Blog Archive

Tuesday, March 24, 2020

ஷாந்தி மாரியப்பனின் அழைப்பு ஒரு பதிவு.


Image may contain: Shanthy Mariappan
வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
அன்பு சாரல்  ,சாந்தி மாரியப்பன், அழைத்து அவரவர்களின் பெயருக்கான காரணத்தைச்  சொல்ல வைத்தார்.
நானும் எதோ எழுதினேன் .
கீழே  பெயர்பொறுத்தியவர்களையும் அழைத்தேன்.
வலையுலகில்  பொன்  யுகம் என்று கொள்ள வேண்டிய வருடங்கள் அவை.

அப்போது வந்த  பின்னூட்டங்கள் பதிவைவிட சுவாரஸ்யம்.
9 வருடங்களுக்கு முன் இட்ட பதிவு.

அனைவருக்கும் யுகாதித் திருநாள்   நன்றே விளங்க வாழ்த்துக்கள்.

அழைக்கப் பட்டவர்கள்
துளசி கோபால்,
 கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

35 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...
பேருக்கான கதை நல்லா இருக்கு..எத்தனை பேரு சேர்ந்து எத்தனை பேரு வச்சாலும் நீங்களே பேரு வச்சிக்கிட்டீங்க பாருங்க அங்க தான் நிக்கிறீங்க ஹஹஹா:)
துளசி கோபால் said...
ஆஹா..... சந்திரலேகா இப்பத்தான் வரலாறு முழுக்கத் தெரிஞ்சது:-))))))

நம்ம கயலு சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.............;-)
pudugaithendral said...
ரசிச்சேன்.
சாந்தி மாரியப்பன் said...
தொடர்ந்ததுக்கு நன்றி வல்லிம்மா..

நீங்களே பேரு வெச்சுக்கிட்டீங்களா!!.. அதுவும் அந்தக்காலத்துலயே :-))

உங்க அம்மா சொன்னதை நினைச்சு சிரிச்சேன் :-))
Geetha Sambasivam said...
இங்கேபாருங்க, எழுதிட்டேன், இவ்வளவு சுவாரசியமான கதை எல்லாம் இல்லை! :))))))
ஹுஸைனம்மா said...
//தானே அழகி தம்புரான் பொண்டாட்டி//

இதுதான் ரொம்ப சுவாரசியம்!! :-)))

நிறைய பேர், உங்களைப் போலவே, மூன்று, நான்கு பேர்கள் உள்ளதாகச் சொல்லிருக்காங்க பெயர்ப்பதிவுகளில். அந்தக்காலத்தில், ரேஷன் கார்ட், ஐடி கார்ட், பாஸ்போர்ட் இன்னபிற சமாசாரங்கள் இல்லாததால எத்தன பேர் வச்சுகிட்டாலும் பிரச்னை இல்ல.

இப்பவெல்லாம், பாஸ்போர்ட்டுக்கும், பர்த்/மேரேஜ் சர்டிஃபிகேட்டுக்கும் ஒரு எழுத்து வித்தியாசமா இருந்தாக்கூட “நீதானா அவள்”னு கேள்விமேல கேள்வி கேட்டு படுத்தி எடுத்துடுறாங்க.
Jayashree said...
அச்சா!! உங்க உபயமா Mrs Shivam பேர் பத்தி எழுத!!என்னடா திடீர்னுனு தன் பேர் பத்தி எழுதியிருக்கார்னு பாத்தேன் . எத்தனை பேரு உங்களுக்கு!! ஒண்ணையே என்னால manage பண்ணமுடியல்லை !!:)) ஜயஸ்ரீ ஜெயம்மா வாச்சு இப்ப "ஜெ" ல வந்து நிக்கறது:)))!! குழந்தை பெண் மனைவி, அம்மா, மாமியார் , பாட்டி futureகொள்ளுப்பாட்டி நு பல பெயர்கள் இன்னும் உண்டே அதை ரெண்டு பேரும் சேத்துக்க மறந்து போயிட்டேளே ரெண்டு பேரும். :))) ம்..., சந்த்ரலேகாவேறயாமா!! அட்டஹாஸமாத்தான் இருக்கு:)
வல்லிசிம்ஹன் said...
:)
முத்து வாங்கப்பா..இது ப்ரஸ்டீஜ் இஷ்யுவாகிப் போச்சேப்பா!! அதான் பெரிய டீச்சர் ஆ என்பத்ற்குள் இந்தப் பேரைச் சொல்லிவிட்டேன்.
அந்த நாட்களில் இவ்வளவு ஃபஸ் ஏதும் கிடையாது.
இப்பவும் என் பள்ளிஇறுதி சர்டிஃபிகேட்டில் என்பெயரைப் பார்க்கும் போதெல்லாம் ஒன்பது வயதில் இத்தனை யோசனை எங்கிருந்து வந்தது என்றுதான்.:))
வல்லிசிம்ஹன் said...
சரியான திரிசமன் பிடிச்ச பெண். இல்லையாப்பா. துளசி:)அந்த வால் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு.சந்திரா லேகா எல்லோரும் அதே கதை:)))
வல்லிசிம்ஹன் said...
நன்றி தென்றல்.
வல்லிசிம்ஹன் said...
ஆமாம். சாரல்.
அப்பாகிட்ட பயம் கிடையாது. அம்மாகிட்ட வம்புதான் எப்பவும்.

