எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
இப்போது கொஞ்சம் பாஹுபலி பைத்தியம் பிடித்திருக்கிறது:)
காதுகளுக்கு கவசம் போட்டுக்கொண்டு எல்லாப் பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
படம் வந்தபோது பார்க்கவில்லையான்னு
கேள்வி வந்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இங்கிருப்பவர்கள் நெட் ஃ ப்ளிக்சிசில் பார்த்துக் கொண்டிருந்த மனம் அதில் லயிக்கவில்லை.
சிங்கம் சொல்லுவார். உனக்கு எல்லாமே தாமதமாகத் தான் புரியும்
என்று.
கொஞ்சம் மந்தம் தான்.:)
நேற்று ''எங்கள் ப்ளாக் '' தளத்தில் பாம்புகள் பற்றிய
சம்பாஷணைகள் சுறுசுறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.
அதற்கு கொஞ்ச நேரம் முன் தான் ,என்ன செய்வதென்று தெரியாமல்,
வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்த
பேரனை அழைத்து கதை எதாவது சொல்லட்டுமா ராஜா.
என்று கேட்டதற்கு, பாட்டி நிஜமா நடந்தது
சொல்லு. அமர்சித்ரா எல்லாம் படித்தாச்சி.
என்று அலுத்துக் கொண்டான்.
சிரிப்புதான் வந்தது. பெரிய பெரிய சரித்திர, கிரேக்க மைதாலஜி, மந்திர மாயம் படிப்பவனுக்கு நான் என்ன
சொல்வது.
எப்படியாவது அவன் கவனத்தை ஈர்க்க வேண்டும் .
என் மனத்தில் எப்பவோ நடந்தது,கனவோ நனவோ என்கிற
மாதிரி ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது .
கேளு, அப்போ பாட்டிக்கு எட்டு இருக்கும்.
அப்போதெல்லாம் திருமங்கலம் என்ற ஒரு கிராமத்தில் இருந்தோம்.
கோடை காலத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு பந்தல் கீழே பாய் விரித்துப்
படுத்துக் கொள்வோம்.
தாத்தா கதை சொல்ல அப்படியே தூங்கி விடுவோம்.
அப்போது பாதி இரவில் எதோ சீறும் சத்தம் கேட்டு விழித்தேன்.
எங்களுக்குப் பின் இருந்த திண்ணையின் மேல்
ஒரு லிப்டன் டீ பொட்டி இருக்கும்..
அதன் மேல் ஒரு பழுப்பு நிற நாகம் படம் எடுத்தபடி என்னைப் பார்த்தபடி இருந்தது.
எழுந்து உட்கார்ந்தேனா என்று கூட நினைவில்லை.
அசைவில்லாமல் தூங்கி விட்டேனா என்றும் புரியாமல்
அம்மாவை எழுப்பினேன்.
அழுதபடியே திரும்பிப் பார்த்தால் அங்கே எதுவும்
இல்லை.
படபடக்கும் என்னை அம்மா சமாதானப்
படுத்தியதும்,
காலையில் அப்பா கிட்ட சொல்லி, சங்கர நாராயணர் கோவிலுக்குப் பணம் அனுப்பியதும்
நடந்த சங்கதி. அன்று இரவு நான் வெளியே படுத்துக்க கொள்ள மறுத்ததும்
எல்லோரும் வாயில் கதவை அடைத்துவிட்டு, வாயிலை நோக்கி இருந்த ஜன்னலையும் மூடிவிட்டு,
ஒரு சந்தன் மேஜை விசிறியைப் போட்டுக் கொண்டு
தூங்கியதும் பின்னால் மிகழ்ந்தது.
ஏன் அது போல நடந்தது.
அது நிஜமா கனவா என்பதே இன்னும் எனக்கு கலவரமான
நினைவாக இருக்கிறது.
இதை எவ்வளவு காமெடியாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லி முடித்தேன்.
அவன் என்ன கண்டானோ. சிரித்தபடி இருந்தான்.
கொசுறாக பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒரு கோட்டி கிணறு
இருந்ததையும்,
நான் படு வேகமாக அதைத் தினம் கடந்ததையும்
சொல்லி, அதை அப்படியே அவன் கற்பனை செய்து
பார்த்து , மீண்டும் மீண்டும் சிரித்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++
1985இல் நான் ம் ஒரு , முகம் பார்த்து ஜோதிடம் சொல்லும் ஒருவரைச் சந்தித்தேன்.
அவர் முதலில் என்னைக் கேட்டது
உங்களுக்கு மூன்று குழந்தைகள் தானா. நாலாவது எங்கே என்றாரே
பார்க்கணும்.
நான் பெற்றது மூன்றுதான் என்று சொன்னாலும் நம்ப மறுத்தார்.
