Blog Archive

Saturday, April 18, 2020

கங்கா,விசாலம் படமும் புத்தகமும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .

கங்கா,விசாலம்  படமும் புத்தகமும்.

His film world - Frontline

இணைய படுத்தலில் செய்திகள் கூட விட்டுவிட்டு வருகின்றன.
உமா கொடுத்த குறிப்பு  என்னை வெகுவாக பாதித்தது.
சில நேரங்கள் படித்த காலத்திலேயே ,கங்காவுக்காக 
வருந்திய நேரங்கள் பல.
லட்சுமி,  ஸ்ரீகாந்த் ,சுந்தரிபாய் நடித்த படத்தைப் பார்த்து 
சங்கடம் மேலும் அதிகரித்தது.
இந்த மனுஷனுக்குத்தான்  எத்தனை வீர்யம் 
எழுத்துக்களில் காண்பிக்க முடிந்தது.

இந்தப் படைப்பு ஒரு காவியம் அல்லவா.

உமாவும் பேசினாள்  நேற்று மதியம்.
அவள் பெற்றோருடன்  குடியிருந்த காலனியில் இதே சமூகத்தைச் சேர்ந்த 
அம்மா ,பிள்ளை,பெண். நாலு வீடு தள்ளி இருந்தார்களாம்.
பெண்  ஒரு மில்லில் மேனேஜிங்  டைரக்டரின் 
காரியதரிசி.
வயது 29 ஆகியும் திருமணம்  கை  கூடவில்லை.
தம்பி படித்து அங்கிருந்த பேருந்து  கம்பெனியில் 
வியாபார பிரிவில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்த காலத்தில் 
விசாலி, நம் கதா நாயகி 
வீட்டுக்கு வரும் நேரம் குறைந்தது.

நல்ல உடை உடுத்தி அவள்  செல்லும்போது 
கண்டு பொறாமைப் படாத  குடும்பமே 
கிடையாது. வெறும் காரியதரிசிக்கு  இத்தனை ஆடம்பரமா 
என்று அதிசயித்தனர்.


அம்மாவும்  அவளும் வாக்குவாதம் செய்வது 
தெருவிலே கேட்கும் அளவிற்கு  விஷயம் வளர்ந்து விட்டது.

உமா போன்ற பெண்களுக்கு அவள் ஒரு கதா நாயகியாகத் தெரிந்தாள் .

திடீரென்று ஒரு நாள்  அவள் வீட்டில் போலீஸ் நடமாட்டம். 
உயிர் இழந்த விசாலத்தின் உடல் அழகாகக் கட்டியிருந்த நீல நிற நைலக்ஸ்  புடைவையுடன்  ஆம்புலன்சில்  கொண்டு 
போகப்பட்டது.

அனைவரும்  அவள் தற்கொலை செய்து கொண்ட 
செய்தி  கேட்டு திடுக்கிட்டனர்.
நெடு நாட்களுக்கு  விசாலியின் அம்மா, அடிவயிற்றிலிருந்து கதறுவது தெளிவாகக்  கேட்டது.

பிறகு  சேகரிக்கப் பட்ட செய்தி,
விசாலமும் ,அவள் கம்பெனி  முதலாளியும்,
காதல் செய்ததும்,
அது கல்யாணத்தில் முடியாததால்,
தன்  வாழ்வை அவள் முடித்துக் கொண்டதும் தெரிய வந்தது.


உமாவிடம் நான் கேட்டேன். கங்கா இவளை மாதிரி 
ஏமாறவில்லையே. தன்னைத் தூய்மையாகத் தானே வைத்துக் கொண்டால். பிரபு, அவளை விட்டு விலகினாலும் தன்னை மாய்த்துக் 
கொள்ளவில்லையே என்று சொன்னேன்.

அந்த  வேற்றுமையை நான் சொல்லவில்லை.
அந்தக் காலனியில் இருந்தவர்கள் பேசியதே அவளைக் கொன்றுவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.

காதல் தோல்வியைக் கூட சகித்துக் கொள்ளலாம். அம்மா,தம்பி 
இவர்களின் கடும் சொல் 
 பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏளனம், இதெல்லாமும் அவள் முடிவுக்கு காரணம்.
இத்தனைக்கும், சாதி வித்யாசத்தினால் அவள் திருமணம் நின்றது.

ஊர் அறிய, வாசலில் வந்து அவளை வண்டியில் அழைத்துச் சென்ற 
முதலாளிக்கு 
அவளைத் திருமண பந்தத்தில்  வைத்துப் பார்க்க முடியவில்லை.

கங்கா  மாதிரி தைரியமாக வாழ்வை எதிர் நோக்கவில்லை விசாலம். அநியாயமாக ஒரு உயிர் போனது என்றாள் .

ஆமாம் கங்கா மாதிரி பெண்கள்  கதைக்குள் 
உலாவலாம்.
வெளியே யும் இருக்கலாம்.

