Blog Archive

Thursday, March 24, 2011

பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)



அன்பு  சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)
நன்றி  மா

அம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.

தாயார் வீடு  சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு  புதிதாகப் பிறந்த பேத்தியின்
மீது  மிகுந்த  பாசம்.
புண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.
நெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்
 சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள்.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்தார்.
புரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற
ஏற்பாடு செய்து  வீடு களை கட்டியது.
அம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.
அம்மாவின் அத்தை,மாமாக்களும் அங்கே.
சேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.

முத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.
''ஆமாம் முதல்  குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்
கவனிக்கணும்.
 இதுவும்  சின்னக் குழந்தையத்தான் இருக்கு.
பரவாயில்லை  தேத்தி விட்டுடலாம். ''
தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு
 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.
ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.
இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல
ஒரு சின்னக் குழந்தை.

பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.
 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்
அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""
என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு
தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.
அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!
அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்
ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.

மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்
வெளிவந்தது.

அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.
ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.
வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ
தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.

கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற
ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு
மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்
 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.
எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு
என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)
ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.
பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்
தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.
அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.
தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்
அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.
பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்
வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.
அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.

''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.

இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''
 இருக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.
திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.
ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான
கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!

பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு
முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.
பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)

மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த
நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்
நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))

என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))

இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை
அழைக்கிறேன்.
ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.

அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''
அன்பு  துளசிகோபால்
அன்பு  கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

35 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேருக்கான கதை நல்லா இருக்கு..எத்தனை பேரு சேர்ந்து எத்தனை பேரு வச்சாலும் நீங்களே பேரு வச்சிக்கிட்டீங்க பாருங்க அங்க தான் நிக்கிறீங்க ஹஹஹா:)

துளசி கோபால் said...

ஆஹா..... சந்திரலேகா இப்பத்தான் வரலாறு முழுக்கத் தெரிஞ்சது:-))))))

நம்ம கயலு சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.............;-)

pudugaithendral said...

ரசிச்சேன்.

சாந்தி மாரியப்பன் said...

தொடர்ந்ததுக்கு நன்றி வல்லிம்மா..

நீங்களே பேரு வெச்சுக்கிட்டீங்களா!!.. அதுவும் அந்தக்காலத்துலயே :-))

உங்க அம்மா சொன்னதை நினைச்சு சிரிச்சேன் :-))

Geetha Sambasivam said...

இங்கேபாருங்க, எழுதிட்டேன், இவ்வளவு சுவாரசியமான கதை எல்லாம் இல்லை! :))))))

ஹுஸைனம்மா said...

//தானே அழகி தம்புரான் பொண்டாட்டி//

இதுதான் ரொம்ப சுவாரசியம்!! :-)))

நிறைய பேர், உங்களைப் போலவே, மூன்று, நான்கு பேர்கள் உள்ளதாகச் சொல்லிருக்காங்க பெயர்ப்பதிவுகளில். அந்தக்காலத்தில், ரேஷன் கார்ட், ஐடி கார்ட், பாஸ்போர்ட் இன்னபிற சமாசாரங்கள் இல்லாததால எத்தன பேர் வச்சுகிட்டாலும் பிரச்னை இல்ல.

இப்பவெல்லாம், பாஸ்போர்ட்டுக்கும், பர்த்/மேரேஜ் சர்டிஃபிகேட்டுக்கும் ஒரு எழுத்து வித்தியாசமா இருந்தாக்கூட “நீதானா அவள்”னு கேள்விமேல கேள்வி கேட்டு படுத்தி எடுத்துடுறாங்க.

Jayashree said...

