Blog Archive

Tuesday, May 26, 2020

தேவகியின் விடுதலை 2

வல்லிசிம்ஹன்

 வண்டியில் ஏறி உட்கார்ந்த தம்பி சேகரிடம்,
''உன்னிடம்  எத்தனை தடவைடா சொல்வது. அம்மாவுக்கு எப்பொழுதும் உன் கவலை தான்.
அப்பா வேற இல்லை, அவளுக்கு ஆறுதல் சொல்ல.
இந்தப் புகையை நிறுத்தக் கூடாதா. நம் வீட்டில் யாருக்கும் இந்தப்
பழக்கம் இல்லையே"
உனக்கு ஏதாவது என்றால் அம்மா தாங்க மாட்டாள்.
நீங்கள் இருவரும் இல்லை என்றால்
எனக்கு மட்டும் என்ன இருக்கிறது.

அண்ணாவாவது இருந்தானா. அவனும் ஒரே நாள்
வலியில் இறைவனடி சேர்ந்தான்.'' என்று சொல்லியபடி வண்டியை
நிறுத்தினாள்.

எங்கே இங்க பார்க்கில் நிறுத்தறே, மருந்து வாங்க வேண்டாமா.
அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு நான்

சென்னைக்கு வெளியே அரசாங்க விஷயமாய் செல்ல வேண்டும்.
போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவன் சேகர்.
நல்ல பதவி.
ஆளும் உயரமும் பெருமனுமாக விசால நெற்றியும்,
சிரிக்கும் கண்களுமாக நன்றாக இருப்பான்.
இந்த உத்யோகம் தான் அவனை

இந்தப் பழக்கத்தில் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம்
வரும் லேகாவுக்கு.

மெதுவாக டாக்டர் சொன்ன செய்தியைச் சொன்னாள். உடனே கண்கலங்கி விட்டது
அவனுக்கு.
அவன் மனைவியும்  நல்ல படிப்பும் உத்தியோகமும் கொண்டவள் தான்.
இரு மகன்கள் , வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள்.

அம்மா, அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதே
லேகாவுக்குப் பிடிக்கவில்லை.
இப்பொழுது வைத்தியரும் இப்படிச் சொன்னதில்

அவள் மனம் நொந்தது.
தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றால்
வயதான மாமியாருக்கு ஒரு அறை, தங்களுக்கு, மகள்கள் இருவருக்கும் ஒரு அறை
என்று இருக்கிறவர்கள்.
மாமியாரைக் கவனித்துக் கொள்வதே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.
டயபெடிஸ் நோயினால் கண்ணை இழந்தவர்.

வருகிறவர் போகிறவர் நிறைய.
நினைக்க நினைக்க லேகாவுக்குக் கண் நிறைந்து வழிந்தது.

அவள் அழுவதைப் பொறுக்காத தம்பி,
யேய் வருத்தப் படாதடி.
நான் விமலாவிடம் பேசி இந்தச் சோதனையிலிருந்து விடுபட வழி சொல்கிறேன்.
இப்ப வீட்டுக்குப் போகலாம் வா. அம்மா சந்தேகப் படுவார்.
மருந்து கிடைக்கவில்லை.
நுங்கம்பாக்கம் கல்யாணி ஃபார்மசி போய்த் தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடலாம்,
என்றான்.
வண்டியைத் திருப்பி, வீடு வந்து சேர்ந்த போது,
அம்மாவும், மாமியாரும் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததைக்
கண்டார்கள்.

இருவரும் மன நிலையை மாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வருவதைக் கண்ட
தேவகி அம்மா, ''பெரிய மீட்டிங்க் போல இருக்கே!
30 நிமிடங்கள் ஆகிவிட்டதே'' என்று குறும்பாகச் சிரித்தார்.

லேகாவின் மாமியாரும்,'' என்ன இருந்தாலும் வயதான நம்மைப் பற்றிப்
பேசி முடிவெடுக்க வேண்டாமா''
என்று சிரிக்காமல் சொன்னார்.
லேகாவும், சேகரும் திகைத்து நின்றனர்.

''அம்மா நான் தான் தனம், இது ஜயலக்ஷ்மி,டாக்டர் அனுப்பினார்''
என்று குரல்கள் கேட்ட பக்கம் திரும்பி இன்னும் திகைத்தனர்
இருவரும்

15 comments:

நெல்லைத்தமிழன் said...

டாக்டரே ஒரு உதவியாளரை அனுப்பியிருக்கிறாரா?

வயதானவர்களைப் பார்த்துக்கொள்வது - அனேக வீட்டில் நடப்பதுதான்

ஸ்ரீராம். said...