நமக்கு கண்களில்  படவில்லை என்பதால் கங்கா 
உற்பத்தியாகும் இடத்தைச் சந்தேகிப்பவர்  இல்லை.
அவள் பிரத்தியட்ச தெய்வம்.
ஜெயகாந்தனால்  படைக்கப் பட்ட மாந்தர்கள் யாருமே சோடை  போனதில்லை.

உமா   பேசியதில்   அந்தப் பழைய நாட்களுக்கே 
போயாகிவிட்டது. படமும் பார்த்துவிட்டேன் .

அருமையான படம். உயிரோடு உலாவிய 
கங்கா வும் பிரபுவும்  பார்த்த திருப்தி.

என் தங்கை சுபாவும்  நானும் பேசிக் கொண்டிருந்தால் 
ஜெயகாந்தன்  நடுவில் வராமல் இருக்க மாட்டார்.

இப்போது உங்களுடன் பகிர்ந்ததில்  ஒரு திருப்தி.

மீண்டும் இன்னொரு  புத்தகத்துடன் பார்க்கலாம்.






20 comments:

Avargal Unmaigal said...


//காலனியில் இறந்தவர்கள் பேசியதே அவளைக் கொன்றுவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.//
அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷ்யங்களில் தலையிடுவதே பலருக்கு ஒரு பழக்கமாக இருக்கிறது அவர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை அவர்கள் வீட்டில் அது போல பிரச்சனைகள் தோன்றுவரை இவர்கள் மாறப் போவதில்லை

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை ,
அதுதான் உண்மை. விசாலத்துக்கு ஒரு அக்கா இருந்தாள். அவளே இவளைத் தப்பாகப்
பேசியதும் ஒரு சம்பவம்.
இப்பொழுது காலம் எவ்வளவோ மாறி விட்டது.
இருந்தும் வம்பு பேசுவதோ, குற்றம் காண்பதோ
மறையவில்லை.நமக்குத் தெரிந்து இது ஒரு
நிகழ்வு. எத்தனை வாழ்க்கைகள் பந்தாடப் படுகிறதோ தெரியாது.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

இதுமாதிரி ஆட்களுக்கெல்லாம் மனதைரியத்தை மாற்றத்தை அன்றே சொன்னார் ஜெ. எனக்கும் மிகவும் பிடித்த கதை, படம்.

ஸ்ரீராம். said...

மதுரைத்தமிழன் சொல்லியிருப்பதுபோல இதுமாதிரி வம்புபேசும் ஆட்கள் தங்கள் முதுகைத் திரும்பிப் பார்க்க முடியாதவர்களாகி விடுகிறார்கள்.

நெல்லைத்தமிழன் said...

வம்பு பேசுவது என்பதே பொறாமையால்தான் விளைகிறது என்பது என் எண்ணம். அவர்கள் இடத்தில் இவர்கள் இருந்தால் அதையேதான் செய்திருப்பார்கள்.

எல் கே said...

எந்த புக்?

திண்டுக்கல் தனபாலன் said...

சிலரின் குணத்தை மாற்றுவது சிரமம்....

Geetha Sambasivam said...

தலையும் புரியலை, வாலும் புரியலை. உமா யார்? சுபா யார்? நீங்க சொல்லுவது "சில நேரங்களில் சில மனிதர்கள்" புத்தகத்தையும் படத்தையும்னு தெரிகிறது. எத்தனையோ மறக்க முடியாத நாவல்களில் அதுவும் ஒன்று. திரைப்படம் நான் பார்த்தது இல்லை. உங்கள் எழுத்தில் விசாலம் என்றொரு பெண்ணும் புதுசாக வருகிறார். பாவம், இளவயதில் அவர் முடிவு வருந்த வைக்கிறது. வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் மனப்பக்குவம் இல்லை போலும்!

கோமதி அரசு said...

லட்சுமிக்கு தேசிய விருது பெற்று தந்த படம்.
"அக்னி பிரவேசம்" முத்திரை கதையாக விகடனில் வந்த முடிவு நன்றாக இருந்தது. அந்த தாயின் வசனம் மிக அருமையாக இருக்கும். சினிமாவில் வரும் அம்மா கத்தி ஊரைக்கூட்டிவிடுவாள். மகன் வீட்டை விட்டு விரட்டுவது போல் இருக்கும்.

"சிலநேரங்களில் சில மனிதர்கள்" கங்கா போல் இல்லை விசாலம். ஊர் பேச்சை தாங்கமுடியாத பெண்.