அச்சா!! உங்க உபயமா Mrs Shivam பேர் பத்தி எழுத!!என்னடா திடீர்னுனு தன் பேர் பத்தி எழுதியிருக்கார்னு பாத்தேன் . எத்தனை பேரு உங்களுக்கு!! ஒண்ணையே என்னால manage பண்ணமுடியல்லை !!:)) ஜயஸ்ரீ ஜெயம்மா வாச்சு இப்ப "ஜெ" ல வந்து நிக்கறது:)))!! குழந்தை பெண் மனைவி, அம்மா, மாமியார் , பாட்டி futureகொள்ளுப்பாட்டி நு பல பெயர்கள் இன்னும் உண்டே அதை ரெண்டு பேரும் சேத்துக்க மறந்து போயிட்டேளே ரெண்டு பேரும். :))) ம்..., சந்த்ரலேகாவேறயாமா!! அட்டஹாஸமாத்தான் இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

:)
முத்து வாங்கப்பா..இது ப்ரஸ்டீஜ் இஷ்யுவாகிப் போச்சேப்பா!! அதான் பெரிய டீச்சர் ஆ என்பத்ற்குள் இந்தப் பேரைச் சொல்லிவிட்டேன்.
அந்த நாட்களில் இவ்வளவு ஃபஸ் ஏதும் கிடையாது.
இப்பவும் என் பள்ளிஇறுதி சர்டிஃபிகேட்டில் என்பெயரைப் பார்க்கும் போதெல்லாம் ஒன்பது வயதில் இத்தனை யோசனை எங்கிருந்து வந்தது என்றுதான்.:))

வல்லிசிம்ஹன் said...

சரியான திரிசமன் பிடிச்ச பெண். இல்லையாப்பா. துளசி:)அந்த வால் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு.சந்திரா லேகா எல்லோரும் அதே கதை:)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். சாரல்.
அப்பாகிட்ட பயம் கிடையாது. அம்மாகிட்ட வம்புதான் எப்பவும்.

பாவம் அவங்க.
பிந்நாட்களில் எனக்காகக் கவலைப்பட்டதும் அவங்கதான்:)

வல்லிசிம்ஹன் said...

ரொம்பவும் நன்றி கீதா.
நீங்க எழுதறது எல்லாமே சுவாரஸ்யம்தான். இதோ படிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

நீங்களே வச்சிகிட்ட பெயரா...அம்மா சொன்ன பழமொழி புதுசா இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா.பெரியவங்க கிட்ட கேட்காம தனக்குத் தானே செய்கிற முடிவுக்கு எல்லாம் எங்க வீட்ல இந்தப் பழமொழி வந்துடும்.
ஒருத்தி தாந்தான் அழகி. தனக்குத் தம்பிரான் பெண்டாட்டியாகத் தகுதி இருக்குனு பிரகடனப் படுத்தற மாதிரியோ என்னவோ. அர்த்தம் தெரியாது. அம்மா சொன்னால் மட்டும் கொஞ்சம் கோபம் வரும்:)

வல்லிசிம்ஹன் said...

அச்சா ! சொல்கிற பழக்கம் எங்க வீட்டிலயும் இருந்தது. ஏதாவது சந்தோஷம்னால் அச்சா அச்சானு ஒரே குதிதான். ;)
என்னவோ பட்டம் வராட்டாலும் பேர்களாவது வந்ததே அதைச் சொல்லுங்கொ ஜயஷ்ரீ:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். நானே வச்சுக்கலை. அவ்வளவு புத்திசாலி இல்லை. ரேவதி நட்சத்திரம். ரேவதின்னு வச்சாச்சு. அதை சரியான சமயத்தில கையில எடுத்துக் கொண்டு விட்டேன்:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பெயர் வெச்ச கதை சூப்பர் வல்லிம்மா... நாலு பேரா உங்களுக்கு...எல்லாமும் தனி அழகோட இருக்கு..... எனக்கு "ஆண்டாள்" ரெம்ப பிடிச்ச பேர்..."ரேவதி"யும் அழகாவே இருக்கு...:))

(your writing has that nostalgic touch which creates interest in readers...not everyone is blessed with that...great...:)

அப்பாதுரை said...

