Blog Archive

Thursday, April 23, 2020

நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி

வல்லிசிம்ஹன்

எல்லோருக்கும்  வளமாக  வாழ வேண்டும் 

அனைவருக்கும் வணக்கம். 
என் எண்ணங்களை அப்படியே மற்ற வலை ப் பதிவுகளில் 
இடுவதனாலோ  என்னவோ , இந்தப் பதிவிலும் எழுத வேண்டும் என்ற எண்ணம் குறையலானது.
சுற்றி நடக்கும்  விஷயங்களை  இங்கே குறிக்காவிட்டால்,
வலைப்பதிவு இருந்தும் 
வாளா விருக்கும் மட் டித்தனத்தைப் பிரபலப்படுத்தும்:)

பிப்ரவரி  29 வந்ததிலிருந்து,
சியாட்டிலில் ஆரம்பித்த இந்தக் கிருமி பற்றிய செய்திகள் அளவுக்கு மேல் 
பயத்தைக் கிளம்பினாலும்,
நாம் இருக்கும்படி இருப்போம்,

மற்றது இறைவன் கையில்  என்பது நிச்சயமான 
வகையில்,
 அப்போதிலிருந்து இன்று வரை  வாசல் கதவைத் திறக்கக் கூட இல்லை.
பிறகு காய் கழட்டுவனுமே.
மாப்பிள்ளையும், மகளும் 75   சதவிகித  வேலைகளை செய்துவிடுகிறார்கள். அவர்களும் வெளியே போவதில்லை.
தங்கள் அலுவலக நேரம் போக மிச்ச நேரம் கணினியில் 
ஆன்லைன் ஆர்டர்கள் வேறு வேறு கடையில் 
செய்வதில் செலவழிகிறது.

சர்வ பொருட்களையும்  சோப்புத் தண்ணீரில்  கழுவி, மீண்டும் நல்லதண்ணிரில் அலம்பித துடைத்து 

சேமிக்க வேண்டி இருக்கிறது.
அதிகமாகிவிட்ட பொருட்களை, தர்ம நிறுவனங்களுக்குத் தொலைபேசினால் அவர்கள் இல்லாதவர்களிடம் சேர்ப்பார்கள்.

நம் ஊரிலும் சாப்பாடு தயாரித்து 
கொண்டு போய்க் கொடுப்பதை  வழக்கமாகக் 
கொண்டிருப்பதை படித்து  சந்தோஷமாக இருந்தது.

மிரட்டும் செய்திகளைக் கேட்பதைக்  குறைத்துக் கொண்டு விட்டேன்.
எந்த விதத்திலும் நம் உதவி அங்கே தேவைப்படப் போவதில்லை,,
பின் கேட்டு என்ன லாபம்/
ஊர்க்காவலனாக இருப்பவரின் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்களைக் 
கேட்டு அலுப்புதான் மிச்சம்.

நம் ஊரில் இருக்கும் கட்டுப்பாடுகள்  அதிசயிக்க வைக்கின்றன.
நாங்கள் இருக்கும் இந்த மாநிலமும் எச்சரிக்கைகளை நல்ல படியாகவேக் கடைப்பிடிக்கின்றனர்.

வியாதி பரவுவது  ஒரு பக்கம். 
திடீரென்று ஏற்படும் மார்படைப்பு, ஸ்ட்ரோக் , பிரசவம் எல்லாம் பாதுகாப்பான முறைகளில் கவனிக்கப் படு கின்றன.

இத்தனை நாட்கள் வரை  அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இனி தாராளமாக ஹெல்த் கேரை அணுகலாம். ஆவன  செய்யப் படும் . நோய்த்தொற்று இருக்கும் இடத்தில் இவர்கள் சிகித்சை நடக்காது 
என்று உறுதி மொழி அளிக்கப் படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் குறைந்து வரும் எண்ணிக்கை போல இங்கே குறைய இன்னும் நாட்களாகும்.

பள்ளிகள் இனி அடுத்த வருடம் தான். அதாவது கோடை விடுமுறை முடிந்து செப்டம்பர் மாதமே பள்ளி திறக்கப் படும்.

பிறகும், அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் 

நவம்பர் ஃ ப்ளூ சீசன். பின்னாலயே இதே தொற்று இரண்டாம் சுற்று வர போகிறது என்பதுதான் இன்றைய நிலைமை.