கங்கை எங்கே போகிறாள் எழுதினார் அது அவ்வளவாக பிடிக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மிக நன்றி.
உண்மையில் நடப்பதை யாராலயும் தீர்மானிக்க
முடியாது. அவர்களுக்குத் தரப்படும் ப்ரஷர், திக்கு முக்காட வைத்துவிடும்.
பாவம் அந்தப் பெண்.
இது மிட்டில் க்ளாஸ், உயர் வகுப்பு என்றெல்லாம் இல்லை.
எல்லா இடத்திலயும் இருக்கும் விதவிதமான மனிதர்களின்

மனக் காய்ச்சல் அவளை இந்த முடிவுக்குத் துரத்திவிட்டது.
பாவம் விசாலி.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த ஊர்ப் பேச்சு உலகப் பேச்சு வெட்டிப் பேச்சு ஒரு காலத்தில் மனிதர்களின் மனதைக் கீறிப் பார்த்ததுண்டு.
விசாலத்திற்கு பாவம் வம்பைத் தாங்கி எதிர்நீச்சல் போட்டு வாழும் தைரியம் இல்லாததால் அப்படியான ஒரு முடிவு.

பிறரின் விஷயங்களில் தலையிடுபவர்களின் கதையைக் கேட்டால் நாறிப்போகும் சில சமயம்.

புத்தகம் வாசித்ததில்லை அம்மா. வாசிக்க வேண்டும். படம் கொஞ்சம் பார்த்த நினைவு. ஆனால் முழுவதும் பார்த்ததாக நினைவில்லை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்களுக்கும் நெட் படுத்தலா அம்மா?

இங்கும் ரொம்பவே படுத்தல்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
வம்பு பேச நிறைய நேரம் இருந்திருக்கிறது அப்போது.
தனிதனி வீடுகளாக இருந்தாலும்
வாசலில் கொத்து கொத்தாகப் பெண்கள்
நின்று பேசும் வழக்கம் இருந்தது.

இந்தப் பெண் போவது வருவது எல்லாம்
கணக்கெடுத்து அவள் அம்மாவிடமும் பேசி
எல்லாம் நடந்திருக்கிறது.
எப்போதெல்லாம் குறுக்கீடு நடக்கிறது அப்பொழ்து
நம் வாழ்வு நகர்வது கடினம் தானே.
குழப்பமான மன் நிலையில் அவள் வெற்றி பெற முடியாமல் போனது மா.
பாவம் விசாலி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கார்த்திக்,
சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவல் ஜெயகாந்தன் எழுதியது மா.

வல்லிசிம்ஹன் said...

சிலரின் மனம், சமுதாயத்தின் கோளாறுகள்
இவை எல்லாம் மாறுவது எளிதில்லை, அன்பு தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உமா என் தோழி. சுபா என் தங்கை. ஜெயகாந்தனைப் பற்றி எழுதும் போது அவள் ஞாபகம் வந்து அவள் பெயரையும் குறிப்பிட்டுவிட்டேன்.

கங்கை எங்கே போகிறாள் எனக்கும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இங்கிருக்கும் உமா, இந்த விசாலத்தின் கதையை
எனக்கு வாட்ஸாப்பில் சொன்னார்.
மாமி, இது போலயும் நடக்கிறது என்று சொன்னாள்.
இந்தப் பதிவின் முதல் பாகத்தில் எழுதி இருக்கிறேன் மா.குடும்பத்தாரால் பழிக்கப் படும்போது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதுதான் அவளது முடிவுக்குக் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
மிக வருத்தம் கொடுத்த செய்தி.
இதில் ஒரு விஷயம் விட்டுப் போனது. மாம்பலத்தில்
, சித்தி வீட்டுக்குப் பக்கத்திலும் இது போல நடந்தது.
ஆனால் அந்தப் பெண் ,அவளைக் காதலித்தவன் வீட்டுக்கே
போய் தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டாள்.
திருமணமும் முடித்தாள்.

இது பத்து வருடங்கள் முன்னால்.
ஒவ்வொருவர் வாழ்வு ஒவ்வொரு விதம்.
என் வாழ்க்கையில் நான் அடங்கிப் போன
நேரங்களே அதிகம். நல்ல வேளை
அசட்டு நேரங்களில் மாட்டிக் கொள்ளவில்லை:)
ஆமாம் மா.வீட்டில் கணினி இணைப்புகள் ஓவர்லோட். 5 நபர்களுக்கு
சப்ளை
செய்வதால் திணறுகிறது.
நான் விலகிக் கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

வம்பு பேசுவது சம்பந்தப்பட்ட நபருக்கு பிரச்சனைகள் தரும் என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை தான்.

மனதை வருத்தியது அந்தப் பெண்ணின் தற்கொலை.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு வெங்கட். மிகக் கொடிது இந்த வம்பு.பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
பதிலளிக்க மறந்து விட்டது.

கங்கை எங்கே போகிறாள். ஏதோ
மறதியில் எழுதியதைப் போலத் தோன்றும்.
என்ன நடந்ததோ என்று கவலை கொள்ள வைக்கும்.
உங்களுக்கும் பிடிக்காததில் வியப்பில்லை.