Blog Archive

Friday, March 20, 2020

என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
இப்போது கொஞ்சம் பாஹுபலி பைத்தியம் பிடித்திருக்கிறது:)

காதுகளுக்கு கவசம் போட்டுக்கொண்டு எல்லாப் பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
படம் வந்தபோது  பார்க்கவில்லையான்னு 
கேள்வி  வந்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இங்கிருப்பவர்கள் நெட் ஃ ப்ளிக்சிசில்   பார்த்துக் கொண்டிருந்த மனம் அதில் லயிக்கவில்லை.

சிங்கம்  சொல்லுவார். உனக்கு எல்லாமே தாமதமாகத் தான் புரியும் 
என்று.

கொஞ்சம் மந்தம் தான்.:)

10 comments:

ஸ்ரீராம். said...

பதினாறு வருடங்களுக்குப் பின்னர் நான் தியேட்டரில் சென்று பார்த்த படம்! அதுவும் இரண்டாம் பாகம் மட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் , இனிய காலை வணக்கம். இந்தப் பதிவின்
உள்ளடக்கம் ,அரவம்,அதாவது அந்தப் பேர் சொல்லாதது.
இந்தப் பாட்டைச் சேர்த்ததும் முழுப்பதிவும் மறைந்தது பெரிய சோகம்.
மீண்டும் எழுதப் போகிறேன்.
இரண்டாம் பகுதிதான் ஒரு தூக்கம் வராத இரவில் பார்த்தேன்.
நன்றாக இருந்தது.

என்ன ஒரு இசை. .அந்தக் கீரவாணியின் இசை மந்திரம் உலுக்குவது போல அமைந்திருக்கிறது.
நன்றி மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது ஆங்கிலத் திரைப்படமான க்ளியோபாட்ரா நினைவிற்கு வந்தது.

ஜீவி said...

//என் படம் வந்தபோது.. //

ஏன் படம் வந்த பொழுது ..

(உங்கள் படம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுமே என்பதினால்..)

//கொஞ்சம் மந்தம் தான்.:) //

நீங்களே ஒத்துக் கொண்டாலும் இல்லை என்பது என் அனுபவம். நான் எவ்வளவு தான் கோர்த்து வாங்கி எழுதினாலும் 'டக்'கென்று புரிந்து கொள்கிற முதல் நபர் நீங்கள் தான் :))

கோமதி அரசு said...

பாட்டு கேட்டேன் மீண்டும். காட்சி அமைப்பு அற்புதம்.
படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
நன்றாக எடுத்திருக்கிறார்கள், கதை என்று பெரிதாக இல்லை, கொஞ்சம் மஹாபாரதம், கொஞ்சம் ராமாயணம் மாதிரி நினைவுக்கு
வந்தது.
பெரிய பெரிய செட்,. வீர தீர பராக்கிரமம்.
க்ளியோபாட் ரா நினைவுக்கு வந்தது , நல்ல பாராட்டு,.
க்ளீயோ ரோம் நகரில் நுழைவது எவ்வளவு பெரிய காட்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார். நன்றி மிக நன்றி.
அந்த எழுத்துபிழை ,என் அவசரத்தால் வந்தது.
மாற்றி விடுகிறேன்.

நான் கண்டு பிடிக்கிறேனா.இல்ல சார்.
அவ்வளவு உன்னிப்பு போதாது.
அந்த எழுத்து ஈர்த்தால் உடனே பின்னூட்டம் இடும்
அவசரம் எப்பொழுதும் உண்டு.
நன்றி ஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. உங்களை நினைத்துக் கொண்டேன் இந்தக் கதை ஆரம்பிக்கையில்.

இரண்டாம் பாகம் இப்போதுதான் பார்க்கிறேன்.
மிகப் பிடித்தது. நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா... நானும் படம் தியேட்டரில் சென்றெல்லாம் பார்க்கவில்லைம்மா... ஊருக்கு வந்திருந்தபோது தொலைகாட்சியில் 120-வது முறையாக போடும்போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்!

வல்லிசிம்ஹன் said...

வெங்கட்,
நீங்களும் பார்த்தீர்களா.
அவ்வளவு தடவையா தொலைக்காட்சியில்
காண்பித்தார்கள்?
அட பரவாயில்லையே.:)