Blog Archive

Friday, April 17, 2020

படமும் பாடமும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
சில நேரங்களில் சில மனிதர்கள்.

படமும் பாடமும்.

இங்கே சொல்வது கொஞ்சம் உண்மை  கொஞ்சம்  கற்பனை.
Sila Nerangalil Sila Manithargal — 50 Best Tamil Movies — 14

இங்கே அடுத்த தெருவில் இருக்கும் உமா என்னைப்  போல் புத்தகப் பைத்தியம். சினிமாப பைத்தியமும் தான்.

இருவரும்  புத்தகங்கள்   பரிமாறிக்கொள்வோம் .
அவளுக்கு கிடைத்த  பழைய சிடிக்களைக் கொடுப்பாள் .
அப்படிப் பார்த்தவை தான் திரிஷ்யம்,  இன்னும் சில மலையாளப் 
படங்கள்.

கோவையிலிருந்து வந்திருக்கும்  நல்ல பெண். திருமணம் செய்தது ஒரு  வேற்று மாநில  வாலிபரை.

இப்போதுதான் இந்தப்  பெயர்சொல்ல விரும்பாத ஒன்றால்  
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லையே.

அவள் கொண்டு வரும் எதுவும் வாசலில் வைத்துவிட்டுப் போவாள்.
அதை  சானிடைஸ்  செய்து எடுத்துக் கொள்வோம்.
அது போல  நான் கொடுக்கும் புத்தகமும் புனித நீராடி தான் அவள் வீட்டுக்குள் புகும் 

என்பதும் தெரியும்:)

மாமி உங்க வீட்டைத் தாண்டி நடக்கிறேன் . ஜன்னல் வழியாகக் கைகாட்டுங்கள் என்று செய்தி அனுப்புவாள்.
நானும்  மகளும் ,
அவளும் கணவரும்   நடப்பதை பார்த்து 
சந்தோஷக் கையசைப்பு செய்வோம் .
சிரித்துக் கொண்டே கடப்பார்கள்.
இப்போது மூன்று நாட்களாகப் பெய்யும் பனிமழை யில் இணையமும் 
படுத்த 
நடக்கப் போக முடியாமல் எல்லோரும் முடங்கி கிடக்கிறோம்.
இப்போதுதான்  ஜூம்  வந்திருக்கிறதே.
எல்லோரும் சேர்ந்து பேசலாம் என்று முயற்சித்தால் அதற்கும் வழி இல்லை.
பாண்டவர் வனவாசம், ராமர் சீதை லக்ஷ்மண  வனவாசம் போல 
வாழ்க்கை நடக்கிறது.
அவர்களுக்கு கனி கிழங்கு உண்ணக் கிடைத்தது. நமக்கு 
அந்தத் தொந்தரவு இல்லை.
ஒபர்வீஸ்  பால் முதற்கொண்டு   எல்லாம்  வாசற்படிக்கு வந்து விடுகின்றன.

எல்லாவற்றையும்  ,முன்பு பாட்டியும் ஆஜிப்  பாட்டியும் சாணி தெளித்து எடுத்துக் கொண்டது போல 
சோப்  தண்ணீரில் கழுவி ,துடைத்துக் காயவைத்து எடுத்துக் கொள்கிறோம்.
இவர்கள் பாடுபடுவதை ப்   பார்த்து நாம் உதவலாம் என்றால் ,
நம் மீது அவ்வளவு  நம்பிக்கை கிடையாது.😎😎😎😎😎😎😎😎😎😎😎


ஒரு நாள்  உமா கொண்டுவந்து கொடுத்த புத்தகம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
அதற்குள்  ஒரு  சிறு குறிப்பு.  இதை  மாதிரி ஒரு மனுஷியை எனக்குத் தெரியும்  என்று எழுதி இருந்தாள் .
எனக்கோ மிச்ச கதையையும்   கேட்க ஆவல்.
என்ன சொன்னாள் ?
இன்றுதான் இணைய  இணைப்பு சரியாக இருக்கிறது. கேட்டு விட்டுச் சொல்கிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


24 comments:

நெல்லைத் தமிழன் said...

நல்ல எழுதறீங்க வல்லிம்மா. சாதாரண சம்பவங்கள்கூட ரசனையாக அமைந்துவிடுகின்றன.

பனிவிழும் மலர்வனம் - காண மிக ஆசையாக இருக்கிறது.

ஆனா நீங்க எல்லோரும் அதை அலுத்துக்கறீங்க. ஒருவேளை ஆரம்பகாலத்தில் சில நாட்கள் நீங்களும் அதனை ரசித்திருப்பீங்க. அப்புறம் எங்கயும் போக முடியாம முடங்கிக்கிடக்க வேண்டியிருக்கே என்று நினைத்து அதன் மீது வெறுப்பு வந்துவிட்டதோ?

Angel said...