கண்டிப்பாய் நாம் மீள்வோம்.
நாம் அவனை நோக்கி எழுப்பும் பிரார்த்தனைகள் 
கட்டாயம்  இறைவன் காதில் விழும்.

விசேஷமாக ஏதாவது கேள்விப்பட்டால் மீண்டும் பதிகிறேன்.
நலம் வாழப் பிரார்த்தனைகள்.






28 comments:

KILLERGEE Devakottai said...

நலமே விளையும் வாழ்க வையகம்.

Angel said...

///மிரட்டும் செய்திகளைக் கேட்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.
எந்த விதத்திலும் நம் உதவி அங்கே தேவைப்படப் போவதில்லை,,
பின் கேட்டு என்ன லாபம்///

நல்லது வல்லிம்மா ..நானுமே செய்திகளை பெரும்பாலும் தவிர்க்கிறேன் .சில செய்திகள் ஆர்வக்கோளாறில் தோண்டி துருவ போக மன வேதனைதான் மிஞ்சுது .இங்கே செப்டம்பர்தான் மகளுக்கும் அதுவும் சில நேரம் தாமதிக்கலாம்னு சொல்றாங்க .கவனமுடன் இருப்போம் .டேக் கேர் வல்லிம்மா 

Thulasidharan V Thillaiakathu said...

ஊர்க்காவலனாக இருப்பவரின் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்களைக்
கேட்டு அலுப்புதான் மிச்சம்.//

ஹா ஹா ஹா ஹா மகனும் இதையேதான் சொல்லுகிறான் அல்லது நகைத்துச் சிரிப்பான். எனக்கு நிறைய அந்த ஊர் உங்க ஊர்க் காவலரை வைத்து நையாணி வீடீயோக்கள் அனுப்பியிருக்கிறான்.

அவனும் இதையேதான் சொன்னான் செகன்ட் வேவ் வரும்...அதன் பின் மூன்றாவது...அதற்குள் வேக்சின் வர வேண்டும் வந்துவிடும் என்றும் சொல்கிறான். அங்கு மருத்துவர் Fauci சொல்லுவதைக் காவலர் கேட்கமாட்டேன்றார் என்று. முன்னுக்கு முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று.

தொற்று தவிர மற்ற மெடிக்கல் கேர் நன்றாக பாதுகாப்பாக நடப்பது கேட்டு சந்தோஷம் அம்மா.

நல்லது நடக்கட்டும் நாம் நேர்மறையாய் சிந்திப்போம்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மூன்று பறவைகள் வேலைப்பாடு ரொம்ப அழகாக இருக்கின்றன..அப்பா செய்ததா? கண்ணைக் கவர்கிறது.

கீதா

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தேவகோட்டைஜி.
இறைவன் அருகில் இருக்கும்போது நம் கவலையை ஒதுக்கி வைப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நோய் நிலவரத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த சைட்டில் போய்ப்
பார்த்தாலே போதும். தொலைக்காட்சியைக் காண அவசியம்
இல்லை.
உங்கள் ஊரில் குறைந்திருக்கிறதா.
இனி குறைந்து மக்கள் நலம் பெறட்டும்.
காத்திருப்போம். நீங்க்ளும் ,மகளும் ,கணவரும் நலமாகப்
பத்திரமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

ஸ்ரீராம். said...

நானும் செய்திகள் பார்ப்பதைத் தவிர்க்கிறேன். யு கே யில் இந்த வருட இறுதிவரை லாக்அவுட் தொடர எண்சமிருப்பதாக குடும்ப க்ரூப் ஒன்றில் தகவல் சொன்னார்கள். எந்த அளவு உண்மையோ.. ஆனால் லாக்அவுட்டோ இல்லையோ, எல்லோரும் இன்னும் பல மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிகிறது. அதற்குள் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் நல்லது. நேற்று நம்மூர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஏதோ மருந்து கண்டு பிடித்திருப்பதாக செய்தியில் காட்டினார்கள்.

பத்திரமாக இருங்கள் அம்மா. பத்திரமாக இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அந்த ஆளு உளறுவதைச் சகிக்க முடியாதுமா.
பொய் ,புரட்டு,அறியாமை எல்லாம் சகட்டு மேனிக்குக்
கொட்டிக் கொண்டே இருப்பார்.
நாங்கள் செய்திகள் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.

