)
கூடுதல் செய்திகளுக்கு நன்றி மா.
அன்பு மனோ,
நீங்களும் பல செய்திகள் கொண்டுவந்து விட்டீர்கள்.
என் பனிரெண்டு வயதில் அவர் பற்றிய
அபிப்பிராயம் எதுவும் இல்லை.:)
அதுபோலப் பேசி இருந்தால் ,அப்பா
முதலில் கல்கி,விகடன்,குமுதம் எல்லாவற்றையும் நிறுத்தி இருப்பார் ஹாஹ்ஹா.
நீங்கள் வந்து கருத்து சொல்வதே எனக்குப் பெருமை.
நன்றி மா.
ஆஹா ஜெயராமன் குரல்....மிகவும் பிடிக்கும் ஆயிரம் கண் பாடல் மட்டுமே கேட்க முடிந்தது. கீழே இருப்பது அதே பாடலா அலல்து வேறா அம்மா? அது வொர்க் செய்யலை
படம் பார்த்தது இல்லை. பாடல் கேட்டிருக்கிறேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டேன். நல்ல பாடல். அம்மா உங்கள் நினைவுத்திறனுக்கு வாழ்த்துகள் சந்தோஷமா இருக்கு.இனிமையான நினைவுகள்
கீதா
Post a Comment