சரி அது போகட்டும்,
உங்கள் அம்மா வழியில் யாராவது பாம்பை அடித்துக் கொன்றிருக்கிறார்களா என்று என்னைத் தூக்கி வாரி அடிக்கும்படி இன்னொரு கேள்வி கேட்டார்.
அவர்கள் கிராமத்தில் விவசாயம் பார்த்தவர்கள் தான்.
வயலில் எதாவது முடித்திருக்கலாம்.
என் வரை வரவில்லை. எனக்குத் தெரியாது என்றேன்.
இல்லை அது போல நடந்திருக்கு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டி இருக்கும் என்றார்.
பிறகு எதோ பூஜை செய்து ஒரு சுருக்குப் பையில் வெள்ளி உருவம் கொடுத்துக் கடலில் வீசிவிடச் சொன்னார்.
நானும் செய்தென்.
அதற்குப் பிறகு நான் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தன.
மிகச் சங்கடமான நாட்கள்.
++++++++++++++++++++++++++++++++++
இன்னும் அவைகளை எந்தக் கோணத்திலிருந்து பார்ப்பது என்று புரியவில்லை.
இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
10 comments:
பதினாறு வருடங்களுக்குப் பின்னர் நான் தியேட்டரில் சென்று பார்த்த படம்! அதுவும் இரண்டாம் பாகம் மட்டும்.
அன்பு ஸ்ரீராம் , இனிய காலை வணக்கம். இந்தப் பதிவின்
உள்ளடக்கம் ,அரவம்,அதாவது அந்தப் பேர் சொல்லாதது.
இந்தப் பாட்டைச் சேர்த்ததும் முழுப்பதிவும் மறைந்தது பெரிய சோகம்.
மீண்டும் எழுதப் போகிறேன்.
இரண்டாம் பகுதிதான் ஒரு தூக்கம் வராத இரவில் பார்த்தேன்.
நன்றாக இருந்தது.
என்ன ஒரு இசை. .அந்தக் கீரவாணியின் இசை மந்திரம் உலுக்குவது போல அமைந்திருக்கிறது.
நன்றி மா.
இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது ஆங்கிலத் திரைப்படமான க்ளியோபாட்ரா நினைவிற்கு வந்தது.
//என் படம் வந்தபோது.. //
ஏன் படம் வந்த பொழுது ..
(உங்கள் படம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுமே என்பதினால்..)
//கொஞ்சம் மந்தம் தான்.:) //
நீங்களே ஒத்துக் கொண்டாலும் இல்லை என்பது என் அனுபவம். நான் எவ்வளவு தான் கோர்த்து வாங்கி எழுதினாலும் 'டக்'கென்று புரிந்து கொள்கிற முதல் நபர் நீங்கள் தான் :))
பாட்டு கேட்டேன் மீண்டும். காட்சி அமைப்பு அற்புதம்.
படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
அன்பு முனைவர் ஐயா,
நன்றாக எடுத்திருக்கிறார்கள், கதை என்று பெரிதாக இல்லை, கொஞ்சம் மஹாபாரதம், கொஞ்சம் ராமாயணம் மாதிரி நினைவுக்கு
வந்தது.
பெரிய பெரிய செட்,. வீர தீர பராக்கிரமம்.
க்ளியோபாட் ரா நினைவுக்கு வந்தது , நல்ல பாராட்டு,.
க்ளீயோ ரோம் நகரில் நுழைவது எவ்வளவு பெரிய காட்சி.
அன்பு ஜீவி சார். நன்றி மிக நன்றி.
அந்த எழுத்துபிழை ,என் அவசரத்தால் வந்தது.
மாற்றி விடுகிறேன்.
நான் கண்டு பிடிக்கிறேனா.இல்ல சார்.
அவ்வளவு உன்னிப்பு போதாது.
அந்த எழுத்து ஈர்த்தால் உடனே பின்னூட்டம் இடும்
அவசரம் எப்பொழுதும் உண்டு.
நன்றி ஜி.
அன்பு கோமதி மா. உங்களை நினைத்துக் கொண்டேன் இந்தக் கதை ஆரம்பிக்கையில்.
இரண்டாம் பாகம் இப்போதுதான் பார்க்கிறேன்.
மிகப் பிடித்தது. நன்றி மா.
ஹாஹா... நானும் படம் தியேட்டரில் சென்றெல்லாம் பார்க்கவில்லைம்மா... ஊருக்கு வந்திருந்தபோது தொலைகாட்சியில் 120-வது முறையாக போடும்போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்!
வெங்கட்,
நீங்களும் பார்த்தீர்களா.
அவ்வளவு தடவையா தொலைக்காட்சியில்
காண்பித்தார்கள்?
அட பரவாயில்லையே.:)
Post a Comment