பாவம் அவங்க.
பிந்நாட்களில் எனக்காகக் கவலைப்பட்டதும் அவங்கதான்:)
வல்லிசிம்ஹன் said...
ரொம்பவும் நன்றி கீதா.
நீங்க எழுதறது எல்லாமே சுவாரஸ்யம்தான். இதோ படிக்கிறேன்.
ஸ்ரீராம். said...
நீங்களே வச்சிகிட்ட பெயரா...அம்மா சொன்ன பழமொழி புதுசா இருந்தது.
வல்லிசிம்ஹன் said...
ஹுசைனம்மா.பெரியவங்க கிட்ட கேட்காம தனக்குத் தானே செய்கிற முடிவுக்கு எல்லாம் எங்க வீட்ல இந்தப் பழமொழி வந்துடும்.
ஒருத்தி தாந்தான் அழகி. தனக்குத் தம்பிரான் பெண்டாட்டியாகத் தகுதி இருக்குனு பிரகடனப் படுத்தற மாதிரியோ என்னவோ. அர்த்தம் தெரியாது. அம்மா சொன்னால் மட்டும் கொஞ்சம் கோபம் வரும்:)
வல்லிசிம்ஹன் said...
அச்சா ! சொல்கிற பழக்கம் எங்க வீட்டிலயும் இருந்தது. ஏதாவது சந்தோஷம்னால் அச்சா அச்சானு ஒரே குதிதான். ;)
என்னவோ பட்டம் வராட்டாலும் பேர்களாவது வந்ததே அதைச் சொல்லுங்கொ ஜயஷ்ரீ:)
வல்லிசிம்ஹன் said...
வரணும் ஸ்ரீராம். நானே வச்சுக்கலை. அவ்வளவு புத்திசாலி இல்லை. ரேவதி நட்சத்திரம். ரேவதின்னு வச்சாச்சு. அதை சரியான சமயத்தில கையில எடுத்துக் கொண்டு விட்டேன்:)
அப்பாவி தங்கமணி said...
பெயர் வெச்ச கதை சூப்பர் வல்லிம்மா... நாலு பேரா உங்களுக்கு...எல்லாமும் தனி அழகோட இருக்கு..... எனக்கு "ஆண்டாள்" ரெம்ப பிடிச்ச பேர்..."ரேவதி"யும் அழகாவே இருக்கு...:))

(your writing has that nostalgic touch which creates interest in readers...not everyone is blessed with that...great...:)
அப்பாதுரை said...
பலே.
"தானே அழகி தம்புரான் பொண்டாட்டி" எங்கள் வீட்டிலும் நிறைய சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
அப்பாதுரை said...
caption இப்பத்தான் கவனிச்சேன். கலக்கறீங்க போங்க.
வல்லிசிம்ஹன் said...
அன்பு புவனா, உங்கள் காம்ப்ளீமெண்ட்ஸ் என்னை ஏதோ செய்கிறது. இந்த அன்புக்கு மிகவும் நன்றி.
இதற்குத் தகுதி உள்ளவளாக ஆக்கிக் கொள்ள இன்னும் முயற்சிக்கிறேன்.எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன்.
வல்லிசிம்ஹன் said...
caption உபயம் துரை:)
தான்கீஸ் பா.
தம்பிரான் என்பது மலையாளம்னு நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும் கேரளா பார்டர் நெல்லையில் பழகியவர்கள் தானே. தம்பிரான் என்பவருக்கு மனைவி ஆனதாலியே, தான் அழகின்னு ஒரு பெண் நினைத்துக் கொண்டாளோ என்னவோ:))அம்மா என்னைக் கண்டிக்க உபயோகிக்கும் சொற்கள் இவை.:)))
கோலா பூரி. said...
பெயர் காரணம் ரொம்ப சுவாரசியமா சொல்லி ருக்கீங்க.தானே அழகி தம்ப்ரான் பெண்டாட்டி இதெல்லாம் எங்க ஊர்பக்கம் பேசும் பேச்சு கேட்டே வர்ஷக்கணக்காச்சு. இப்ப உங்க மூலமா
படிக்க சுவாரஸ்யம்.
Unknown said...
//அதென்ன தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம் என்று அலுத்துக் கொண்டார்.//

