Blog Archive

Friday, May 29, 2020

கதையின் இறுதிப்பாகம் .5

வல்லிசிம்ஹன்
இறைவன் என்றும் காப்பான்.

கதையின் இறுதிப்பாகம் .5


அதற்குப் பிறகு  நடந்தவை எல்லாம் நன்மைக்கானது.
சிகித்சை முடிந்து வெளியே வந்த சேகர்,
முற்றிலும் மாறிய மகனாக அவனுடைய அன்னைக்குக் 
கிடைத்தான். சிகித்சையின் போது அவனை விட்டகன்ற
அந்த வெண்குழல் அரக்கன், பிறகு அந்த வீட்டில் பிரவேசிக்கவில்லை.

வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றான்.

வீட்டிலிருந்தபடியே செய்யுமாறு வேறு வேலையைத் தேடிக் கொண்டான்.

இதெல்லாம் நிறைவேறத்தான் ஆறேழு மாதங்கள் ஆகியது.

அடுத்த தடவை தன் அம்மாவுடன் அவனும் 
செக்கப்புக்குப் போகும்போது 

தேவகி அம்மாவின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கண்டார் 
டாக்டர் செரியன்.

மகனையும் தாயையும் பரிசோதித்து 
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வந்து பார்த்தால்
போதும் என்று சொல்லி விட்டார்.

இந்த மகனையுமிழந்துவிடுவோமோ என்ற 
பயத்திலிருந்து விடுதலை கண்ட அம்மாவின் 75 ஆவது பிறந்த நாளையும்
அவள் மக்கள்,உறவினர் சூழக் கொண்டாடினர்.
பி கு. இங்கே நான் உபயோகித்திருக்கும் மருத்துவ மொழியோ,
காவல் துறை பரிபாஷைகளோ  சரியானது என்று சொல்ல வரவில்லை.
இந்தக் கதையின் நல்ல முடிவுக்கு அவை துணை வந்தன.
நன்றியும் சுபமும்.


17 comments:

ஸ்ரீராம். said...

நல்லது.  எல்லாம் சுபமாக நிறைவுற்றதில் சந்தோஷம்.

ஸ்ரீராம். said...

பிளாக் தோற்றம் மாறி உள்ளதோ?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. இதுவே நல்ல எதிர்காலம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

புது ப்ளாகருக்கு மாற வேண்டுமாமே மா.அதுதான் மாறி இருக்கிறேன்.

Geetha Sambasivam said...

I am confused!

கோமதி அரசு said...

பிளாக் தோற்றம் மாறி உள்ளது.
தாயும், மகனும் நலபெற்று வீடு வந்தது மகிழ்ச்சி.
குழந்தைகள் நன்றாக இருந்தால் அதுதான் தாயின் பலம்.

திண்டுக்கல் தனபாலன் said...

சுபமாக முடிந்தது...

திண்டுக்கல் தனபாலன் said...

வலைப்பூ தோற்றத்தில் மிகவும் தோல்வி அடைந்த தீம் வைத்துள்ளீர்கள் அம்மா... வேறு மாற்றினால் நல்லது...

மாதேவி said...

அனைத்து துன்பங்களும் நீங்கின. நாட்கள் நலமே செல்லட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இந்தப் பதிவுக்குப் பின்னால் இன்னும் இரண்டு பதிவுகள் இருக்கின்றன.

அதைப் படித்தால் ,அதாவது முடிந்த போது
குழப்பம் வராது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மாற்றி விட்டேன் ராஜா. நல்ல வேளையாகச் சொன்னீர்கள்.
மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, மீண்டும் பழைய ப்ளாகருக்கு வந்து விட்டேன்.
முயற்சி செய்து புது ப்ளாகரின் நன்மைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

கடைசியில் யாவரும் நலம்!

நல்லதே நடக்கட்டும் அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

நல்லப்டியாக சுபம்! ப்ளாகர் தளம் மாற்றம் அடைந்தது போல் இருக்கிறதே நல்லாருக்கும்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,

மிக நன்றி. வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுத்தான் தேற வேண்டும்.
இவர்கள் வாழ்க்கை நல் வழியில் திரும்பியது இறைவனின் கருணை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இறைவன் கருணை
எப்பொழுதும் நம்முடன் இருக்க வேண்டும்.
எல்லாம் நலமுடன் நடக்க அவ்னே துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் தீம் மாற்றினேன். புது ப்ளாகருக்கு மாறு மாறு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே. நன்றி மா.