பலே.
"தானே அழகி தம்புரான் பொண்டாட்டி" எங்கள் வீட்டிலும் நிறைய சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

அப்பாதுரை said...

caption இப்பத்தான் கவனிச்சேன். கலக்கறீங்க போங்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவனா, உங்கள் காம்ப்ளீமெண்ட்ஸ் என்னை ஏதோ செய்கிறது. இந்த அன்புக்கு மிகவும் நன்றி.
இதற்குத் தகுதி உள்ளவளாக ஆக்கிக் கொள்ள இன்னும் முயற்சிக்கிறேன்.எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

caption உபயம் துரை:)
தான்கீஸ் பா.
தம்பிரான் என்பது மலையாளம்னு நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும் கேரளா பார்டர் நெல்லையில் பழகியவர்கள் தானே. தம்பிரான் என்பவருக்கு மனைவி ஆனதாலியே, தான் அழகின்னு ஒரு பெண் நினைத்துக் கொண்டாளோ என்னவோ:))அம்மா என்னைக் கண்டிக்க உபயோகிக்கும் சொற்கள் இவை.:)))

கோலா பூரி. said...

பெயர் காரணம் ரொம்ப சுவாரசியமா சொல்லி ருக்கீங்க.தானே அழகி தம்ப்ரான் பெண்டாட்டி இதெல்லாம் எங்க ஊர்பக்கம் பேசும் பேச்சு கேட்டே வர்ஷக்கணக்காச்சு. இப்ப உங்க மூலமா
படிக்க சுவாரஸ்யம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//அதென்ன தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம் என்று அலுத்துக் கொண்டார்.//

ஹ ஹ ஹா

சுவாரஸ்யமான பகிர்வு வல்லிம்மா..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

`` எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன்``

Wow...nice to know Amma...கண்டிப்பா பேசுவோம்... நன்றி..,,:)

தக்குடு said...

பால்கோவா! திரட்டிப்பால்! தூத்பேடா!னு எத்தனை பேர் வெச்சாலும் அந்த வஸ்துவோட மதுரமான சுவை மாறாத மாதிரி நம்ப சந்த்ரலேகா மாமி மன்னிக்கவும்! சிங்கத்தோட தம்புராட்டியான வல்லிம்மா பெயர் காரணம் ப்ரமாதம்!..;)))

மாதேவி said...

சுவாரஸ்யமாக இருக்கிறது.அறிந்து கொண்டோம்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க வசந்த்
சிரிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேனா:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமு. உங்க ஊரு வழ்க்கம்னால் அது எந்த ஊருன்னு சொல்லலியே:)
அநேகமா சங்கரன் கோவிலோ,நெல்லையோ. இல்லை;))
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, தக்குடு மனசு வைத்தால் உருகாத பேரும் உண்டோ. தம்பிரான் கிட்டயே சொல்லிடறேன்.:)
இப்படிக்கு லேகை தம்புராட்டி:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க மாதேவி.அனுபவைச்சுப் படிச்சீங்களா. நன்றி மா./

அன்புடன் அருணா said...

ரொம்ப சுவாரஸ்யம்!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா . அருணா. நீங்க வந்து சொன்னதே வெகு சுவாரஸ்யம்.
நன்றி மா.

கோமதி அரசு said...

பாட்டியின் பேர் நல்லா இருக்கு.(வேங்கடவல்லி)

நீங்கள் வைத்தபேர் மிகவும் நல்லா இருக்கு.

என்னை அழைத்ததற்கு நன்றி.

எழுதுகிறேன் விரைவில்.

Matangi Mawley said...

Mam! :) romba romba romba thanks! sorry, munnaadiye ezhutha mudiyala inga vanthu... ippo post-um pottaachchu... athaan vanthu paarkarathukku azhaippu kodukkaren! enakku rombave pidichchuthu, intha post... very interesting... :)

ராமலக்ஷ்மி said...

//ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.//

சுவாரஸ்யம் வல்லிம்மா:)!