Blog Archive

Monday, March 23, 2020

ஒரு பழைய கதை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் ..
ஒரு பழைய கதை.



கண்ணன், பாண்டவர்களைப் பார்க்க வனத்திற்கு வந்தாராம்.
அப்போது பாண்டவர்கள் குளிக்க ஏதுவாக ஒரு பெரிய பாண்டத்தில் தண்ணீர்
 கொதிக்க வைக்க திரௌபதி அடுப்பில் தணல் சேர்த்துக்கொண்டு இருந்தாளாம்.
சிறிய நேரம் கழித்து சோதித்தால் தண்ணீர் சூடாகவே இல்லை.
மற்றவர்கள் தொட்டுப் பார்த்தால் சுடவில்லையாம்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதென்ன அதிசயம்!!அக்கினி சூழ எரிகிறது,, தண்ணீர் கொதிக்கவில்லையே என்று கிருஷ்ணனைப் பார்த்தார்களாம்.
அவன் சிரிக்கிறான்.
அந்தத் தண்ணீரைக் கீழே கொட்ட சொல்லுகிறான்.
ஒரு தவளை கொட்டிய தண்ணீரிலிருந்து குதித்து
ஓடுகிறது.
''என்ன பண்ணுவது த்ரௌபதி?
நீ ஊற்றிய தண்ணீரில் இருந்த தவளை முன்னாலேயே என்னைச் சரண் அடைந்துவிட்டது.
அதைக் காப்பாற்ற
அக்கினியின் தன்மையை மாற்றிவிட்டேன் ''என்றானாம்.
பஜனை செய்வோம் கண்ணன் நாமம்!

19 comments:

ஸ்ரீராம். said...

கண்ணன் நம்மைக் காக்கட்டும்.

Geetha Sambasivam said...

கண்ணனின் பாதாரவிந்தங்களே சரணம்!

வெங்கட் நாகராஜ் said...

நலமே விளையட்டும்.

அவன் பாதம் சரணடைவோம். நல்லதே நடக்கும்.

KILLERGEE Devakottai said...

நம்பினோர் கைவிடப்படார்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

துரை செல்வராஜூ said...

அவனே கதி..
அவனது திருவடிகளே சரணம்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கோமதி அரசு said...

நம்மையும் இந்த இடரிலிருந்து காக்க வேண்டும் கண்ணன்.

கோமதி அரசு said...

ராதே சியாம் காணொளி அருமை.

மாதேவி said...

கண்ணன் நம்மையும் காக்கட்டும். அவன் பாதம்பணிவோம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
அவனை மட்டுமே நம்ப முடியும்.
அவனே கதி.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் கீதாமா.
கண்ணன் நம்மோடுதான்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட்.
மக்கள் புத்திசாலித்தனத்தோடு இருக்கவும் அவனே
துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
உண்மையே, நம்மை அறிந்தவன் அவன் ஒருவனே.
நம்மைக்காக்க வேண்டிய பொறுப்பும் அவனுடையதே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை இனிய காலை வணக்கம்.

முழு மனதுடன் சரணமடைந்தவர்களை,
அவன் என்றும் கைவிடுவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
தினம் வரும் செய்திகள் சஞ்சலப் படுத்தினாலும்
அவன் சரண் நம்மைக் காக்கும். பாடலை
கண்டு ரசித்ததற்கு நன்றி மா.

Thulasidharan thilaiakathu said...

எங்கும் நலமே விளையட்டும் அம்மா..

கீதா