ஆமாம் டாக்டர் Fauci nalla tholai nOkku uLLavar.

பார்க்கலாம் இந்தக் கூத்து எத்தனை நாளைக்கு என்று.

வல்லிசிம்ஹன் said...

மூன்று பறவைகள் ,நான் எங்கயோ எடுத்த படம். அப்பா செய்யவில்லைமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். இனிய வெள்ளி காலை வணக்கம் ராஜா.
செய்திகள் நிறைய பார்க்க வேண்டாம். குழப்பம் தான் மிஞ்சும்.
எனக்கே மருந்துகள் வாங்க வேண்டும். இந்தலாக் டௌன்
முடிந்தவுடன் மருந்துக் கடைக்கு ஃபோன் செய்ய வேண்டும். நான் பார்த்திருந்த டாக்டரும் வேறு இடம் போய்விட்டாராம்.
ஜூலை சென்னை வருவதாக இருந்த
பெண்ணும் மாப்பிள்ளையும் இப்போது போக முடியுமா தெரியவில்லை.

யாரிடம் கேட்பது. யார் இங்கே வருவார்கள் என்றும்
செய்தி கிடையாது.
பார்க்கலாம்.

நமக்கே இந்தக் கவலைகள் எல்லாம் போதும்.
நம் உடல் நலத்தில் கவனம் வைப்போம்.
பத்திரமாக இருங்கள் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கப்போகும் விபரீதங்கள் தெரிந்தாலும், வீட்டில் சற்றும்கூட வெளிக்காண்பிப்பதில்லை... இது தான் உண்மை... இயற்கை அன்னை தான் அனைவரையும் காக்க வேண்டும்...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நலமா?

உங்கள் ஊர் செய்திகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். தலைவர் சரியில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

எப்படியோ மற்ற மருத்துவ தேவைகள் பாதுகாப்புடன் கவனிக்கப்படுவது பற்றி மகிழ்ச்சி.

நீங்கள் சொல்லியிருப்பது போல் இங்கும் எல்லாமே சுத்தம் செய்துதான் பயன்படுத்துகிறோம்.

உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா

துளசிதரன்

Geetha Sambasivam said...

மனம் கலங்க அடிக்கும் செய்திகளாகவே காட்டுகின்றனர். கவலையைத் தான் அதிகமாக்குகிறது. எல்லாம் சரியாக இருந்திருந்தால் எங்க மாட்டுப்பெண் நாளை இரவு கிளம்பும் எமிரேட்ஸில் போக வேண்டும். எங்கே! இப்போத்தான் விமான சேவையே இல்லையே! அதுக்குள்ளே சரியாயிடும் என நினைச்சோம். இப்போப் பார்த்தா, ஜூன், ஜூலை என்று போகிறது. ஆண்டவன் தான் கண் திறக்கணும். :(

நெல்லைத் தமிழன் said...

இயல்பான நடையில் நடப்பதை எழுதியிருக்கீங்க. எல்லாம் கடந்துபோகும்.

இங்க தொடர்ந்து எழுதுங்க.

'வாளா' என்பதுபோன்ற வார்த்தைகளை வாசிக்கும்போது பிரமிப்பா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். வீட்டில் அவர்கள் பத்திரமாக இருக்கட்டும்.
யார் வந்தாலும் சுத்தமாக இருக்கட்டும்.

மக்களும் ,மனைவியும் உணவு மற்ற சமாசாரங்கள்
கிடைத்து விட்டால் தங்களையும் ,மற்றவர்களையும் நன்றாகவெ
கவனித்துக் கொள்வார்கள்.
வளமோடு இருப்போம்மா. நிலைமை மாறும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன் நலமாப்பா. மகன்,குடும்பத்தார் அனைவரும்
நலம் என்று நம்புகிறேன்.
செய்தி உலகம் முழுவதும் பரவிப் படிக்கக் கிடைக்கின்றன.

ஒரு செய்தியும் மனத்தில் ஒட்டுவதில்லை.
நேற்று இந்த ஆளு,, சானிடைசர் லிக்விடைக் கூட,
உடலுக்குள் ஊசி போட்டுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
என்னத்தை சொல்றது.