அதே நிலைதான் வல்லிம்மா இங்கேயும் .ஷூவையும் ஸ்ப்ரே போட்டு க்ளீன் பண்றோம் .நம்மூர் பாணியில் பக்கெட் நீரில் கழுவிட்டு வரோம் ..என்னைவிட கணவர் அதிகம் கவனம் letters வந்தா க்ளவுஸ் போடாம தொடறதில்லை .
அது சரி சீக்கிரம் மிச்ச கதையும் கேட்டு சொல்லுங்க .அங்கே பனிபொழிவா ? இங்கே வெயில் தொடர் 4 நாள் இன்னிக்கு மேகமூட்டம் .
டேக் கேர் வல்லிம்மா .சீக்கிரம் நிலை சரியாக பிரார்த்திப்போம் 

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, நன்றி மா.

பனி எனக்கு மிகவும் பிடிக்கும் பத்து வருடங்களுக்கு முன் இறங்கியும் நடந்திருக்கிறேன். இப்போது ஐஸ் மழையில்
வழுக்கி விழுவது இங்கிருக்கும் வயதானவர்களுக்கு ஒரு சாக்கு ஆகிறது. அந்த வரிசையில் நானும் சேர வேண்டாமே என்று தான் சும்மா இருக்கிறேன். ஸவிஸ் நாட்டில் அதறகான பூட்ஸ் போட்டுக் கொண்டு மலையில் மேலேயே ஏறி இருக்கிறோம். கால் ஒரு அடிப் பள்ளத்தில் இறங்கும். அப்போது 53 வயது:) எல்லாமே இவரோட கைகளைப் பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். இப்பொழுதும் ஸ்நோ பிடித்திருக்கிறது. போக முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் , பத்திரமா இருங்கோ. லெட்டர் பாக்ஸ் போகக் கூட எனக்கு அனுமதி இல்லை. படிதாண்டாப் பாட்டி ஆகிவிட்டேன்:)

க்ளவ்ஸ் போட்டுக் கொண்டுதான் தாபால்களை எடுப்பது. வேண்டாததை அங்கேயே கிழித்து குப்பை வண்டியில் போட்டு விடுகிறோம். இறங்கு முகம் என்கிறார்கள். பார்க்கலாம்.

கதை இதோ மதியம் எழுதப் பார்ககிறேன் ராஜா. பாவம் அந்தக் கோவைப்பெண். இது 15 வருடங்களுக்கு முன் நடந்தது. நன்றி கண்ணா. பத்திரம் ப்ளீஸ்.

Avargal Unmaigal said...

பதிவு மட்டுமல்ல அதற்கு வந்த் க்மெண்ட்ஸுக்கு நீங்கள் சொல்லும் பதிலும் நன்றாக இருக்கிறதம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை. இனிய மாலை வணக்கம். அச்சோ மிக நன்றி மா. இந்த ஒரு இடத்தில் தானே நாம் சந்திக்கிறோம் . அருமையாகப் பேசலாம் இங்கே உலவும் செய்திகள் நம்மை அமைதி யாக விடுவதில்லை.
நாம் நமக்கான உலகத்தை அமைத்துக் கொள்ளவே இந்த எழுத்து மா. வளமுடன் இருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கற்பனையும் சுவாரஸ்யம்...

Zoom வேண்டாம் என்று சைபர் கிரைம் சொல்லி உள்ளது...

வெங்கட் நாகராஜ் said...

நலமே விளையட்டும்...

நாட்கள் இப்படி தான் கடக்கின்றன. பணிச் சுமையும் அழுத்துகிறது இங்கே. இதுவும் கடந்து போகும் என நாட்களை கடத்திச் செல்கிறோம் நாம் அனைவருமே...

சில நேரங்களில் சில மனிதர்கள் - நீங்கள் கேட்ட கதையைக் கேட்க ஆவலுடன் நாங்களும்!

Bhanumathy Venkateswaran said...

//எல்லாவற்றையும்  ,முன்பு பாட்டியும் ஆஜிப்  பாட்டியும் சாணி தெளித்து எடுத்துக் கொண்டது போல 
சோப்  தண்ணீரில் கழுவி ,துடைத்துக் காயவைத்து எடுத்துக் கொள்கிறோம். //  ஹாஹா! ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் இட் ஸெல்ஃப் அப்படித்தானே..? அழகான உங்கள் வர்ணனையை ரசித்தேன்.   

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். நன்றி.
Zoom பக்கம் இனி போகப் போவதில்லை.
கல்வி அது வழியாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மாப்பிள்ளைக்கும் இந்த விவரம் தெரிந்திருக்கும்.
எனக்கு என் வலைப்பதிவும்,முக நூலும் போதும். கவனத்துக்கு
மிக நன்றிமா.பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பணிச்சுமை அதிகமா. ஏன் இப்படி.?
சரியாகச் சாப்பிடுகிறீர்களா வெங்கட்.
கதையாகத் தான் போனது விஷாலியின் வாழ்வு. இதோ எழுத வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா.
ஏதோ முப்பது வருஷம் என்று மாமியார் சொல்வார்.
சக்கிரம் போல வாழ்வு திரும்பும் என்று.
அதுபோல இப்பொழுது நடக்கிறதோ.
எங்கள் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வோம். சற்று நின்றால்
நம் தலையிலும் சாணி விழும் என்று.:)
கடவுளே !!! அப்போது ஒரு வேடம் போட்டாச்சு. இப்போது இன்னோரு
காலம். நன்மையில் முடிந்தால் சரி. நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அம்மா இப்படி ஒரு சஸ்பென்ஸ் வைச்சுட்டீங்களே...சீக்கிரம் கேட்டுச் சொல்லுங்க...