ஹ ஹ ஹா

சுவாரஸ்யமான பகிர்வு வல்லிம்மா..!
அப்பாவி தங்கமணி said...
`` எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன்``

Wow...nice to know Amma...கண்டிப்பா பேசுவோம்... நன்றி..,,:)
தக்குடு said...
பால்கோவா! திரட்டிப்பால்! தூத்பேடா!னு எத்தனை பேர் வெச்சாலும் அந்த வஸ்துவோட மதுரமான சுவை மாறாத மாதிரி நம்ப சந்த்ரலேகா மாமி மன்னிக்கவும்! சிங்கத்தோட தம்புராட்டியான வல்லிம்மா பெயர் காரணம் ப்ரமாதம்!..;)))
மாதேவி said...
சுவாரஸ்யமாக இருக்கிறது.அறிந்து கொண்டோம்.:)
வல்லிசிம்ஹன் said...
வாங்க வசந்த்
சிரிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேனா:)
நன்றிமா.
வல்லிசிம்ஹன் said...
வாங்க கோமு. உங்க ஊரு வழ்க்கம்னால் அது எந்த ஊருன்னு சொல்லலியே:)
அநேகமா சங்கரன் கோவிலோ,நெல்லையோ. இல்லை;))
நன்றி மா.
வல்லிசிம்ஹன் said...
ஆஹா, தக்குடு மனசு வைத்தால் உருகாத பேரும் உண்டோ. தம்பிரான் கிட்டயே சொல்லிடறேன்.:)
இப்படிக்கு லேகை தம்புராட்டி:)
வல்லிசிம்ஹன் said...
வாங்க மாதேவி.அனுபவைச்சுப் படிச்சீங்களா. நன்றி மா./
அன்புடன் அருணா said...
ரொம்ப சுவாரஸ்யம்!
வல்லிசிம்ஹன் said...
ஆஹா . அருணா. நீங்க வந்து சொன்னதே வெகு சுவாரஸ்யம்.
நன்றி மா.
கோமதி அரசு said...
பாட்டியின் பேர் நல்லா இருக்கு.(வேங்கடவல்லி)

நீங்கள் வைத்தபேர் மிகவும் நல்லா இருக்கு.

என்னை அழைத்ததற்கு நன்றி.

எழுதுகிறேன் விரைவில்.
Matangi Mawley said...
Mam! :) romba romba romba thanks! sorry, munnaadiye ezhutha mudiyala inga vanthu... ippo post-um pottaachchu... athaan vanthu paarkarathukku azhaippu kodukkaren! enakku rombave pidichchuthu, intha post... very interesting... :)
ராமலக்ஷ்மி said...
//ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.//

சுவாரஸ்யம் வல்லிம்மா:)!

7 comments:

நெல்லைத் தமிழன் said...

அந்த லிங்க் எங்க?

பின்னூட்டமிட்டவர்களில் 90% இப்போ காணலியே

கோமதி அரசு said...

உங்கள் அழைப்பில் நானும் எழுதினேன்.
நீங்கள் சொல்வது போல அது ஒரு வசந்த காலம், பொன் யுகம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா.
அதை நாளை பதிவிடுகிறேன். அப்போது. இது போலத்தான் ஒருவரை ஒருவர் அழைத்துப
பதிவுகள் பெருகும் கீதாவும் எழுதினார்கள்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
ஆமாம் நினைவிருக்கிறது. எத்தனை பாசம் எல்லோரிடமும் இருந்தது. இப்போதும் அது தொடர்வதற்கு
நாம். ஆரம்பித்த நேரம் காரணம். நன்றி இந்த நட்புக்கு.

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.... நாங்கள் கூட எழுதினோம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு வெங்கட்.
எனக்குத் தெளிவாக நினைவில்லை. 2011ஆம் வருடம்.

மாதேவி said...

இனிய காலம். நினைவு கொண்டது மகிழ்ச்சி.