அடுத்தடுத்த அதிர்ச்சிகள்.  இரு பெரியவர்களும் தெரிந்தே இருக்கின்றனர் போல...  தொடர்கிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அப்போதெல்லாம் இந்த வசதி இருந்தது.
மருத்துவமனை தாதிகள் ,கடை நிலை ஊழியர்கள்.
நாம் கேட்டுக் கொண்டால் வருவார்கள்.
அவரவர் வேலை மருத்துவமனையில் முடிந்ததும்
வீட்டுக்குச் சென்று உணவெடுத்துக் கொண்டு நம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

அதே போல அவர்கள் வேலைகளும் சுழற்சி முறையில் நடை பெறும்.
ஒருவர் பொறுப்பு முடிந்ததும் மற்றவர் எடுத்துக் கொள்வார்.
எங்கள் ஆஜி ஆறு மாதங்கள்
படுக்கையில் இருந்த போது, விஹெச் எஸ் ஹாஸ்பிட்டலில் இருந்து நாங்கள் இரு தாதிகளின்
உதவியைப் பெற்றுக் கொண்டோம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா ஸ்ரீராம்.
வயதான பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது கடினம். இந்தத் தாதிகள்
அருமையானவர்கள்.
இவர்கள் சேவையை ஏற்றுக் கொள்வதும் சில வயதானவர்களுக்குக் கடினமாக இருக்கும்.

எங்கள் அம்மா தன் கடைசி பத்து நாட்களுக்காக
அமர்த்தப் பட்ட பெண்மணியை
அவ்வளவாக இஷ்டப்படவில்லை. தன் சுதந்திரத்துக்கு வந்த அவமானமாகக்
கருதினார்.

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்து என்னவோ... தொடர்கிறேன் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

பெரியவர்களை பார்த்துக்கொள்ள உதவியாளர்கள்...

சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஜீவி said...

படம் நன்றாக வந்திருக்கிறது. நிறைய திகைப்பு. இன்றைய அடையாளங்களை முந்தைய அடையாளங்கள் தன்னுள் ஒளித்து வைத்துக் கொள்வதுமில்லை. அதனால் இதனை அதில் தேடுவது வேஸ்ட் தான்.

கோமதி அரசு said...

கதையும் நன்றாக இருக்கிறது. உங்கள் குடும்ப படம் மிக அழகு.

Thulasidharan V Thillaiakathu said...

கேர் டேக்கர்ஸ் வந்துவிட்டார்கள் இல்லையா. அடுத்து என்ன என்று அறிய தொடர்கிறேன் வல்லிம்மா.

துளசிதரன்

அம்மா பாட்டிஸ் ரெண்டுபேருக்கும் தெரிந்திருக்கிறது போல ரெண்டு பேரும் எதோ பேசி வைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். அதற்குள் நர்ஸ் வந்தாச்சு போல அதுவும் லேகாவின் வீட்டிற்கே. அடுத்து என்ன என்ற ஆவலுடன் தொடர்கிறோம் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அடுத்த பதிவில் நல்ல செய்தியுடன் தருகிறேன், குடும்பம் என்றால் மேடு பள்ளங்கள்
சகஜம் தானே. மன தைரியமும் புத்தி ஊர்மையும் கலந்து சமாளிக்கப் பழக வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு வெங்கட்.
முன்னாட்கள் போல வீட்டில் கூட்டுக் குடித்தனமாக இருக்கும் போது

உடல் நலம் இல்லாதவர்களைக்
கவனித்துக் கொள்வது ஓரளவு சுலபமாக இருந்தது.
இப்போதைய குறுகிய சூழ்னிலையில்

அவர்களைப் பிரத்தியேகமாகக்
கவனிக்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார், எங்க மாமியாரின் அறுபதாம் வயதுக்கு எடுத்த படம்.
மாமனார்,என் கணவர், மாமியார், நான்கு நாத்தனார்கள் சேர்ந்து எடுத்துக் கொண்டார்கள்.

அவ்வளவு நெருக்கமான குடும்பம்.

முந்தைய அடையாளங்களை, இன்றைய சூழ்னிலையில் தேடுவதும்
வ்யக்தம் தான்.
எத்தனையோ மாறி விட்டது உலகம்.
நாம் எல்லோரும் பழைய தலைமுறைக்கும் புதுசுக்கும் நடுவில்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நன்றி சார்.
இதெல்லாம் இரண்டு குடும்பங்களில் நடந்தவை தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.;
மாமியாரின் அறுபது வயது பூர்த்தி 1976இல் எடுத்தபடம்.
பெற்றோரும் குழந்தைகளுமாக எடுத்துக் கொண்டார்கள். எங்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்று எனக்குக் கூட வருத்தம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தில்லையகத்து துளசி, கீதா,
வாங்கப்பா.

டாக்டருக்கு லேகா வீடு மட்டும் தெரியும்.
அதுதான் அங்கே அனுப்பி விட்டார்.

ஏற்கனவே மாமியாருக்கு உதவியாக ஒரு பெண்ணை அனுப்பி இருந்தார்.
குளிப்பதற்கு, ஆடை உடுத்த, வெளியே வண்டியில் அழைத்துச் சென்று வர
என்று அந்தப் பெண் வீட்டோடு இருந்து விட்டது.

அக்காவும் தம்பியும் வெளியே போயிருந்த போது
இவர்கள் வந்து விட்டார்கள்.
இவர்களுக்கு யோசிக்கக் கூட நேரமில்லை.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

மாதேவி said...

உதவியாளர்கள் வந்து விட்டார்கள். தொடர்கிறேன்.