கீதா

கோமதி அரசு said...

வல்லி அக்கா குளிரால் தலைவலி என்றீர்களே, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பனி கொட்டுவது பார்க்க அழகுதான், ஆனால் நனைந்து உடம்பு வந்தால் மற்றவர்களுக்கு தொந்திரவே.

நீங்கள் உதவலாம் என்றாலும் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள அவர்களுக்கு எண்ணம் அதனால் வேண்டாம் என்கிறார்கள்.



Thulasidharan V Thillaiakathu said...

எல்லாத்தையும் கழுவி கழுவி ஊத்தி ஹா ஹா ஹா அப்படித்தான் இங்கும். எல்லாம் புனித நீராடல்!

பாட்டி சாப்பிடும் தட்டை அப்பப்ப தீயில் காட்டுவார். அந்தப் பழக்கம் எனக்கும் வந்துருக்கு. பாத்திரம் எல்லாம் தேய்த்து முற்றத்தில் வெயிலில் வைப்பார்.

டிஷ்வாஷர் கூட பாத்திரம் தேச்சா நல்லா சூட்டுலதானே காயவைக்கும். பாத்திரம் நல்ல சுடும்...

அம்மா நீங்கள் ரொம்ப நல்லா அழகா எழுதறீங்க ஸ்வாரஸ்யமா படிக்கத் தூண்டும் வகையில் எழுதறீங்க..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பனி பொழிவா இப்பவும்...எனக்கு ரொம்பப் பிடிக்கும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக நன்றிமா. தொடர்ந்து எழுதிவிட்டேன்.
படித்து கருத்து சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. அன்புடன் விசாரித்ததற்கு மிகவும் நன்றி.
குளை தரும் இறுக்கம் தலை வலிக்குக் காரணம்.
இப்போது எவ்வளவோ தேவலை.

நம்மால் அவர்களுக்கு உபத்திரவம் கூடாது.
முடிந்த அளவு உதவி செய்கிறேன்.
இதோ இன்று நல்ல வெய்யில். இனி மேமாதம் வரை ரெண்டுங்கெட்டான்
சீதோஷ்ணம் தான்.
சமாளிக்க வேண்டியது கடமை.
இறைவன் இந்தக் கடும் காலத்திலிருந்து நம்மை மீட்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆமாம் பனிப்பொழிவு மிக இனிமை.
மாறி மாறி வரும் வெதர் பாட்டர்ன்.

எல்லாம் ஆன்லைன் ஆர்டர் செய்வதால்
வாயிலுக்கு வந்து விடுகின்றன. மூன்று நாட்கள் தொடக்கூடாது.
பிறகு ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து
காய்கறி தனியே, சாதனங்கள் தனியே எடுத்துவரவேண்டும்.
முடி திருத்தும் மெஷின் வாங்கி
மாப்பிள்ளையும், பேரங்களும் முடி திருத்திக் கொண்டார்கள்.
இனி அனேகமாக சலூன் போவது நின்று விடும்.
தன் கையே தனக்குதவி என்பது நிச்சயம்.

பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி டிஷ் வாஷருக்கு
மாற்ற வேண்டும். ஏனேனில் அதிக நேரம் ஓட்ட வேண்டாம்.
அதுவும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் இல்லையா.
யாரையும் பழுது பார்க்க அழைக்க முடியாது.
நன்றி மா. எல்லாம் மாறட்டும்.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

எல்லாக் கூத்தும் இன்னும் எத்தனை நாளைக்கோ/அல்லது மாதத்துக்கோ தெரியவில்லை. இங்கேயும் கொண்டுவருவனவற்றைக் கழுவியே எடுக்கிறோம். அந்த நாட்களில் ஸ்ராத்தத்துக்கு வாங்கும் காய்களை அலம்புவதைப் பார்த்துவிட்டுச் சிலர் கேலி செய்வார்கள். இப்போது எல்லா நாட்களிலுமே அலம்பும்படி பண்ணி விட்டது. எதெல்லாம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆனதோ அதெல்லாம் இப்போது கட்டாயம் ஆகிவிட்டது.

Geetha Sambasivam said...

உமா பற்றியும் அடுத்த பதிவு பற்றியும் இங்கே படிச்சதும் புரிந்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா, மாதேவி ஏற்கனவே படித்த புத்தகம் இப்போது
மீண்டும் படிக்கக் கிடைத்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இப்பொழுது உங்களுக்கு இந்தப் பதிவின் போக்கு புரிந்திருக்கும்.

ஆமாம் பழைய காலம் திரும்பி விட்டது.
அந்த ஆச்சாரம் இப்போது ஹைஜீன் ஆகத் திருப்பி வந்துவிட்டது.
எல்லாம் நல்லதுக்குத் தான்.
உங்களுக்கும் எல்லா பொருட்களும் நல்ல படி கிடைக்க
பிரார்த்திக்கிறேன்.