நீங்கள் பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இந்த நிலையில்லாத நிலைமை நம்மை நடுவில் மாட்டிப் பார்க்கிறது.
உங்கள் மாட்டுப் பொண்ணு, குட்டிக் குஞ்சுலுவை நியனித்துக் கொண்டே
இருந்தேன்.
அங்கே பத்திரமாக இருக்கட்டும்.
பயணத்தில் பல பேர் வருவார்கள். குழந்தையும் அவளும்
பாதுகாப்பாக வரவேண்டுமே.

இங்கே தம்பி மகள் பிரசவ காலத்தின் போது
தம்பி மனைவி வருவதாக இருந்தது.
ஜூலை நேரம் கொடுத்திருக்கிறார்கள். பாவம் அந்தக் குழந்தை
உதவிக்கும் ஆளில்லாமல்,
முதல் பிரசவம். திருச்சி தாயுமானவ ஸ்வாமி பார்த்துக் கொள்ளணும்.
நல்ல நாள் வரட்டும்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா. நன்றி ராஜா.
கடந்த வருடங்களில் எல்லாம் ஏதாவது நிகழ்ந்தால் உடனே பதிந்திருக்கிறேன்.
அதனால் தான் இந்த வினோத காலத்தையும்
எழுதத் தோன்றியது.
நல்ல தமிழ் அவ்வப்போது என் கைகளில்
வருகிறது.
தமிழ் ஆராய்ச்சியில் இறங்கணும் என்கிற கனவெல்லாம்
நடக்கவில்லை. நீங்கள் அதைக் கவனித்திருப்பதுதான்
அதிசயம். நன்றி மா.

துரை செல்வராஜூ said...

கண்டிப்பாக உலகம் மீளும்...
கடவுள் கை கொடுத்து அருளுவான்..

நலம் வாழ்க..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கண்டிப்பாய் மீள்வோம். நேர்மறை எண்ணங்கள் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும். இறையருள் துணை நிற்கும். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

Bhanumathy Venkateswaran said...

செய்திகள் அளிக்கும் பீதி ஒரு புறம் என்றால், எல்லோரும் தன்னை மருத்துவ மேதையாகவும், பொருளாதார நிபுணனாகவும் நினைத்துக் கொண்டு ஹேஷ்யங்களை அள்ளித் தெளித்து கலவரப்படுத்துவது இன்னொரு புறம். எனக்கென்னவோ கடவுள் அத்தனை இரக்கமற்றவர் அல்ல என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம்.  

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள் நிலமைகளை.

//கண்டிப்பாய் நாம் மீள்வோம்.
நாம் அவனை நோக்கி எழுப்பும் பிரார்த்தனைகள்
கட்டாயம் இறைவன் காதில் விழும்.//

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
பிரார்த்தனை செய்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
நமக்கிருக்கும் ஒரே பெரு வழி அவன் பாதங்களைப் பற்றுவதுதான்.
நாம் அனைவரும் அவரை நம்புபவர்கள்.
நமக்கு நல் வழி காட்டுவார். நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவருக்கு,
வணக்கங்கள்.
நலமாக இருக்க வேண்டும்.
உங்கள் வேலைகள் சிறப்புடன் பூர்த்தி செய்ய வாழ்த்துகள்.
இறை அருளால் நாம் நல்ல படியாக இந்த இக்கட்டிலிருந்து மீள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா, சரியாகச் சொன்னீர்கள்.
கணிப்பவர்களும் மனிதர்கள் தானே.
எல்லாவற்றையும் கண்டு பயந்து கொண்டிருந்தால வாழ்க்கை நடப்பதெப்படி.
நீங்கள் சொல்வது போல் இறைவன் கால்களைப் பிடித்துக் கொண்ட மார்க்கண்டேயனாக இருப்போம். நம்பிக்கை நம்மை உயர்த்தும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இறை நம்பிக்கை ஒன்றே எத்தனை இடர் வந்தாலும் காப்பாத்தும்.
நம் பிரார்த்தனைகள் நமக்காகவும் நம் மக்களுக்காகவும்.
நன்றி மா. வாழ்க வளமுடன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நம்புவோம்.
அன்பு வெங்கட்.